கெளரவமாகிறது கொலை . . . . . . ! கழுத்தறுபட்டு சாகிறது காதல் . . . . . !

”மத்த ஸ்டேட் மாதிரியெல்லாம் கிடையாதுங்க”, ”தமிழ்நாடு இந்த விஷயத்துல ரொம்ப முன்னேறிடுச்சி” என்று பேசித்திரியும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்கிறோம் என்று சொல்லித் திரியும் தமிழ்நாட்டில், நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் உடுமலையில் நிகழ்ந்தேறியுள்ளது. கடந்த வருடத்தின் எண்ணிக்கையான 43-ல் மேலும் ஒன்று என்று கடந்து போக முடியாத அளவிற்கு விமலாதேவி, கண்ணகி-முருகேசன், கோகுல்ராஜ், இளவரசன் என ஏதோ ஒரு வகையில் தொடர்கதையாகிக் கொண்டே வருகிறது. சாதி மறுத்து காதல் […]

ஜல்லிக்கட்டு, ஒழிய வேண்டும் …

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு பற்றிய கூச்சல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு என்பது வீரத்த தமிழனின் பாரம்பர்யக் கலை என்றும் அநியாயமாக நீதிமன்றம் தலையிட்டு நிறுத்திவிட்டது என்று குற்றஞ்சாட்டுவதோடு, ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு அடுத்தகட்சிதான் காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. நான் இந்தக் கூச்சலிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன். காளையை என்ன அதைவிட பெரிய மிருகமான யானையையும், கொடிய மிருகமான சிங்கத்தையும் அடக்கியவன் மனிதன். […]

சேஷசமுத்திரம்: மீண்டும் எரிந்த குடிசைகள் – நேரில் விசாரித்த குறிப்புகள்

திட்டமிட்டபடி இரவு 7.15 மணிக்கு சேஷசமுத்திரம் கிராமத்திற்கு மின்சாரம் தந்த டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அனைத்து தெரு மின்விளக்குகளும் உடைக்கப்பட்டது. அடுத்து தேர் மற்றும் 7 வீடுகளுடன் 7 மோட்டார் சைக்கிள், 2 ஜெனரேட்டர் கொளுத்தப்படுகிறது. தீ வைக்க பயன்படுத்தப்பட்டது பெட்ரோல் வெடிகுண்டுகள். அலட்சியத்தோடு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் …

என் தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். ஆனாலும் இறுதிவரை சாதி ஆச்சாரங்களைக் காப்பதிலும் பெண்ணடிமைத்தனத்தை சரியாகப் பேணுவதிலும் ”சிறந்த குடும்பத் தலைவராக” இருந்தார். அவர் எந்த சாதி சங்கத்திலும் எப்போதும் சேர்ந்திருந்ததில்லை எனும் போதிலும், அவர் மறைவின் போது வந்திருந்த ஆண்களும் பெண்களும் என் தந்தையின் பெருமையாகக் கருதி சிலாகித்தது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த ஆச்சாரத்தை எனும்போது எனக்கு அதிர்ச்சியாகக் கூட இருந்தது.

நடைமுறையில் உள்ள சாதியமைப்பையும், அதன் ஒடுக்குமுறையையும் புரிந்துகொள்வது

வரலாற்றில் இப்போதிருப்பது போன்று சாதி என்றுமே எதிர்கொள்ளும் அளவுக்கு எளிதாக இருந்ததில்லை. சாதி ஒழிப்புக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், சரியான திட்டத்தோடு இந்த நேரத்தில் தயார்நிலையில் இருப்பார்களேயானால், வரலாற்றுரீதியான சாதி ஒழிப்பு திட்டமென்பது வெற்றியை எட்டும் தருணம் விரைவாக கைகூடி வரும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்- சில கேள்விகளும் பதில்களும்

எந்த நாட்டிலும் இல்லாத சாதியும் அதன் பேரில் நடக்கும் கொடுமைகளும் இந்தியாவின் அவமானச் சின்னமாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

ஜனநாயகத்தின் ஆட்டம்!

தலித்துகள் தங்கள் துன்பத்திற்கு காரணியாக பிரமாணனையே நோக்க எதிர்ப்பார்க்கப் படுகின்றார்கள். எதார்த்தத்தில், முற்போக்கு முகமூடி அணிந்தவர்கள்தான் தலித் மக்களை கொலை செய்யும், பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரர்களை உருவாக்குகின்றனர்.

“தனியார்மயப்படுத்தலும், தனியார் துறையில் தலித்துகளின் பிரச்சனையு‌ம்” – தேசியக் கருத்தரங்கு

1990களில் தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்து அவை இந்திய மக்களின் வாழ்க்கைமுறையை வெகுவாக பாதித்துள்ளது. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு போன்ற பணிகளிலிருந்து அரசு பின்வாங்கிக் கொண்டு தனியார், வெளிநாட்டு முதலாளிகளின் கையில் இவற்றையெல்லாம் கொடுத்து விட்டது. இதனால் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. 2010ல் உலகவங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 32.7% மக்கள் சர்வதேச வறுமைக்கோட்டு அளவீடான நாளொன்று 1.25அமெரிக்க டாலருக்கு (உத்தேசமாக 75 ரூபாய்) கீழேயும், 68.7% மக்கள் 2அமெரிக்க […]

பிச்சையிடப்பட்டதல்ல தலித் மக்களின் உரிமை!

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930 டிசம்பரில் தீண்டப்படாதவர்களுக்கு எட்டுத் தடைகளை விதித்தனர். இந்தத் தடைகள் மீறப்பட்டதால் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கள்ளர்கள் கடும் வன்முறையைப் பயன்படுத்தினர்.

இழிவுக்கு முடிவுகட்ட நீங்கள் தயாரா??!

(மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்திற்கு இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் முடிவுகட்ட முடியவில்லை. இக்கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கும்போது, நாம் என்ன சாதித்தும்தான் என்ன? …