கொல்லவும் முடியாது… வெல்லவும் முடியாது…

ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். […]

நூல் அறிமுகம் – திமுக பிறந்தது எப்படி?

பெரியார் படத்தில் இவ்வாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். காட்சி 1: ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைகிறது. இந்திய நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற இருக்கின்றனர். ஆட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து இங்குள்ள உயர் சாதியினர்களின் கைக்குத்தான் மாறவிருக்கிறது. ஆகவே இந்நாளை நாம் “துன்ப நாளாக” அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்து, தன்னுடைய பத்திரிகையில் “துன்ப நாள்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிடுகிறார். காட்சி 2: அண்ணா தன்னுடைய சகாக்களுடன் இதை எப்படி நாம் துன்ப நாளாகக் […]

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

‘தனி ஒருவன்’ மட்டும் போதாது…

லீப்நெக்ட் மற்றும் ரகுராம் நாராயணன் “சாட்டையெடுத்து நாட்டை திருத்து, நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் – கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும், தீமைதான் வெல்லும், நல்லது செய்றதுக்குத்தான் ஆதாரம் வேணும் – கெட்டது பண்றதுக்கு குழப்பமே போதும், காதல் கிரிக்கெட்டு, நெஞ்சோரமாய் ஒரு காதல் துளிரும்போது… என்கிற வரிகளோடு, சுவரங்களோ மெட்டுகளோ தெரியாத ஒரு குரூப் இசைக் கலைஞன் ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களை சற்றே நிமிர்ந்து பார்க்க […]

சிலப்பதிகாரமும் சிலிகோஷிஷும் – மிளிர்கல் குறித்து

பொதுவாகக் காங்கேயம் என்று கூறும்போதே ஊர்ப் பெயருடன் காளையும் அதனுடன் சேர்ந்து “காங்கேயம் காளை” என்று நினைவுக்கு வருவதே வழக்கம். அங்குக் காளை மட்டுமே பிரபலம் என்று நாம் என்னுமளவிர்க்கே கொங்குப் பகுதியின் வரலாறு நமக்குச் சொல்லப்பட்டு வந்துள்ளது. இது அப்பகுதி வரலாற்றின் ஒரு பகுதியே.

இரட்டை மாட்டு வண்டியில் இந்தியா!

எப்பொழுதுமே மாட்டு வண்டியைக் காணும் பொழுதெல்லாம் எனக்கொரு அலாதி இன்பம் ஏற்படுவது வழக்கம். அதுவும் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியை ஓட்டுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு முறை எனது பெரியப்பாவின் மாட்டு வண்டியை ஓட்டி, அதை தவறுதலாக கால்வாயில் இறக்கி மாடுகள் இரண்டையும் சாட்டையால் அடித்து பெரியப்பா அவர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. நமது இந்தியப் பிரதமர் திரு.மோடி அவர்கள் திறமையானவர், யுக புருசர் இரண்டு மாடுகள் […]

கொக்ககோலா கழுத்தும், வெக்கமில்லாத நுகர்வும் !

தேர்தல் முடிந்தவுடன் தலைவர்கள் எல்லாம் ஓய்வெடுக்க கொடநாடோ வெளிநாடு சென்றுவிடுகிறார்கள். நாமும் ஓட்டுப் போட்டுவிட்டு அதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிட்டு நமது பணி முடிந்துவிட்டது என்று தினசரி வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுகிறோம். உண்மையில் அரசியல் என்பது தேர்தலோடு நின்றுவிடுவதில்லை, தேர்தலைத்தாண்டி பல அம்சங்கள் அதில் உள்ளது. ஊழல் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்மந்தபட்டது எனும் “சிந்தனை ஊழல்” இங்கே வேரூன்றியுள்ளது. பெரும்பலான அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் “வளர்ச்சி” என்பது பொருளாதார வளர்ச்சி, […]

மாமேதைக்காக மாமேதையின் உறை

1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனம் பி.பி.சி “கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?” என உலகம் முழுவதும் நடத்திய கருத்திக் கணிப்பில், அதிக பெரும்பான்மையானோர் அளித்த பதிலின் அடிப்படையில் “கார்ல் மார்க்ஸ்” என தனது முடிவை வெளியிட்டது. மனித குல வரலாற்றில் தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், அறிவியல், பெண்ணியம், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிக் கொளுக்கும் முதலாளித்துவத்தை […]

தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே!

இடஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை சார்ந்ததோ, அரசியல் வித்தையோ அல்லது கருணை அடிப்படையிலானதோ அல்ல, இடஒதுக்கீடு என்பது சட்டபூர்வமான கடப்பாடு என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். மனு(அ)தர்மத்தை பின்பற்றும் பிராமண சமூகம், மக்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல், பிறப்பால் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தியுள்ள வர்ணாசிரமத்தை இச்சமூகத்திலிருந்து அழித்தொழிப்பதே இடஒதுக்கீட்டின் முக்கிய அம்சம். மனு(அ)தர்மத்தின் படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் கடைநிலை சாதியினருக்கு கல்வி கற்க உரிமையில்லை. அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினாலேயே பெரும்பான்மையான […]

தலித்தாக பிறப்பது குற்றமா?

தலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலித்தாக பிறந்தது குற்றமென்று” இச்சமுதாயத்திடம் கூறிக்கொண்டேயிருக்கிறது. அண்மையில் வாசித்த “ஜூதன் ஒரு தலித்தின் வாழ்க்கை”(Joothan A Dalit’s Life), ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்களின் சுயசரிதை பற்றிய ஒரு சிறு பதிப்பே இக்கட்டுரை.