அதிகாரம்தான் பிரச்னை என்றால் அதற்கு தீர்வு இன்னும் சக்தி வாய்ந்த இயக்கங்களை இன்னும் சக்தி வாய்ந்த கட்சிகளைக் கட்டுவது தான் உழைக்கும் வர்க்கத்திற்கு தன் எதிர்காலத்திற்காக அனுமதி கேட்கும் அவசியம் கிடையாது .Continue Reading
ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல… ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ, அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே! இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் Continue Reading
” நான் என் எழுத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். என் கிராமத்தில் நிலவும் சூழல்களுக்கு நேர்மையாக இருப்பதன் மூலம், நான் உத்தரபிரதேசத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கு பொருந்தும் எதையாவது எழுதியிருப்பேன். நாம் யாருடைய பிரச்னையை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம் இல்லையா ? “ சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியை மகசசே விருது பெற்ற பிரபல Continue Reading
கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் ஒழியாமல் டெங்கு செய்திகளாகவே இருந்தன. தீபஒளித் திருநாளின் மகிழ்வு கூட பல குடும்பங்களில் துயர்தரும் நாளாக மாறி துக்க இருள் சூழ்ந்ததாக இருந்ததையும் காண நேர்ந்தது. கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் டெங்கு பற்றிய செய்திகளாகவே இருந்தன. அதில் காய்ச்சலால் Continue Reading
அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும். Continue Reading
சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம் பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது. உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் Continue Reading
இந்த நாலு நாளா தூங்க முடியலை. மனசுல நிம்மதி இல்லை. எனக்கு மட்டும் இல்லை. அக்கம் பக்கத்துல இருக்கற என்னோட சிநேகிதகாரங்களும் நிம்மதியா இல்லை. ஒவ்வொரு தடவையும் வீட்டுல கரண்ட் கட்டாகறப்ப நம்ம வீட்ல மட்டுமா? ன்னு ஒரு கவலை வந்து, எல்லா வீட்டுக்கும் கட்டாகியிருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிம்மதி வருமே அது மாதிரி நிலைதான் இப்ப. ஆனா திரும்ப கரண்ட் வரல. நமக்கு மட்டும் கரண்ட் இல்லேன்னா, Continue Reading
வீட்டிற்குள் நுழைந்தவள் முகம் கை கழுவிக் கொண்டு சமையலறையில் நுழையப் போனவளை ' லட்சுமி ' என்று அழைத்து அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடான காப்பியை தந்தான். " ஸாரி லட்சுமி உன்னோட வேலை சுமையை யோசிக்காமல் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன் " என்றான்.Continue Reading
பார்ப்பனராகவோ தலித்தாகவோ யாரும் கேட்டுப் பிறப்பதில்லை.பிறந்தபின் சமூகத்திற்கு ஆற்றும் கடமைகள்தான் ஒருவரை நேசிக்கவோ வெறுக்கவோ வைக்கின்றன.வெண்மணியின் கொடூரத்தைச் சந்தித்து சாதியாகவும் வர்க்கமாகவும் நின்று போராடிய தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட தலித் விடுதலைப் போராட்ட அனுபவங்களையும் அசை போடுவோம்.Continue Reading
பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading
Recent Comments