இந்தியாவின் இருண்ட காலம் நெருங்குகிறது – நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாக இங்கிலாந்தின் அடிக்கட்டுமானத்தில் மாற்றம் நிகழ்ந்தும், நிலவுடமை சடங்குகளும், சட்டங்களும் நடைமுறையில் இருந்தன.

விசாரணை, யாரை விசாரிக்கச் சொல்கிறது?

‘‘இல்லீங்கய்யா… நான் ஆஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போவேங்கய்யா”  என மேலதிகாரியிடம் திமிறவும் முடியாமல் விலகவும் முடியாமல் சமுத்திரக்கனி பேசுகையில், “கோட்டாவுல வேலைக்கு வந்தவன் நியாயம் பேச வந்துட்டான்” என்பதாக ஒரு வசனத்தை போகிற போக்கில் மேலதிகாரி வழியாக சொல்லிச்செல்வதன் மூலம் கோட்டாவில் வேலைக்கு வந்தவர்களுக்குள் கொஞ்சம் கூடுதலாக மனசாட்சியும் மனிதாபிமானமும் இருக்கிறது என்பதாக காட்சிப்படுத்துகிறார் வெற்றி மாறன்.

அறிவியலுக்கு எதிரான தாக்குதல்

அறிவியல் என்றாலே மதவாதிகளுக்கு கிலி எடுக்கும்.காரணம் ஏன் எதற்கு என கேள்விகளை அடிப்படையில் அறிவியல் தான் உருவாக்கியது. மதங்களின் வேரையே ஆட்டம் காண வைக்கும் திறன் அறிவியலுக்கு மட்டுமே உண்டு. கற்பனைகட்டுகதைகளை புரட்டி போட்டு மனித வாழ்வின் உயர்வுக்கு வித்திட்ட அறிவியலின் உணமை வாதங்களுக்கு பதில் பேச முடியாமல் முச்சந்தியில் நின்று தோற்று போன மதங்கள் தங்களின் தளங்களை காப்பாற்றி கொள்ள பல்வேறு முயற்சிகளில் அன்றாடம் ஈடுபடுகின்றன. மதத்தை அரசியல் பிழைப்புக்காக பயன்படுத்தும் பி.ஜே.பி க்கு அறிவியல் […]

காளை வதை அல்ல… பண்பாட்டு வதை

2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற இப்பிரச்சனையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மிகவும் பொறுப்பற்ற தன்மையுடனே அணுகியிருக்கின்றன. ஜல்லிக்கட்டைத் தடுக்க நினைக்கும் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த பத்தாண்டுகளில் செய்துள்ள பணிகளோடு ஒப்பிடுகிறபொழுது அதை நடத்த நினைக்கிற அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றியே இப்பிரச்சனையை அணுகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஜல்லிக்கட்டு, மறைய வேண்டும் …

ஜல்லிக்கட்டு விளையாட்டே கூடாது என நினைப்பவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பரப்பப்படும் – ‘ரத்தப் பலி விவசாயத்தை வளமாக்கும்’, ‘மாடு பிடியே வீரத்தின் அடையாளம்’ ‘ஆண்மையின் அடையாளம்’ என்பது போன்ற கருத்தாக்கங்கள் தவறானது. இதுபோன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், பிரச்சாரங்கள் நடக்க வேண்டும்.

விவசாயத்தின் அழிவில் உருவாகும் அமராவதி …

புதிய மாநிலத்தை வழி நடத்த வருவாய் இல்லை என புலம்பும் அரசு ஆடம்பரமாக விழா நடத்துவது ஏன் ? எனும் கேள்விக்கு பதில் நம்மிடமே உள்ளது. அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள், மூலதனங்களை தலைநகருக்கு இழுக்கும் தந்திரங்களில் இதுவும் ஒன்றல்லவா?

மும்பையைக் கலக்கும் ‘இட்டிலி’க்காரர்கள் …

இந்தக் குட்டித் தமிழ்நாட்டிலிருந்து 3,00,000 இட்லிக்களும் மற்ற தென்னிந்திய உணவு வகைகளும் மும்பையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகத்தினர் வசிக்கும் பக்கா சேரிகள் மும்பையின் முக்கிய இடங்களான சயான், மாஹிம் ஆகிய பகுதிகளுக்கிடையே இருக்கிறது.

என்றென்று நிலைத்து நிற்கப் போகும் தில்லாங்குமரி டப்பாங்குத்து

எஸ் வி வேணுகோபாலன்  எல்லாம் வதந்தி…நான் நலமாக இருக்கிறேன்…உயிரோடு இருக்கிறேன் என்று சில மாதங்களுக்குமுன் அவர் பேட்டி கொடுத்தபோது எத்தனை ரசிக உள்ளங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டன…. மனோரமா இனி வந்து அப்படி சொல்ல இயலாது என்ற செய்தி இந்த நள்ளிரவில் சன் செய்திகள் அலைவரிசையில் பார்த்தபோது தெரிந்தது. பல பத்தாண்டுகள் தமிழ்த் திரை உலகில் ஒரு நாயக, நாயகி அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருந்த பன்முக ஆற்றல் படைத்திருந்த நடிகை காலமாகிவிட்டார். மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு பின்னர் […]

தாத்ரி படுகொலை – உண்மையறியும் குழு அறிக்கை …

புதுதில்லி, 5/10/2015 குழு உறுப்பினர்கள்: பொனோஜித் ஹுசைன்ம, தீப்தி சர்மா, கிரன் சஹீன், நவீன் சந்தர், சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் குமார். கடந்த செப்டம்பர் 28 இரவு நேரம். மேற்கு உத்தரபிரதேசத்தின் பிசாரா பகுதிக்குட்பட்ட தாத்ரி எனும் குக்கிராமத்தில் அந்த கொடிய நிகழ்வு நடந்தது. முகம்மது அகலாக் என்பவர் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் பசு கன்றை கொன்று உணவாக்கி கொண்டார் என்ற புரளி அந்த கிராமத்தின் கோயிலில் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பினை கேட்ட அக்கிராமத்தின் கும்பல் […]