‘மேற்கு தொடர்ச்சி மலை’ எனும் தவற விடக்கூடாத வாழ்வுப்பிரதி . . . . . . . . . . . !

ஒரு கலைப்படைப்பு என்பது காலத்தின் பதிவு. கவிதை, சிறுகதை, சினிமா, ஓவியம் என எந்தக் கலைப்படைப்பும் காலத்தை நிறுத்தி பிரதியெடுத்தலே. மேற்கு தொடர்ச்சி மலை, தேனி தேக்கடி மூணாற்றின் கடந்த எண்பதுகளுக்கு பின்னான காலப்பதிவு. ஒரு துண்டு நிலம். வரலாறு நெடுக நிலமற்ற உழைக்கும் மக்களின் கனவு இதை நோக்கியே இருந்திருக்கிறது. வாழ்வாதராமாக நிலத்தை அடைய கனவு காணும் உழைக்கும், சுரண்டப்படும் மக்களுக்கும் – நிலத்தை அதிகாரமாக தலைமுறை தலைமுறையாக கையில் வைத்திருக்கும் ஆண்டைகளுக்கும் ஊடாகத்தான் வரலாறு […]

இறைவி – இரு பார்வை

இறைவியின் கருத்து திணிப்புகளை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், ஆண்களின் நிதானமின்மை – பாதிக்கப்படும் பெண்கள் என ஒரு பக்கா வட்டியும் முதலும் எப்பிசோட். அதில் பெண்ணியம் தூவி இறக்கியிருக்கிறார் கார்த்திக்.

அவரவர் வானம் – சரக்கும் பெண்களும் கொஞ்சம் கலாச்சார அடிப்படைவாதமும்

இருபது ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். கேரளாவை ஒரு புத்தகம் கலக்கியது. நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி எழுதிய சுயசரிதை நூல் அது. எந்த விதமான அனுதாபத்தையும் எதிர்பார்க்காத புத்தகம். ஒரு இலக்கியமறியாதவரின் சுய சரிதை, அதனுள் ஊடுபாவும் இயல்பான பாலியல் உணர்வு, சமூக இயல்பு கட்டமைப்பு ஆகியவற்றாலேயே இலக்கியமாகிப் போனது. அதில் தானா என்று நினைவில்லை, ஒரு பெண் இருப்பார். ஆண்கள் உலகத்தில் தன்னால் செய்ய ஆசைப்பட்டவைகளை செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் சிறு […]

இடஒதுக்கீடு: Let’s Go back to Zero !

ரிசர்வேஷன புரிஞ்சுக்க ஜாதியோட அடிப்படை, குலக் கல்வியோட அடிப்படைகள் புரியணும். இன்னமும் மெடிக்கல் தொடங்கி ஜர்னலிசம் வரைக்கும் குலக்கல்வி இல்லாமலா இருக்கு? இப்பெல்லாம் ஒரே Professionல கல்யாணம். குழந்தைகளுக்கு அதே Profession and அதே ஜாதியும் கூட. உங்களால் History based விஷயங்களுக்கு pay பண்ண முடியாது.