Home Articles posted by S V VENUGOPALAN
அரசியல்

பீகார் : என்னடா நடக்குது இங்கே..?

ஓவியம்: ராமமூர்த்தி பீகார் தேர்தல் முடிவுகளை அறிய வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சற்று நேரத்தில் பார்த்தால்,  கிட்டத்தட்ட அனைத்துத் தொலைகாட்சி சானல்களிலும், பா ஜ க முன்னிலை என்று போடத் தொடங்கி விட்டனர். நிமிடத்திற்கு நிமிடம் அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்லவும், ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்புகளை Continue Reading
பிற

செப் 11: மகாகவி நினைவு நாள் – நினைவலைகள் …

எஸ் வி வேணுகோபாலன்  தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரும், மகாகவி பாரதியும் இளமைக்காலம் தொட்டுக் கூடவே வருகின்றனர். இயற்கையின் காட்சியானாலும், ஆட்சியாளர்மீது கோபம் என்றாலும் பாரதி உடனிருக்கிறார் எப்போதும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு பொருள் கிடைக்கச் செய்பவை சிறந்த இலக்கிய வாசிப்பை வழங்குகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் இலக்கிய பிரதி என்று சொல்லப்படுவது இங்கே Continue Reading
பிற

கருத்துரிமையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கி …

மீண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது ஒரு பயங்கர படுகொலை. கருத்துரிமையை சகிக்காத வெறிக் கும்பலின் அடுத்த கை வரிசை கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்தேறியிருக்கிறது. கன்னட மொழியின் ஓர் அற்புத படைப்பாளியை, கல்வெட்டு ஆய்வாளரை, முற்போக்குச் சிந்தனையாளரை வஞ்சம் தீர்த்துக் கொண்டுவிட்டனர். Continue Reading
ஜூன் 2015 புதிய ஆசிரியன்

நியாயங்களோ பொதுவானது..!

10 சதவீதம் வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும், 20 சதவீதம் வரை கூட விலக்கு உண்டு என்று ஆந்திர அரசுசுற்றரிக்கைஒன்று அனுப்பியிருப்பதாகவும் கூறி அந்த அடிப் படையில் பெங்களூரு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு புதிய வரையறையை முன்மொழிந்திருக்கிறது.Continue Reading
இலக்கியம்

பாரதி: காலங்களைக் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்

அவர் வாழ்ந்த காலம், அவரது சூழல், அவர் எதிர்கொண்ட சவால்கள்-இவற்றின் பின்புலத்தில் மின்னும் அவரது ஆளுமை மகத்தானது. அதுதான் எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி என்று கேட்கவைப்பது. எல்லா புறச் சூழலின் சோதனைகளையும் விஞ்சி முன்னெழுந்து திரண்டு வருமாறு அதுதான் அடுத்தடுத்த இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களுக்குப் போராடத் Continue Reading
கலாச்சாரம் காதல்

காதல் ஃபீனிக்ஸ்

காதலைப் பறவையாக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில் அதன் இறக்கை துடிப்பு சுதந்திரத்தைக் கோரியது! காதலை பனிக்கட்டியாக்கி என் உள்ளங்கையில் வைத்துச் சில்லென்று ரசிக்கையில் உருகி ஓடி வெளியேறிவிட்டது! காதலே கனவுகளாய் மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என ஆசை ஆசையாய்ப் படுக்கை விரித்த இரவுகளில் உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது! பின்னர், காதல் பூக்களில் முட்களால் Continue Reading
அரசியல்

லாபத்தைக் கேட்கவில்லை நிதியமைச்சர் அவர்களே !

வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் டி கருத்து வெளியிட்டிருப்பது ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருள் ஆகி வருகிறது. சமூக வலைத் தளங்களிலும் அதன் மீதான எதிர்வினைகள் சூடாக குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஊதிய உயர்வுக்கான போராட்டத்திற்கு அவர் அளிக்கும் பதில் என்ன ? வங்கிகள் Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

இந்துவின் பேப்பர் க்வ்லிங் கலை!

பேப்பர் க்வில்லிங் என்ற கலை வடிவம் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி உலகுக்கு அளித்த கொடை என்று கருதப்படுகிறது. எகிப்து தேசத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் இணையதளத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. ஐரோப்பா முழுக்கப் பரவிய இந்தக் கலை, இன்று நம் நாட்டிலும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. டிசம்பர் 24 அன்று மதுரையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் மாநாடு Continue Reading
பிற

உரக்கத்தான் பேசுவோம், இனி!

ஊமை சனங்களை உரக்கப் பேசு‍ என உசுப்பி விட்டவனே! கனத்த தத்துவங்களின் மையப் பொருளை ஒற்றை வசனத்தில் துடிக்கத் துடிக்க ஒலிக்கச் செய்தவனே! தங்களைத் தொலைத்தவர்களை அருகே அழைத்துத் தடவுக் கொடுத்து‍ அவர்கள் உள்ளங்கையில் மை போட்டுத் தங்களைத் தாங்களே மீட்டேடுக்க வைத்த மந்திரக் கலைஞனே! உபரி மதிப்பின் வர்க்கக் கணக்கை உள்ளூர் வீதியில் படம் பிடித்துக் காட்டியவனே! ஔரத் (பெண்), நீ நடத்திய Continue Reading
அரசியல்

வீதி தோறும் மோதல்? உள்ளம் தோறும் மதவெறி?

வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது பேச்சோடு சும்மா திரும்பப் போவதில்லை இவர்கள்… குஜராத் மாநிலத்தில் அமையப் போகும் வல்லபபாய் படேல் சிலைக்காக கலப்பை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயக் கருவிகளையும் திரட்டி வரப் போகின்றனராம். மக்கள் பிரச்சனைகளை பாஜக ஒருபோதும் பேசப் போவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்களது பிரச்சார உத்திகளின் வரலாற்றுத் தொடர்ச்சியை நாம் Continue Reading