அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 6)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1
நம்பிக்கைவாதி 2
நம்பிக்கைவாதி 3
நம்பிக்கைவாதி 4
நம்பிக்கைவாதி 5

தேசியப் புலனாய்வுக் கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை மேலதிகாரி சூபிரண்டன்ட் ஆஃப் போலீஸ் விஷால் கார்க் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவரின் எதிரில் ‘அஜ்மீர்குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா குண்டுவெடிப்பு’.’சுனில்ஜோஷி கொலை’ மற்றும் ‘எழுதுபொருள்கள்’ என்று தலைப்பிடப்பட்ட நான்கு இழுப்பறைகள். விஷால் கார்க்-ன் மேசையின் பின்பக்கம் உள்ள ஒரு வெண்பலகையில் கார்க் புலனாய்வு அதிகாரியாக உள்ள சம்ஜுதா மற்றும் அஜ்மீர் வழக்கு களின் நீதிமன்ற விசாரணைத் தேதிகள் இடம்பெற்றுள்ளன. இன்னொரு சுவரில் இன்றுவரை காணாமல்போயுள்ள சந்தீப்டங்கே, ராம்சந்திர கல்சங்கரா படங்களுடன் ‘வாண்டட்’ சுவரொட்டி. டாங்கேயையும், கல்சங்கராவையும் கைதுசெய்யத் தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.10,00,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது கார்க் சொன்னார், ‘நாங்கள் இங்கே ஆருஷி வழக்கை அடிக்கடி மேற்கோள் காட்டுவோம். குற்றம் நடந்த மூன்று நாட்களுக்குப்பின் அந்த வழக்குக் கொடுக்கப்பட்டு சி.பி.ஐ. குற்றம் நடந்த இட்த்திற்குச் சென்றது. நீங்களே கற்பனைசெய்து பாருங்கள். எவ்வளவு ம்திப்புமிக்க தடயங்கள் தொலைந்திருக்கும் என்று.’ தீவிரவாதச்செயல்களை எதிர்கொண்டு ஒடுக்கும் ஐ.பி.எஸ்.அதிகாரியாக, கண்ணில் அணிந்திருக்கும் கண்ணாடியில் மேலிருந்து கீழாகப்பார்த்தபோது, ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தார் கார்க். ‘குற்றம் நடந்த மூன்றுஆண்டுகளுக்குப்பின் சம்ஜுதா வழக்கை எடுத்துக்கொண்டோம். இந்தப்புலனாய்வு எங்களுக்கு எவ்வளவு சிக்கலாக இருக்கும் என்பதை நீங்கள் நினைத்துப்பாருங்கள்.’ என்று சொன்னார்.’

கார்க் தொடர்ந்தார், ‘இதுவரை இதில் நடைபெற்ற பணப்பரிமாற்றத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில், வங்கி மூலமான பணப்பரிமாற்றங்களாகவோ அல்லது எழுத்து மூலமானதாகவோ இல்லை. புலனாய்வின் வரம்புஇது என நீங்கள் சொல்லலாம். அசீமானந்தா சுனில் ஜோஷியிடம் பணம்கொடுத்தார் என்பது எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் எவ்வளவு என்பது தெரியவில்லை. இந்தக்குண்டு வெடிப்புக்களில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது இன்னும் விசாரணையில் உள்ளது.’ ‘வாண்டட்’ சுவரொட்டியைச் சுட்டிக்காட்டிய கார்க், ‘ரூ.10,00,000 என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இளைஞர்கள் இந்தக் குற்றத்தின் மூளையாகவும், செயல்படுத்தியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதுபற்றிய ஒரு தெளிவான சித்திரத்தைக் காண நாங்கள் அவர்களைப் பிடிக்கவேண்டியுள்ளது.’

என்.ஐ.ஏ. ஏராளமான தடைகளைச் சந்தித்துவருகிறது. 2012 ஜூலையில் சுனில்ஜோஷி கொலையில் பிரக்யாசிங்-ஐ என்.ஐ.ஏ. குறுக்குவிசாரணை செய்வதை-இந்தவழக்கின் எஃப்.ஐ.ஆர்.(முதல் தகவல் அறிக்கை) என்.ஐ.ஏ.வின் தோற்றத்திற்குமுன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற தொழில்நுட்பக் காரணத்தின் அடிப்படையில்-உச்ச நீதிமன்றம் தடுத்து விட்ட்து. குற்றம்சாட்டப்பட்ட இன்னொருவரான லெப்டினன்ட்.கர்னல்.ஸ்ரீராம்புரோஹித் ஐ விசாரணை செய்வதையும் தடைசெய்துள்ளது. என்.ஐ.ஏ.வின் குற்றச்சாட்டுவழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான அஹமது படேல் எல்லா வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து,ஒரே நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினார். ஆனால், இதுபற்றிய அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

என்.ஐ.ஏ. மேலும்பல சதியாளர்களின் பெயர்களைச் சேர்த்துத் துணைக்குற்றப்பத்திரிக்கையை விரைவில் தாக்கல் செய்வோம் என்கிறது. கார்க் மிகவும் கடுமையாக வேலைசெய்து வருவ தாகச் சொன்னார். ’சென்றவாரம் எனது உதவியாளர்களில் ஒருவர் லிஃப்டில் என்னைச் சந்தித்து,’சார்,இன்று நீங்கள் மிகவும் அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்கள்’ என்றார் ;‘நான் அவரிடம் நீங்களும்கூடத் தூக்கத்தை விட்டுவிட்டால் ஸ்மார்ட் ஆகத் தோன்று வீர்கள் என்றேன்’ எனப் பலமாகச் சிரித்தார். பிறகு அவர்,ஒருமுறை தனது மேலதிகாரி தான் தூங்கினால் தன்னால் சந்தேகிக்கப்படுபவர்களைக் கனவில்கண்டுதேடிப்பிடிக்க நல்லநேரத்தைக் காணமுடியும் என்று அடிக்கடி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றார்.

இந்திரேஷ் குமாரை இதுவரை என்.ஐ.ஏ. ஏன் கேள்விக்குட்படுத்தவில்லை? என்று நான் கேட்டபோது,, ‘அது உள்விஷயம். அதைப்பற்றி விவாதிக்க்க்கூடாது’ என்றார் கார்க்.

2008ல் பிரக்யாசிங் கைதுசெய்யப்பட்டதும் பி.சிதம்பரம், திக்விஜயசிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ‘காவி பயங்கரம்’ என்று குற்றம்சாட்டத் துவங்கினார்கள். ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி.தலைவர்கள் இந்தக்கறையிலிருந்து தங்கள் அமைப்புப்க்களைப் பாதுகாத்துக்கொள்ள முதலில் குற்றவாளிகளைக் கண்டிக்கவும், பிறகு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் விரைந்தார்கள்.
பிரக்யாசிங் கைதைத் தொடர்ந்து பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் உமாபாரதி, ‘நான் அதிர்ச்சி அடைந்தேன். பிரக்யாசிங்குக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பி.ஜே.பி.யும், அதனுடைய பிற எல்லா அமைப்புக்களும் விலகிச்செல்வது வெட்கக்கேடானது. அவர்களுக்குத் தேவைப்பட்டபோது பிரக்யாசிங்கைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.’ என்றார். இதை மறுத்த பி.ஜே.பி.யின் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத், ‘அவரைச் சொந்தம் கொண்டாடுவது அல்லது விலக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.ஏனெனில் பிரக்யாசிங் ஏ,பி,வி,பி,யைவிட்டு 1995-96 லேயே விலகிவிட்டார்’ என்றார். ஆனால், பிரக்யாசிங், பி.ஜே.பி.தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோருடன் இருந்த சமீபத்திய புகைப்படங்கள் வெளியிடப் பட்டபோது அந்தக்கட்சி தர்மசங்கட்த்துக்குள்ளானது. இன்னொருபடம் குஜராத் கலவரங்க ளுக்குப்பின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் நரேந்திர மோடியுடன் பிரக்யாசிங் மேடையில் வீற்றிருந்ததைக் காட்டியது.

பிரக்யாசிங் சித்திரவதை செய்ய்ப்பட்டார் என்ற புகார் எழுந்ததும் பி.ஜே.பி தனது நிலையை மாற்றிக்கொண்ட்து. எல்.கே.அத்வானி, பிரக்யாசிங்மீது நடைபெற்றது ‘காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை’ என்று கண்டனம்செய்தார். அரசியலால் ஏவிவிடப்பட்ட புலனாய்வு அமைப்பு தொழில் நெறி சாராதவகையில் செயல்படுவது தெளிவாகிவிட்டது என்றும் கூறினார்.(அரசியல் அறிஞர் பானுபிரதாப் மேத்தா, ‘எல்.கே.அத்வானி கடந்த தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட கலைநயமற்ற, உணர்ச்சிவசப்பட்ட போக்கில் இப்போது எதுவும் குறைந்துவிடாமல் பிரக்யாசிங்கைப் பாதுகாப்பதிலும் இருந்தது’ என்று பின்னர் விமர்சனம் செய்தார்.)

2010 நவம்பரில் அசீமானந்தா கைதுசெய்யப்படுவதற்கு ஒன்றரை வாரத்திற்குமுன் இந்தப் புலனாய்வில் இந்திரேஷ்குமார் பெயர் அடிபட்டுப் பத்திரிக்கைகளில் இடம்பெற்றபோது ஆர்.எஸ்.எஸ். தனது கடுமையான எதிர்ப்பைப் பொதுஇடத்தில் (அதன் வரலாற்றில் மிகவும் பெரிய ஒன்றாக)காட்டியது. சங்அமைப்பின் மூத்த தலைவர்கள் நாடுதழுவிய அளவில் எதிர்ப்பைத் தலைமைதாங்கி நட்த்தினார்கள். ‘ஆர்கனைசர்’ இதழின்படி நாடுமுழுவதும் 700 இடங்களில் நடைபெற்ற தர்ணாக்களில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணிமேடைகளில் ஆர்.எஸ்.எஸ். .வி.ஹெச்.பி.யின் ஒட்டுமொத்தத் தலைவர்களும் காணப்பட்டனர். லக்னோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட்த்தில் மோகன்பகவத் இந்திரேஷ்குமாரைப் பாதுகாக்கத் தாமே நேரடியாகக் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அழுத்திக்கூறினார். ‘இந்த அமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக சர்சங்சாலக் தர்ணாவில் கலந்துகொண்டது மட்டுமல்ல, கூட்டங்களிலும் பேசுவது ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு பயங்கர வாதத்தை இணைக்கும் இரகசியத்திட்டம் உருவாகிவருவதால்தான்.’ என்றார். அந்தமேடை மோகன்தாஸ் காந்தியின் முகம் கொண்ட பெரிய படத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பகவத் மேலும் கூறினார், ‘ஹிந்துசமாஜ், காவிநிறம் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் என்ற எல்லாச் சொற்களும் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கு எதிரான அர்த்தம் கொண்டவை’.

குண்டுவெடிப்புக்களில் இந்திரேஷ்குமாரின் பங்கைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் அரிய தகவல்களையும், சாட்சியங்களையும் சி.பி.ஐ. மற்றும் ஏ.டி.எஸ். புலனாய்வுகள் முன்வைத்தன. என்.ஐ.ஏ.வின் குற்றப்பத்திரிக்கை இந்திரேஷ்குமார்தான் இரகசிய சதிகளில் ஈடுபட்ட முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் (குறிப்பாக சுனில்ஜோஷிக்கு) அனுபவம்மிக்க, நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்தார் எனக்குறிப்பிட்ட்து. 2011 ஜூலை பிற்பகுதியில் சி.பி.ஐ. அவரைக் குறுக்குவிசாரணை செய்தது. என்.ஐ.ஏ.வும் கூட இந்திரேஷ்குமாரை விசாரிக்கப்போவதாகப் பெருமளவுக்குப் பேசப்பட்டது. ஆனால், இந்திரேஷ்குமார் ஏற்கனவே புலனாய்வுக்குழுக்களின் மீது பத்திரிக்கைகளில் வசைமாரி பொழிந்துகொண்டிருந்தார்.

‘பயங்கரவாதச் செயல்களில் எனக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் என்.ஐ.ஏ.விடம் இருக்குமானால் அது ஏன் என்னைக் கைதுசெய்யவில்லை?’ என்ற அவர், பிரக்யாசிங், அசீமானந்தா ஆகியோருடன் தாமும் தவறாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டார். என்.ஐ.ஏ. இன்னும் அவரை விசாரிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.-ம், பி.ஜே.பி.யும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நடைபெற்றுவரும் புலனாய்வுகள்எல்லாம் காங்கிரஸ் தலைமையிலான அரசால் நடத்தப்படும் சூனியக்காரவேலை என்று வர்ணிக்கப் பயன்படுத்திக்கொண்டன. இதுஉண்மை என்றால், இந்தவழக்குகள் அரைமன தாகக் கையாளப்படுவதைப்பார்க்கும்போது, அரசுக்கு இந்தக்குழுக்களின்மீது என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற ஆச்சரியத்தை எழுப்புகிறது.

சென்றஆண்டு நான் இந்திரேஷ் குமாரைப் பேட்டி கண்டபோது, பத்திரிக்கையாளர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல்பற்றி மட்டுமே கேள்விகள் கேட்கிறார்கள். அவர்கள், இந்த அமைப்பின் சமுதாயத்திற்கான முன்னெடுப்புக்களின்மீது ஆர்வம் காட்டுவதில்லை என்று முறையிட்டார். ‘பிறகு அவர்கள் அந்தக் கேள்விகளை மட்டும் அச்சிட்டு எங்கள் பணிகளைப் பற்றிய செய்திகளைக் கொலை செய்துவிடுகிறார்கள்’ என்றார். இப்போது ஊடகங்கள் சங்போன்ற பன்முகப்பட்ட அமைப்புக்களைப் புறக்கணித்தது தவறு என்று மெதுவாக உணரத் துவங்கியிருக்கின்றன என்றும் கூறினார். குண்டுவெடிப்பில் அவரது பங்குபற்றி எங்களது உரையாடல் மாறியபோது, ‘என்னைப்பற்றி அவர்கள் எழுதும்போது, அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன்’ என்றார் அவர். அவரது குரல் சண்டைக்குரலாக ஒலித்தது. பின்னர் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மோகன்பகவத்தும், அவரும் வாழ்த்துக்கள் சொன்ன கூட்டத்தைப்பற்றிக் கேட்டபோது அவர் முற்றிலும் மௌனமாகிப்போனார். மோகன்பகவத் அலுவலகம் அவர்கள் கருத்தைத் தெரிவிக்க மின்னஞ்சல் அனுப்புமாறு என்னிடம் சொன்னது. ஆனால் இந்தக்கட்டுரை அச்சுக்குச் செல்லும்வரை அவர்களிடமிருந்து எந்தப் பதிலுமில்லை.

ஜனவரி 24 வெள்ளியன்று ஹரியானா மாநிலம், பஞ்ச்குளாவில் உள்ள என்.ஐ.ஏ.சிறப்பு நீதிமன்றத்தில் சம்ஜுதா வெடிகுண்டு வழக்கில் அசீமானந்தாமீது குற்றச்சாட்டுக்கள் தொகுக்கப் பட்டன. அம்பாலா சிறையில் மூன்றுஆண்டுகள் கழித்தபிறகு, 31 மாதங்கள் சட்ட விசாரணைக்குப்பின் இறுதியாக அவர்மீதான விசாரணை ஜெய்பூரில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன் றத்திற்குச் செல்கிறது. அவர் 2013செப்டம்பர் முதல் அஜ்மீர் வழக்கில் விசாரணையில் இருந்து வருகிறார். மெக்காமசூதி வழக்கில் அவர்மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை. கடந்த நவம்பரில் இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக அசீமானந்தா விசாரணை செய்யப்பட ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

2008 மாலேகான் குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாக உள்ள பிரக்யாசிங் பம்பாய் உயர்நீதி மன்றத்தை – என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டவிதம் பற்றி ஆட்சேபிப்பதற்காக அணுகி யுள்ளார். அவர் தான் புற்றுநோயால் அவதிப்படுவதாகவும், போபாலில் உள்ள ஆயுர்வேத மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தாக்கல்செய்த பல்வேறு ஜாமீன் மனுக்களையும் என்.ஐ.ஏ. எதிர்த்துவருகிறது.

இந்த்த்தருணத்தில் மேலும்பல ஆண்டுகளுக்கு விசாரணை இழுத்தடிக்கப்படும் என்று தோன்றுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாகி வருவதற்கு இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒருவர்மீது ஓருவர் குறைகூறி வருகிறார்கள். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பஞ்ச்குளா நீதிமன்றத்திற்குச் சென்றுவந்தபோதிலும் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படும்வரை குறிப்பிடத் தக்க செய்திகள் ஏதுமில்லை.

அம்பாலாவில் அசீமனந்தா சிறப்பு ‘பி’ வகுப்புஅறையில் ராம்குமார் சௌத்திரி என்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருடன் (இவர் 2012 நவம்பரில் ஹரியானாவில் 24 வயதுப் பெண்ணைக் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்) இருந்துவருகிறார். இவர்கள் இருவரும் ஒரு சமையல்காரரைத் தங்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் இருவரும் இரவு நேரத்தில்மட்டுமே பூட்டிய அறையில் வைக்கப்படுகிறார்கள்.

2014 ஜனவரியில், எங்களது கடைசிப்பேட்டியின்போது, அசீமானந்தா என்னிடம் கொஞ்சம் டீ குடிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்பே ஒரு ஒல்லியான பதின்வயதுச் சிறுவன் –சில்லறைக் குற்றங்களுக்காகச் சிறைக்காவலில் உள்ளவன்- எனது கைகளில் இனிப்பான டீ நிறைந்த பிளாஸ்டிக் கப்பைத் திணித்தான். அசீமானந்தா அவனைத் தன் அருகில் இழுத்து, ‘இவன் எனது சிறுவன். விரைவில் விடுதலையாகி விடுவான்’ என்றார். அந்தப் பதின்வயதுச் சிறுவனின் முகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னார் ;’ இந்த டீக்காரன் நரேந்திரமோடி அளவுக்கு வளர்ச்சி பெறுவான்’.

எங்கள் நேர்காணல்களின்போது சிறைஅதிகாரிகள் அசீமானந்தா எப்படி இருக்கிறார் என்று கேட்டுச்செல்ல அடிக்கடி வந்து நின்று செல்வார்கள். ’அவர்கள் எல்லாரும் என்னிடம் ‘எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருங்கள்’ என்று சொல்வார்கள்’ என்றார் அசீமானந்தா. நடந்தது எதுவானாலும் நல்லதே. ’இதை நான் செய்தேனா? இல்லையா? என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், யார் அதைச் செய்திருந்தாலும், சரியானதைத்தான் செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்’ என்றார்.

மேற்குவங்கத்தில் உள்ள அசீமானந்தாவின் காமர்பூர் கிராமத்திற்கு நான் சென்றபோது அவரது குடும்பத்தினர் என்னிடம் பேசவே மறுத்தார்கள். ஆனால், நான் அங்கிருந்து திரும்பும் போது அசீமானந்தாவின் இளைய சகோதரர் சுசாந்த் என்னிடம், ‘இன்னும் சிலமாதங்கள் பொறுத்திருங்கள். மோடிஜீ ஆட்சிக்கு வந்ததும், எங்கள் கிராமத்தின் நடுவில் ஒருமேடையை அமைத்து, ஒலிபெருக்கியில் ‘இவை எல்லாம் அசீமானந்தாவால் நடந்தவை’ என்று சத்தமிட்டுச் சொல்வேன்’ என்றார்.

எங்கள்சந்திப்புக்களில் ஒன்றில் அசீமானந்தா, நாதுராம்கோட்சேவின் கடைசிவார்த்தைகளைச் சுட்டிக்காட்டினார்;’எனது எலும்புகள் கடலில் கரைக்கப்படாமல் இருக்கட்டும், மீண்டும் சிந்துநதி இந்தியாவின் வழியாகப் பாயும்வரை.’ அசீமானந்தா, தன்மீதான விசாரணைகள் நீண்டகாலம் எடுத்துக்கொண்டாலும் ‘உறுதியாக விடுதலை ஆவேன்’ என்று பூல்சந்த் பாப்லோவிடம் உறுதியளித்துள்ளார். அதை என்னிடமும் சொன்னார்: தன்னைப்போன்ற பிரக்யாசிங், சுனில்ஜோஷி போன்றோரின் வேலைகள் மீண்டும் தொடரும்.

“அது நடக்கும்! சரியான நேரத்தில் அது நடந்தே தீரும்!!”

நன்றி: கேரவன் இதழ், http://www.caravanmagazine.in/reportage/believer

(முற்றும்)

Related Posts