சம பாலின உறவும் கலாச்சார ஆயுதமும்!

டிசம்பர் 10 மனித உரிமை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, மனித உரிமைகளில் ஒன்றாக வலியுறுத்தப்பட்டு வருகிற சம பாலின உறவு உரிமையை நிராகரிக்கும் தீர்ப்பை இந்தியாவின் தலைமை நீதிமன்றம், அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், சம பாலின உறவு வாழ்க்கையைத் தேர்வு செய்வோரை சிறையில் அடைக்க வழி செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துகிற நாட்டின் அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று […]

பிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…

இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தபோல்கர் கொலை : சோகம் கொள்வதற்கல்ல, கோபம் பூணுவதற்கு…

Image Courtesy : wikimedia உலகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான்! கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்! பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை இவர்கள் போய் காப்பாற்ற வேண்டியிருக்கிறதே… தான் அவமதிக்கப்படுவதற்கு எதிராகத் தானாக எதுவும் செய்ய முடியாதவர் என்று தங்களுடைய கடவுளை இவர்கள்தான் காட்டிக்கொடுக்கிறார்கள்… நமது […]