அரசியல்

பேருந்து கட்டண உயர்வு . . . . . . . தனியார்மயத்தை நோக்கி பொதுப்போக்குவரத்து . . . . . . . ?

விண்ணைத் தொடும் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், விலைவாசி, இட நெருக்கடி, தண்ணீர் தட்டுப்பாடு இதற்கு நடுவில் தான் நடுத்தர வர்க்கத்தின் அடித்தளத்திலிருப்பவர்கள் தங்களின் அன்றாட பிழைப்பிற்காக வெகு தொலைவில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

வேலைக்காகவும், கல்விக்காகவும்  தினம் தினம் இவர்கள்  பொதுப் போக்குவரத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். இன்னும் காலூன்றிக் கொள்ளாத இளைஞர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள், பார்வை அற்றோர்கள் என ஒரு நகரின் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் பொதுப் போக்குவரத்தைத் தான் நம்பியிருக்கிறார்கள். சொந்தமாக வண்டி அல்லாதவர்களுக்கு ஒரே வழி பஸ் மட்டுமே.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி பேர் அரசு பேருந்தில் பயணம் செய்கின்றார்கள். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3200 பேருந்துகள் தினமும் இயக்கப் படுகின்றன. இதில் சுமார் 42 லட்சம் பேர் பயணம் செய்கின்றார்கள். சாதரண பஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், வால்வோ என பல வகையான பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நகருக்கு அருகமையில் இருக்கும் புறநகர சாதாராண ஏழை, எளிய மக்கள் அரசு பேருந்ந்துகளை நம்மியே உள்ளனர். ஆனால் தற்போது பேருந்து கட்டண உயர்வானது முன்பு இல்லாத அளவிற்கு  50 % முதல் 60% வரை அதிகரித்துள்ளதால் மக்கள் செய்வதரியாது திகைப்பில் உள்ளனர். அண்றாடம் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிச் செல்லும் மணவர்கள் என எல்லா தரப்பு மக்களுக்கும் பெரும் அச்சுரத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கட்டண உயர்வு.

போக்குவரத்துக் கழங்கள் தமிழக பொருளாதார மேம்பாட்டிலும், ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்கும், தனிநபர் சராசரி வருமானத்திற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற மனித மேம்பாட்டு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. இதனால் சமுதயதிற்கு கிடைக்கிற லாபமானது அளவிட முடியாதது.

குறிப்பாக தமிழகத்தின் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட பேருந்துகளே முக்கிய காரணியாக இருக்கிறது. ஆம்.. வெகு தொலைவிலிருந்து பல லட்ச  மாணவர்களை இழித்துக் கொண்டு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வந்ந்துச் சேர்த்த்தில் பேருந்துகளின் பங்கு முக்கியமானது. ஆனால் தற்போது இந்த கட்டண உயர்வால் மாணவர்களுக்கு கல்வி கணவுகள் தகர்க்கப்படும் அபாயமும் உள்ளது.

அரசின் அலட்சியமே கட்டண உயர்விற்கு காரணம்:

பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது உண்மையில்லை. 1972-யில் பொது சேவை தொடங்கப்பட்ட காலங்களில் ஒரு நாளின் சாராசரி வருமானம் வெறும் 2 லட்சம் ரூபாய். 2013 இல் 2 கோடியே 83 லட்சம் ரூபாய். பயணிகளின் எண்ணிகை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை 3 மடங்குதான். அதிலும் 10 சதவீத பெருந்துகள் பழுதாகி முடங்கிவிட்டன.

சென்னை நகரப் பேக்குவரத்துகளை இயக்கத் தேவையான ஓட்டுநர்கள் சுமார் 6000 பேர். ஆனால் 5000 பேர்தான் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள் 2014 வரையில்.

ஆறாண்டிற்கு பிறகு தற்போது தான் கட்டண உயர்வுப் பெற்றுள்ளது, வாகன உதிரிபாகங்கள் வாங்க, பேக்குவரத்தை மேம்படுத்த, அரசிற்கு கடன் சுமை குறைக்க என பல விளங்களை அளித்தாலும். இது அரசின் தவறான அணுகுமுறை எனவும் கட்டண உயர்வு இதற்கு சரியான திர்வு கிடையாது எனவும் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிப்பது போல போக்கு வரத்து துறைக்கும் 3000 கோடி ஓதுக்கினால் இந்த நிலைமையை போக்கிவிடலாம் ஆனால் அரசு அதற்கு செவிச் சாய்க்க மறுக்கிறது எனவும் மக்களிடமிருந்து பணப் பெற்று கடன் சுமைகளை குறைப்பது என்பது அரசின் திறமையற்ற தனத்தை காண்பிக்கிறது என இட்துசாரிகளும் தொழிற்ச்சங்களும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாதரண இரு சக்கர வாகனத்திற்கு காப்பீடு  செய்யவில்லை என்றால் வாகனச் சட்டப்படி  அபராதம் விதிக்கும் அரசு, பொதுப் போக்குவரத்திற்கு என எந்த வித காப்பீடும் இதுவரை செய்யப்படுவதில்லை. ஆனால் நம் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் பொது போக்குவரத்திற்கு காப்பீடு இருப்பது குறிப்பிட தக்கது. இதனால் தான் விபத்துகள் நேரிடும் போதோ அசம்பாவிதங்கள் நடைப் பெரும்போது அதற்கான உரிய இழைப்பீட்டை அரசால் வழங்க முடிவதில்லை. அரசு மக்கள் மீது வைத்துள்ள அக்கரையின்மையை காட்டுகிறது.

திணறல்:

மத்திய பாஜக அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு என தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகயால் பெரிதும் பாதித்து வந்த மக்களுக்கு தற்போது பஸ் கட்டண உயர்வு என்பது ”வெந்த புண்ணில் வேல பாச்சுவது” போன்றது.

சாதாரணமாக ஒரு பேருந்துகளில் 72 பேர் (உட்காருபர் 48 + நிற்பவர்கள் 24) பயணிக்கலாம் ஆனால் அண்றாடம் அடிப்பட்டு மிதிப்பட்டு குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டுமே என மக்கள் பேருந்ந்துகளில் நிறம்பி வழிவதை தினம் தோறும் நாம் பார்க்க முடிகிறது. எங்கு செல்ல வேண்டுமென்றாலும் பேருந்துகளை நம்மியே சாமானிய மக்கள் கூட்டம் அலை மொதிக்கிறது.

பேருந்து நல்ல சேவகனாக மட்டுமல்லாமல் இவர்களுக்கு உற்ற தோழனாகவும் இருந்து வந்த்து. இன்று பேருந்து கட்டண உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியினை சந்தித்து வருக்கின்றனர்.

பொதுமக்கள் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை இரயிலில் பயணம் செய்ய பழகிவிடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ரயிலில் பயணிப்பவர்கள் 7% லிருந்து 10 % அதிகரித்துள்ளனர் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் ரயில் சேவையை நாடியுள்ளதால் குறிந்த நேரத்திற்கு அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்ல முடியாமல் மக்கள் திணருகின்றனர்.

போக்குவரத்து என்பது ஒரு சேவை துறையாக மட்டுமே அரசு பார்க்க வேண்டும் . அதன் நஷ்ட்த்தை அரசு குறைத்து கொள்ள முயற்ச்சிகளாமே தவிர லாப நோக்கிற்காக இயக்க வைப்பது தவறானது.  அரசின் அதிகார பூர்வ இனையதளங்களில் கூட போக்குவரத்து சேவை என்ற பிரிவில்தான் இன்னமும் இருக்குகிறது. ஆகவே போக்குவரத்து மக்களின் நலன்களுக்கும் வளச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று.

தமிழக அரசின் இது போன்ற தவறான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க போக்குவரத்தை தனியாரிடம் தாரைவாத்து கொடுக்கும்  முயற்ச்சியே. போக்குவரத்து துறை தனியாரி கொடுத்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் கட்டணம் நிர்னைத்து அதிக வசூல் வரும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்குவார்கள். பல கிராமங்களுக்கு போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்படும். இதனால் கிராமபுற மக்களின் வாழ்வாதரம் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் கல்வி தகர்க்கப்படும்.

கல்வி, மருத்துவம் எப்படி தனியாரிடம் சென்று இன்று அதன் தனித்துவத்தை இழந்து வெறும் லாப நோக்கிற்க்காக மட்டுமே இயக்கி வருகிறதோ அதே போல பொது போக்குவரத்தானது அந்நிலைக்கு தள்ளபடமால் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

– வசந்தி பாரதி

 

 

Related Posts