திருப்பதி சவரத் தொழிலாளர்களின் உரிமைத்தொகை (TDMA)

ஒரு அலைவரிசையில் ஒரு செய்தியைத்தான் ஒருகாலத்தில் அனுப்பிக் கொண்டிருந்தோம். எனவே வானொலியில் ஒரு நிலையத்திற்கு ஒரு அலைவரிசை. இன்றோ ஒரு அலைவரிசையில் பல ஒலிபரப்புகளை செய்ய முடிகிறது. இதனடிப்படையில் வந்துவிட்டது கைபேசிகள். இதற்கும் உதவிய அடிப்படை கோட்பாடு திருப்பதி மொட்டையை விளக்கும் TDMA.

உபரி மதிப்பு என்பது மாயையா?

காய் கனிவதற்காக காத்துக்கிடக்கும் விவசாயியைப் போல் முதலாளித்துவம் முற்றுவதற்காக கம்யூனிஸ்ட்கள் காத்துக்கிடக்கிறார்கள். விவசாயி அயர்ந்தால் காய் கனிந்து அழுகி பயன்படாமல் போய்விடும் கம்யுனிஸ்ட்கள் இல்லாவிட்டால் முதலாளித்துவம் மனித குலத்தை அழித்துவிடும்.

நான் ஒரு உந்துதள்ளி (I am a Troll)

இப்படி ஒரு திட்டமிட்ட ஒரு உந்துதள்ளிப் பட்டாளத்தை பெருமளவில் திரட்டி அதற்கு தீனிபோட்டு பராமரிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. ஊழல் செய்யாமல் இதற்கான பணத்தை எப்படித் திரட்ட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 5

பிராந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கம் என்பதன் தேவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. திமுக மற்றும் அஇஅதிமுக என்ற இருபெரும் அரசியல் இயக்கங்கள் உருவெடுத்து விருட்சமாக வேரூன்றி நிற்கும் பொழுது அதன் அடிமண்ணில் ஏற்பட்ட மாற்றமானது இந்த விருட்சத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 4

முதலாளித்துவ நிறுவனங்கள் தோன்றுவதும் அது நிலைபெறுவதும் அது முன்னோக்கிச் செல்வதும் இயக்கவியல் விதிகளின்படிதான் நடந்தேறுகிறது. முரண்பட்ட இருஅமசங்களை கையாளும் முதல்விதியில் எதிரும் புதிருமான இரண்டு விஷயங்களில் ஒன்று வெகுமக்களுக்கோ தொழிலாளர் வர்க்கத்திற்கோ நல்லதைப் பேசினால் மற்றொன்று அதற்கு நேர் எதிரானதாக இருக்கும். இவையிரண்டும் பிரிக்க முடியாதது.

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -3

I <<< முதல் பகுதி I >>>> இரண்டாம் பகுதி I தமிழக நிலப்பரப்பில் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவமும் ஆரம்பகட்ட முதலாளித்துவமும் அருகருகே இருந்தது. இரண்டுக்கும் முரண்பட்ட பண்பாடுகளின் மோதலும் நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்தினர் தங்களின் வர்க்க எதிரியாக பிரிட்டிஷ் ஆட்சியை அடையாளம் கண்டபொழுது இதர வர்க்கங்கள் அப்படி அடையாளம் காணவேண்டிய அவசியம் இல்லை. சமத்துவம் பேசிய முதலாளித்துவத்தின் பின்னால் இதர வர்க்கங்கள் அணிதிரள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை. இதுவே இங்கே நீதிக்கட்சியானது அரசியலில் மையத்திற்கு வருவதற்கு வழிகோலியது. தொழில் வளர்ச்சியடைய […]

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -2

I <<< முதல் பகுதி I அடுத்த பகுதி >>> I தமிழக வரலாற்றுச் சூழலில் திராவிட இயக்கத்தின் தோற்றத்தையும் அதன் இன்றியமையாத தன்மையையும் ஆய்வு செய்யாமல் அதற்குள் முரண்பாடு தோன்றி முற்றி அதன் அடிப்படை விஷயங்களை மறுதலித்து அது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றதை மதிப்பீடு செய்ய முடியாது. அதன் ஒரு கட்டமான ஜெயலலிதாவையும மதிப்பிட முடியாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய தென்னிந்தியர் நலஉரிமை சங்கமானது நீதிக்கட்சியாக மாறியதை இந்த இயக்கவியல் விதிகளின் வாயிலாக விளக்க முடியும். நீதிக் […]

ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -1

தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 34 ஆண்டுகாலம் செல்வாக்கு செலுத்திய ஒரு நபரை தனிநபராகசெல்வி ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. ஏதோ வாழ்ந்தார் மறைந்தார் என்று ஒவ்வொரு தனிநபரைப் பற்றி கூறுவதுபோல் செல்வி ஜெயலலிதாவைக் கூறமுடியாது. பெரும் மக்கள் திரளின் உள்ளங்களில் வாழந்துவந்த செல்வி ஜெயலலிதா ஒரு வரலாற்றுப் மனிதர். வரலாற்று மனிதர்கள் தோன்றுவது எல்லாம் ஒரு சமூகப் போக்கின் விளைவே. ஆகவே செல்வி ஜெயலலிதா என்பது ஒரு சமூகப் போக்கு என்றே நான் கருதுகிறேன். செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் […]

காகிதப் பணம் போனால் கள்ளப்பணம் போகுமா?

இந்தியாவின் ஜிடிபியில் 12 சதத்தின் அளவிற்கு நோட்டு அச்சடிக்கப்பட்டிருக்கிறது. புழக்கத்தில் இருக்கிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது. ஏன் அது 10 சதவீதமாக இல்லை அல்லது 20 சதவீதமாக இல்லை. பத்து சதவீதமாக இருந்தால் என்ன நடக்கும் 20 சதவீதமாக இருந்தால் என்ன நடக்கும்?  கருப்புப் பணச் சர்ச்சையை ஒட்டி எனக்கு எழுந்த இந்தக் கேள்விக்கு விடை காணுவதே இக்கட்டுரையின் நோக்கம்.   முதலாளித்துவ அளவுகோள்கள் (Metrics) சரியானது என்ற அனுமானத்திலிருந்து துவங்குகிறேன். காரணம் ஜிடிபி கணக்கிடும் முறை […]

ரகுராம் ராஜன் – தொடரும் அபத்த விவாதங்கள் …

நாடுகளுக்கிடையேயான பண்டப் பரிமாற்றங்கள் என்பது அந்தந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்குள் அடங்கியிருக்கும் சமூகவழியில் அவசியமான சராசரி உழைப்பை சார்ந்திருக்கிறது. இதையொட்டியே நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் இந்த தீர்மானமான புள்ளியைச் சுற்றியே சர்வதேச நாணய மதிப்பு அலைவுறும். இந்த அலைவை தீர்மாணிப்பது ஏற்றுமதி-இறக்குமதியே. உலகமயமாக்கல் கட்டத்தில் இது ஊகவணிகத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி அலைவுறும் வேகம் அதிகரித்துவிட்டது.