ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தில் – பாஜகவின் அரசு …

மக்கள் நலனை மறந்துவிட்டு இதுபோன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அமைப்புகளோ, அரசுகளோ, கட்சிகளோ அதிக நாட்கள் இந்திய தேசத்தில் செயல்பட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அப்படி என்னதான் சலுகை கொடுத்துவிட்டது அரசாங்கம்? …

நமது அரசுகள் ஒருபடி மேலே போய் திடகாத்திரமான ஆளுக்குச் சலுகைகளை மேலும், மேலும் வழங்கி, அதன் சுமையை குறைபாடுள்ளவர்கள் மீது சுமத்துகிறது.

காந்தியின் கடைசி பிறந்த நாள் …

காஷ்யபன் ” நான் 125 வயது வரை வாழ்வேன். என்மக்களுக்கு சேவை செய்வதின் மூலம் இறைவனுக்கு தொண்டூழியம் செய்வேன் “என்றார் காந்தியடிகள். அதற்கு ஏற்றார் போல தன் உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் அவருடைய முதல்பிறந்த நாள் வந்தது. உலகம் பூறாவிலும் இருந்து 2-10-47 தேதியன்று வாழ்த்து செய்திகள் குவிந்தன. மவுன்பாட்டன் தன் மனைவி எட்வினா சகிதம் வந்து வாழ்த்து சொன்னார் அதிகாலையில் 5 மணிக்கே சர்தார் பட்டேல் வந்தார். காலை பிரார்த்தனைக்கு பிரதமர் […]

கோர்ட் (2015) மராத்தி: இந்திய நீதித்துறையின் அவலக் குரல் …

அரசாங்க ஊழியர்கள் ‘as per papers’ என்று சொல்லி எவ்வளவு மடத்தனமாக நடந்துகொள்வார்கள், மக்களின் அவசரத்துக்கு தகுந்த மாதிரி இல்லாமல் எவ்வளவு மெதுவாக ஒவ்வொரு காரியமும் நடக்கும், அரசாங்கம் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனைக்கூட குற்றவாளி ஆக்கமுடியும் என்பதை நிதர்சனமாக எடுத்து வைத்து வாதாடி இருக்கிறார் இயக்குனர்.

குற்றம் கடிதல்: முதல் பார்வை …

சமூக அக்கறையை பிரதிபலிப்பதிலிருந்து, பாலியல் கல்வியின் அவசியத்தை வலுவாக அறைந்து சொல்லுவதில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.

மதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …

சிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது. நூலாசிரியர் நா.முத்துநிலவன் தமிழகம் முழுதும் அறியப்பட்ட நல்ல நாகரீக பேச்ச்சாளர் , முற்போக்கு […]

சங்கராச்சாரியாருக்கு உதவிய திப்பு சுல்தான் …

இன்று பெரிய மத மோதல்கள் இல்லாமல் அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஒரு மதப்பகைமைச் சூழலை உருவாக்க இராமகோபாலன் முயற்சிப்பதை தமிழக அரசும் காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.

சேஷசமுத்திரம்: மீண்டும் எரிந்த குடிசைகள் – நேரில் விசாரித்த குறிப்புகள்

திட்டமிட்டபடி இரவு 7.15 மணிக்கு சேஷசமுத்திரம் கிராமத்திற்கு மின்சாரம் தந்த டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அனைத்து தெரு மின்விளக்குகளும் உடைக்கப்பட்டது. அடுத்து தேர் மற்றும் 7 வீடுகளுடன் 7 மோட்டார் சைக்கிள், 2 ஜெனரேட்டர் கொளுத்தப்படுகிறது. தீ வைக்க பயன்படுத்தப்பட்டது பெட்ரோல் வெடிகுண்டுகள். அலட்சியத்தோடு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

தமிழகத்தில் மது ஒழிப்பு யாரால் சாத்தியம்?…

மதுவினை அரசே முன்னின்று இலக்கு வைத்து விற்பனை செய்வது, விற்பனையை அதிகரிப்பது பாதகச் செயல். அன்று மதுவை மனிதன் குடித்தான். இன்று மனிதனை மது குடிக்கிறது. மதுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த மது விற்கும் அரசாங்கம் உயிர் வாங்கும் எமனே.

வியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …

வியாபம் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைச்செய லாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம் பி அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற் கான சான்றுகள் கிடைத் துள்ளதாக என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.