ராஜபட்ச வருகையில் என்ன பிழை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். அவர்கள் இதனை ‘ஜனநாயகத்தின் கொண்டாட்டம்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கோ, அரசியல் ரீதியிலான சந்திப்புக்கோ ஒரு நாட்டின் பிரதிநிதி இந்தியா வருவதில் தவறில்லை, விழாவில், கொண்டாட்டத்தில் பங்கெடுக்க இலங்கை ஜனாதிபதி எதற்காக அழைக்கப்பட […]

மார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல்

இந்த திறந்த மடலை வாசித்து ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள், பின்னூட்டத்தில் தங்கள் விபரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம். இந்திய பிரஸ் கவுன்சில் என்னும் அமைப்பு 1978 பிரஸ் கவுன்சில் சட்டம் “ஊடக சுதந்திரத்தை காப்பாற்றும் பொருட்டும், ஊடகங்களில் தரத்தை உயர்த்துவதற்காகவும் பிரஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டது.” என்று அறிவிக்கின்றது தொழிலாளர்கள் பேரணி குறித்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தது தொடர்பாக மார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல் 13.12.13 ம் தேதியிட்ட தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூ […]

கீழ வெண்மணி – சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம்!

இதே தமிழகத்தில்தான் டிசம்பர் 25 தேதியும் வந்தது. ‘கீழ வெண்மணி’ படுகொலைகளை – மறந்துவிட முடியுமா? “அந்த கிராமத்து ஏழைகள் அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டது ஒரு குற்றம். கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் வர்க உணர்வோடு, சுயமரியாதை உணர்வும் பெற்று எதிர்க்கத் தொடங்கிவிட்டது மற்றொரு குற்றம். இதனை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறியும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கமுமே, 3 வயது குழந்தை உட்பட 40 மனிதர்களை உயிருடன் எரிக்கச் செய்தது” இந்தியாவெங்கும் வர்கச் சுரண்டலும், சாதி ஆதிக்க […]

வாழவே நாம் போராடுகிறோம் ! (தலையங்கம் 2)

கடந்த 3 தினங்களில் 3 விதமான தியாகங்களை நாம் நினைவு கூர்ந்தோம். முதலாவது தோழர் நீலவேந்தனுடையது, இரண்டாவது இலங்கைப் போராளி திலீபனது, மூன்றாவது புரட்சியாளர் பகத்சிங்கினுடையது.
மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்ட அளவில் இந்த ‘உயிர்த் தியாகங்கள்’

‘தந்தை பெரியார்’ காலாவதியாக வேண்டும் !

தலைப்பு உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனால், அதுதான் ‘தந்தை பெரியாருக்கு’ அர்த்தமுள்ள நினைவு கூறலாக அமைந்திடும்.

அவர் சாதீயத்துக்கு எதிராக சுயமரியாதையை முன்நிறுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை புகட்டினார். பெண் விடுதலைக்கு உண்மையான குரல்கொடுத்த மனிதராக இருந்தார். பெரியார் விரும்பிய மாற்றங்கள் இங்கே ஓரளவு நடந்திருக்கின்றன.