திருநங்கை வேலைவாய்ப்பு: மறுக்கப்படும் அடிப்படை உரிமை (லிவிங் ஸ்மைல் வித்யா)!

-லிவிங் ஸ்மைல் வித்யா இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு இந்திய குடிமகன்/மகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை மருத்துவம், சமூக பாதுகாப்பு, குடும்பம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதில் பாலின பேதம் இருக்கக்கூடாதென்கிறது. ஆனால், பாலினம் என்னும் போது பாலியல் சிறுபான்மையினர்களை அது கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ஆண்டுக்கு ஒருவர் என்று கூட வேண்டாம், இத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ஒரேயொரு திருநங்கையோ/திருநம்பியோ ஒரு நபர் கூட அரசு பணிகளில் அமர்த்தப்படவில்லை. […]

கட்டுப்பாடா… ஆணாதிக்கமா?

இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? – 2

அரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி மோடி குறித்த கட்டுரை அல்ல இது. மாறாக, சர்வதேச நிதி மூலதனம், நவீன தாராளவாதம் மற்றும் இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றையத் தேவைக்கு மோடி எப்படி பொருந்துகிறார் என்பது குறித்த விளக்கமே. “ஒரு நவீன அரசு என்பது, பூர்ஷ்வாக் களின் ஒட்டுமொத்த நலன்களையும் கணக்கில் கொண்டு செயல்படும் ஒருநிர்வாகக் குழு என்பதைத் தவிரவேறொன்றுமில்லை.” இவை கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள வாசகங்கள். காலமாற்றத்திற்கும், முதலாளிகளின் தேவை களுக்கும் ஏற்ப அரசின் […]

2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு!

நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் அது பிழையான உத்தியாகவே (Strategic Error)  முடியும்.

மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? -1

2013 செப்டம்பர் 18 அன்று திருமதி ஜக்கியா ஜஃப்ரி அவர்களால் அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்ற முறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம். குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகள் நடைபெற்றபோது மோடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் முழுப்பொறுப்பும் வகித்தார் என்று முறையிடுபவர் தன் மனுவில் குற்றம் சாட்டியிருக்கிறார். நரேந்திர மோடி மற்றும் 59 பேர்களுக்கு எதிரான ஜக்கியா ஜஃப்ரியின் குற்ற முறையீட்டில் மும்பையில் உள்ள நீதி மற்றும் […]

வலைச்சரத்தின் பாராட்டில் ‘மாற்று’…

சுயநலவாதிகளின் கேவலபட்டுப்போன அரசியல், சினிமா, ஊடகம் என பலவும் அவர்களின் ரசனை, தேவை, எதிர்பார்ப்பு என எதையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் லாபம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு மக்களுக்கு எதிராய் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இவற்றிற்கெல்லாம் மாற்று ஒன்று தேவை என்பதை ஆணி அடித்தாற்போல் சொல்லும் தளம்.

ஆயுதம் செய்வோம் பாரதியின் பாடல்களால்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்: “இதுவா பாரதி நீ பார்க்க நினைத்த பாரதம்? இதுவா பாரதி நீ சொல்லி கொடுத்தசுதந்திரம்? எங்களுக்கு வெட்கப்படக் கூட விவஸ்தை இல்லை..” மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்’ என்று ஆர்ப்பரித்துக் கூத்தாடினார். ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சியா ளர்கள் ஆனந்த சுதந்திரத்தை அன்றாடம் தவணை முறையில் விற்றுக் […]

“விவாதம்” புதிய ஓய்வூதியத் திட்டம் – எதிர்காலத்தின் மீதான சூதாட்டமா?

(புதிய பென்சன் மசோதா, பாராளுமன்றத்தில் சட்டமாகியிருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை காங்கிரசும் – பாஜகவும் கொண்டுவந்துநிறைவேற்றியுள்ளன. தங்கள் சொந்த தொழிற்சங்கங்களே ஏற்காத இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால், நம் ஓவூதியர்களின் நிதி, பங்குச் சந்தைகளுக்குள் திருப்பிவிடப்படுவது ஒரு அபாயம். இரண்டாவது, இத்தனை ஆண்டுகள் பெற்று வந்த சிறிய அளவிலான சமூகப் பாதுகாப்பும் – இனி இல்லாமல் ஆகப்போகிறது. இளம் தலைமுறையினரை, நிச்சயமற்ற எதிர்காலத்தில் தவிக்கவிடப் போகும் இந்த சட்ட மசோதா தொடர்பாக விவாதிப்போம்) விவாத […]

ரூபாய் மதிப்பு – லாபமா? நட்டமா? (கேள்வி பதில்)

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு ரூபாயால் நட்டம், வெளிநாட்டில் உழைப்பவர்களுக்கு ரூபாய் விழுந்தால் லாபம் – ஏற்றுமதியாளர்களுக்கு லாபம், இறக்குமதியாளர்களுக்கு நட்டம் … இத்தனை எளிமையாக இப்பிரச்சனையை விளக்கிவிட முடியுமா? பிரதமர் மன்மோகன் சிங், ஒரு விந்தையான விளக்கத்தைக் கொடுக்கிறார். “ரூபாய் மதிப்பில் திடீரென ஏற்பட்ட சரிவு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது; இப் பிரச்சனையை நாங்கள் எப்படியும் எதிர்கொள்வோம்; எனினும் சீர்திருத்தங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை; மூலதனம் மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்போவதில்லை” என்று குறிப்பிட்ட அவர், “இன்னும் சொல்லப்போனால் ரூபாய் […]

இந்திய நாடும் விவசாயிகளும் – பி.சாய்நாத்

(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி […]