பிற

மாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 3)

கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி 1 : https://maattru.com/12866-2/  பகுதி 2 : https://maattru.com/b-r-ambedkar-india-and-communism/) புத்தகத்தின் அமைப்பையும், அது எவ்வாறு எப்போது , அம்பேத்கரால் , எப்படி திட்டமிட்டு எழுதப்பட்டது   என்பதையும் , தனது புத்தக  அறிமுகத்தில் ஆனந்த் டெல்டும்டே  எழுப்பிய சில கேள்விகள் மற்றும் அவர் சொல்ல விழைந்ததை பற்றியும் பார்த்தோம், இப்பகுதியில் மிக முக்கியமாக அம்பேத்கர் எழுதிய பகுதிகளுக்கான அறிமுகத்தை பார்போம்.

 அம்பேத்கரின் தாராளவாதம் :

அம்பேத்கர் மார்க்சியத்தை இந்திய சமூகத்திற்க்கு பொருத்தி பார்க்க வேண்டிய சூழலில்  ஒரு தாராள வாதியாகத்தான் மனித சமூக அமைப்பையே அனுகினார் . இந்த தாராளவாத அனுமுறையிலிருந்துதான் அவரது வாதப்பிரதிவாதங்கள்  உருவாகின என , டெல்டும்டே குறிப்பிட்டிருந்ததை  பார்த்தோம். இது அம்பேத்கர் எழுத்ய “இந்து சமூக அமைப்பு” எனும் பகுதியை நாம் படிக்கும்ப்போது கண்டிப்பாக உணர முடியும். தாராளவாதம் எனும் அனுகுமுறையில் தனிமனிதர்களுக்கு முக்கியத்துவம் உண்டு.  ஆனால் இந்திய சமூக அமைப்பை மற்றதேச சமூக அமிப்பிலிருந்து மிக வேறுபட்ட சமூக அமைப்பு என்னும் நிதர்சனத்தை  நிருபிப்பதற்க்கே மார்க்சியர்கள் அல்லாத பல தாராளவாதிகளின் “மனித சமூக அமைப்பை” பற்றிய வாதங்களை துனைக்கு அழைத்துக்கொள்கிறார் அம்பேத்கர்.

உதாரனத்திற்கு , அம்பேத்கர் இந்த புத்தகத்தை எழுதிய காலத்தில் இந்தியாவில்  பிராமணர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 1.5 கோடி. ஆனால் இந்த ஒன்றரைகோடி மக்கள்  மாத்திரம்  1856 உட்சாதி பிரிவுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்  என்று  குறிப்பிடுகிறார்.  இது எப்படி சாத்தியமாயிற்று   என்று அன்றைய தேதியில் இந்திய மார்சியர்கள்  (குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர்) அராய்ந்ததாக தெரியவில்லை. இந்தியா முழுவதும் கிட்டதட்ட அன்றைய தேதியில் 3000 –  4000 சாதிகள் வரை இருக்கலாம் என வரயறுக்கிறார் அம்பேத்கர்.

 யாவரும் சமமல்ல

சமமற்ற தன்மை , மனிதர்கள் யாரும் சமம் அல்ல , ஒவ்வொருவரும் வேறானவர்கள் என்பதையே தனது அடிநாதமாக இந்துமதம் கொண்டுள்ளது , ஆகையினாலே இத்துனை பிரிவுகள் ,இத்துனை வேறுபாடுகள் என வரையறுக்கிறார்.  இந்த 4000 சொச்சம் சாதிகள் ஆரம்பத்தில் இருந்த சதுர்வர்ணத்தின் பரிணாம வளர்ச்சி என்பது போல தோன்றினாலும், அதை பரிணாம வளர்ச்சி என்று சொல்லுவதை விட அதிலிருந்து விலகிச்சென்ற , எதிர் திசையில்  சென்ற ஒரு வளர்ச்சிபோக்கு. சதுர்வர்ண பிரமீடில்  ஏற்பட்ட  “வர்க்கப்பிளவுகள்”  சாதிய வளர்ச்சிபோக்கில் இட்டுசென்றன என அம்பேத்கர் கூறுகிறார். இதற்க்காக ஜோகேந்திரநாத் பட்டாச்சார்யா , (அப்போதையா வங்காள பிராமண சபையின் தலைவர்) சாதியத்தின் தோற்றுவாய் குறித்து எழுதிய கட்டுரைகளை மேற்க்கோள் காட்டுகிறார். பட்டாச்சார்யா சாதியத்தை நியாயப்படுத்தி எழுதியவர் என்பதிறிக!! இந்த நாலு வர்கங்களும்  ஒன்றுக்கொன்று சமமல்ல எனப்தை மனுவின் சட்டம் எவ்வாறு கூறுகிறது என்பதை மனுஸ்மிருதி கொண்டே விளக்குகிறார். இந்த தலைப்பின் முடிவில் இந்திய சமூக அமைப்பு வர்க்கங்களின் தொகுப்பாக அமைகிறது என்றே அம்பேத்கர் வரையறுக்கிறார்!!!

வேறெந்த சமூக அமைப்பிலும் , அச்சமூகத்தின் பிராதனமான மதம், அச்சமூகம் அமைப்ப்பை பாதுகாத்து நின்றதில்லை. அரசை வேண்டுமானால் கட்டுப்படுத்த முயன்றது.  ஆனால் இந்து சமூக அமைப்பில் மட்டும் மதம் தலையிட்டு சமூக அமைப்பை பாதுக்காக்க முயல்கிறது  என்பது இந்த தலைப்பில் அம்பேத்கர் பிராதானமாக ஸ்தாபிக்க முயலும் உண்மைகளுள் ஒன்று.

 இந்து மதத்தின் பிரத்யேகத்தன்மை :

இந்த தலைப்பில் , இந்துமதம் வெளிநாட்டிலிருந்து  இந்தியாவிற்க்கு பயணமாகி வந்தவர்களான மெகஸ்தனிஸ் , ஆல்பெரூனி , பார்போஸா போன்றவர்களின் எழுத்துகளை கோடிட்டு காட்டுகிறார், வெவேறு தேசங்களிலிருந்து வந்தவர்களான இவர்கள் , இந்தியாவின் ஏற்றத்தாழ்வு மிகுந்த பிரமீடு சமூக முறையினையும் , அதன் ஆயிரக்கணக்கான பிரிவுகளையும் கண்டு மலைத்துப்போய் பக்கம்பக்கமாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். சாதிக்கான பெயர்கள் , இந்திய சமூகத்தில் எவ்வளவு முக்கிய பாதிரம் வகிக்கிறது என்பதையும் கோடிட்டு காட்டுகிறார்.

யாவரும் சமமல்ல என்பதை அடிப்படை நாதமாக கொண்டு இயங்கும் இந்துமதத்தினருக்குள் , யாவரும் ஒன்றேதான் என்று தற்காலத்தில் கூறிக்கொண்டிருப்பவர்கள் யார் ? அவர்கள் பின்னால் சென்றுகொண்டிருப்பதுயார் ?

சதுர்வர்ணம் தான் 4000 சாதிகளாக பிரிந்ததா ? என்றால்  இன்னும் பிராமண – பனியா ஆதிக்கம் பொதுவெளியில்  அதிகம் இருப்பது ஏன் ?

இது போன்ற  கேள்விகளுக்கு, இப்புத்தகத்தை படித்தால், விவாதித்தால் கண்டிப்பாக தெளிவு பிறக்கும்.

 அம்பேத்கர் கடைசியாக ஆற்றிய உரைகளுள் “மார்க்சும் புத்தரும்” என்ற உரை மிக பிரபலமானது. தனதுவாழ்நாளில் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளை அவர்களது  அரசியலை, எல்லாவித காரணங்களோடும் தர்க்க நியாயங்களோடும் அம்பேத்கர் விமர்சித்தாரே தவிர கம்யுனிசத்தையோ, கூறப்போனால் மார்க்சியத்தையோ கூட அவர் எதிர்க்கவில்லை. ஆக நாம்தான் அம்பேத்கரை கற்க வேண்டியுள்ளது. அதற்கு இந்த புத்தகம் நல்ல ஆரம்பம்!. சிறிய புத்தகம்தான், இதுவரை தமிழில் வரவில்லையென்றால், விரைவில் வருமென நம்புவோம்!

– சீத்தாராமன்.

Related Posts