அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 2)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1

புலனாய்வுக்குழுக்களின் குற்றக் குறிப்புக்களில் குமார் சதிகாரர்களுக்குத் தார்மீகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஆதரவு தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளன. ஆனால், பகவத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவரையும் தொடர்பு படுத்தவில்லை. சிபிஐயால் குமார் ஒருமுறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டபின் இந்த வழக்கு தேசியப்புலனாய்வுக் குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது அசீமானந்தா மற்றும் பிரக்யாசிங் ஆகியோரைத்தாண்டி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பரிசீலிக்கவில்லை.

(இந்தச் சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை, யார்யாரெல்லாம் குண்டுகளை வைத்தார்களோ அவர்களை எல்லாம் இணைக்கும் சரடாக இருந்த ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.)

இந்தத்தாக்குதல்களில் குமாருக்குப் பங்கு உண்டு என்று 2010ன் பிற்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்ததுமுதல் ஆர்.எஸ்.எஸ். அவரைச் சுற்றியிருந்த தொடர்புகளை மூடிமறைத்தது. பகவத்-ஒரு சர்சங் சாலக் முன்எப்போதும் மேற்கொள்ளாத நடவடிக்கையாக- குமார் மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கும் தர்ணாவில் பங்கேற்றார். பி.ஜே.பி.யின் ஆதரவும் அவருக்கு இருந்தது. பி.ஜே.பி.யின் தேசிய செய்தித்தொடர்பாளரான மீனாட்சி லேகி குற்றச்சாட்டில் குமார் பெயர் இடம்பெற்றிருந்தது முதலே அவரது வழக்கறிஞராக இருந்தார். குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரின் வழக்கறிஞர், ‘ குமார் மிகவும் பதவி ஆசை கொண்டவர்’ என்றும், ‘ அவர் சர்சங் சாலக் ஆவதற்காகக் காத்திருப்பவர்’ என்றும் என்னிடம் கூறினார்.

உள்துறை அமைச்சகத்துக்குச் (MHA) சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையை ஆய்வுசெய்ய புலனாய்வுக்குழுக்களின் அதிகாரி ஒருவர் (தனது பெயர் தெரியக்கூடாது என்ற நிபந்தனை யின்பேரில்) எனக்கு அனுமதி தந்தார். அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதால் அந்த அமைப்பை ஏன் தடைசெய்யக்கூடாது? என விளக்கம் கேட்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1948ல் காந்தியின் படுகொலைக்குப் பின்னும், 1975ல் அவசரநிலைக் காலத்திலும், 1992ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டதுபோல் மீண்டும் தடை வந்துவிடுமோ என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ்.தலைமைக்கு ஏற்பட்டது. எப்பொழுதெல்லாம் தீவிரவாத வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் தனதுஉறுப்பினர்கள்மீது சுமத்தப்படுகிறதோ, அப்பொழுதெல் லாம் – நாதுராம் கோட்சே விஷயத்தில் மேற்கொண்ட தந்திரத்தைப்போல் – ‘அவர்கள் எல்லாம் சங் அமைப்பிலிருந்து முன்பே விலகிவிட்டார்கள் அல்லது தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் அல்லது வன்முறையைத் தழுவியதால் தனிமைப்பட்டு விட்டார்கள். எனவே, அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களா? இல்லையா? என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று கூறும் தந்திரத்தைக் கையாண்டு வந்த்து.

அசீமானந்தா இந்தவிஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் க்கு ஒருதீவிரப் பிரச்சனை ஆனார். 1952ல் வன்வாசி கல்யாண் ஆசிரமம் துவங்கியதிலிருந்து அது சங் குடும்பத்தின் உட்கருவாக விளங்கி வந்துள்ளது. அசீமானந்தா தனது இளமைக்காலம் முழுவதையும் இந்த அமைப்புக்கு அர்ப்பணித்திருந்தார். அவர் தாக்குதல்களைத் திட்டமிட்ட நேரத்தில் அவருக்காகவே உருவாக்கப்பட்ட மதச்செயல்பாடுகளுக்கான இன்னொரு பிரிவான ‘வன்வாசி கல்யாண் ஆசிரம’த்தின் தலைமைப் பொறுப்பில் பத்தாண்டுகளாக இருந்து வந்தார். தீவிரவாதத் தாக்குதல் திட்டங்கள் துவங்குவதற்கு முன்பேகூட வன்முறைக்கலவரங்கள்,-ஒருங்கிணைந்த மதக்கலவரங்கள் ஆகிய அனைத்தும் அவரது நன்கறியப்பட்ட வழிமுறையின் பகுதிகளாக இருந்தன.

2005ன் மத்தியில் நிகழ்ந்த சதித்திட்டங்களில் அசீமானந்தாவின் ஈடுபாட்டை பகவத் மற்றும் குமார் மிகவும் நன்றாக அறிந்திருந்தனர். அசீமானந்தா அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட வில்லை. அந்த ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். வாரஇதழான ‘ஆர்கனைசர்’ல் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி அசீமான்ந்தா ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மரியாதைக்குரிய தலைவரான எம்.எஸ்.கோல்வாக்கரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும்வகையில் ரூ.1,00,00 நிதி அளித்துக் கௌரவிக்கப்பட்டார். பி.ஜே.பி.யின் முக்கிய முன்னாள் தலைவரான முரளிமனோகர் ஜோஷி அந்த விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். குமார் தனக்கெதிரான குற்றச்சாட்டுக் களின்மீது முழுவிசாரணைக்கு உட்பட்டிருந்தபோதும், அசீமானந்தாவுடன் குமாருக்கு இருந்த உறவை ஆர்.எஸ்.எஸ். மிகசௌகரியமாகக் கேள்விக்கிடமின்றி மறுத்தது.

புகழ்பெற்ற இந்து சீர்திருத்தவாதியான சுவாமி அக்னிவேஷ், கடந்த பத்தாண்டுகளாக சங் அமைப்பின் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டனம் செய்ததோடு என்னிடம், ’ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்து சமூகத்திலுள்ள மற்றவர் களையும், தங்களையும் தீவிர இந்துத்வா மூலம் துன்புறுத்துகிறார்கள்.இது கண்டனத் திற்குரியது’ என்று கூறினார். இந்துத்வா பற்றி மூன்று புத்தகங்களை எழுதிய அரசியல் அறிவியலாளர் ஜோதிர்மயாசர்மா

‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமான மற்றும், வெளிப்படையான செயல்பாடுகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறது. சிவாஜியின் குருவான ராம்தாஸ் முன்வைத்த ‘தாக்கிவிட்டு ஓடிவிடும்’ கொரில்லா போர்முறை ஆர்.எஸ்.எஸ்.-ன் மையப்புள்ளியாக இருக்கிறது.ஆனால் இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் இந்துமதத்தின் பெயரில் மிகவும் தைரியமாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களை எதிர்க்கக்கூடிய வலுவான அரசியல் கட்சிகளோ, பலம்வாய்ந்த பத்திரிக்கைகளோ நம்நாட்டில் போதுமான அளவு இல்லை என்பதே’

என்கிறார்.

1948ல் நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவம் முதல் இத்தகைய கண்டனங்களுக் கிடையேயும் சங் அமைப்பு நீண்டதூரம் வந்துவிட்டது. ஆட்களைத் தயார்செய்வதும், இந்துராஷ்ட்ரத்தை உருவாக்குவதுமான தங்கள் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் இணைப்பு அமைப்புக்களும் – குறிப்பாக பா.ஜ.க.வும் இபோது இந்திய சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு பெரியசக்தியாகத்தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அசீமானந்தாகூடப் பல்வேறுவகை களில் இந்தமுயற்சியின் தயாரிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களைப் பூதாகரமான அளவில் பகிர்ந்துகொள்கிறார். ‘உலகளாவிய இந்துராஷ்ட்ராதான் தனது நோக்கம்’ என்று அவர் என்னிடம் கூறினார்.

Related Posts