இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?

‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும். ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள்.  (உலகில் இருக்கும் ஏராளமான மதங்களைப்போன்று யூதமும் ஒன்று. ஆனால் சியோனிசம் என்பது யூதர்களைத்தவிர அனைவரும் கீழானவர்கள் என்றும், பாலஸ்தீன நிலத்தில் யூதர்களைத்தவிர மற்ற எவரும் வாழக்கூடாது என்று சொல்கிற ஒரு இனவெறித்தத்துவம்). அதனால் பாலஸ்தீனத்தில் […]

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் தொடங்கிய போர் சிரியாவோடு முடிந்துவிடுமா அல்லது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தப்பணிகளா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் தேடும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்…. உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் பல்வேறு […]

திப்பு சுல்தான்: காலனிய எதிர்ப்பின் பெருமைமிகு வரலாறு!

“நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல… அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத, கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நாம் பெற்ற பாக்கியம்.”

தாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா?

தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன… முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.

நாம் அடிமைப்பட்ட கதை – ச.தமிழ்ச்செல்வன்

1757 துவங்கி, அடுத்த நூறாண்டுகளும் சதிகளும், துரோகங்களும், போர்களும், உடன்படிக்கைகளுமென நீண்டது நம் அடிமைச் சங்கிலிகளின் கிண்கிணி ஒலி.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் – அச்சம் தரும் அரசியல் முனைவாக்கம்

சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் ஒரு அச்சந்தரும் அரசியல் முனைவாக்கத்தின் (Polarisation) வெளிப்பாடாக கருதுகிறேன். இந்த மாநிலமானது மன்னர் ஹரிசிங்குடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இந்தியாவின் ஒரு அங்கமாக ஆனதிலிருந்து பிரச்சனைதான். நாம் செலுத்தும் வரியில் கணிசமான பகுதி பாதுகாப்புச் செலவுக்காக இந்த மாநிலத்திற்கு செலவிடப்படுகிறது. குடிசார் நிர்வாகம் (Civil Governance) என்ற நிலையில்லாமல் ராணுவத் தலையீடு அதிகம் உள்ள மாநிலமாகவும் இருக்கிறது. ராணுவம் என்றாலே மக்கள், தங்களுடைய குடிசார் உரிமையை (Civil Rights) இழக்க […]

ஜீவா எனும் ஆளுமை

கேரளத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது நாஞ்சில் நாடு (கிட்டத்தட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்). 1956 வரை இது கேரளத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. அப்பொழுது கேரளமும் குமரி மாவட்டமும் சேர்ந்து திருவாங்கூர் சமஸ்தானம் என அழைக்கப்பட்டது. ஒரு நீண்ட வர்ணாசிரம நம்பிக்கை கொண்ட மன்னர்கள் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்ததன் விளைவாக வர்ணாசிரம அடிப்படையிலான வழக்கங்களும், பாரம்பரியங்களும், கல்வி முறையும் ஆழமாகக் கால் ஊன்றி நின்றன. இதன் விளைவாக அன்கு சாதீய அமைப்பு மிக உறுதியாகவே இருந்தது. புத்த மதம், […]

டெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் !

20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு‍ மடங்கு‍ பெரிய நகரம் டெட்ராய்ட்.  அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் 18 லட்சம் (1.8 million) மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர். இந்நகரம் திவாலானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று‍ம் உதவி […]