வன்கொடுமை தடுப்புச் சட்டம்- சில கேள்விகளும் பதில்களும்

எந்த நாட்டிலும் இல்லாத சாதியும் அதன் பேரில் நடக்கும் கொடுமைகளும் இந்தியாவின் அவமானச் சின்னமாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

சாலை எனும் கரிய நாக்கு …

உங்களது பைக்கில் சாவியை போடும் முன் ஸ்டேண்டை எடுக்க வேண்டும். இதை ஒரு பழக்கமாகக் கொள்வது நல்லது. ஹெல்மெட் தேவையில்லை. உங்களது அப்பா ஒரு விபத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் வார் கழுத்தறுத்து தான் இறந்தார் என்பதை நினைவில் கொள்க.  மெல்ல ஏறி அமருங்கள் சைக்கிளைப் போல் தான் இதுவும் சைக்கிளைப் போல் மாங்கு மாங்கு என்று மிதிக்கத் தேவையில்லை அதனாலேயே இது பயில்வதற்கு கொஞ்சம் கடினமானது. உங்கள் கட்டுப்பாட்டிற்க்குள் எளிதில் வராதது. உங்கள் வலது கட்டை விரலுக்கு கீழே இருக்கும் […]

ஏழை அதிபர்

நகரத்தில் இருந்து விலகி நிற்கும் ஒரு சிறிய கிராமம். அதில் விவசாய நிலத்திற்கு நடுவே கிணறு உள்ள ஒரு ஒற்றை வீடு. அந்த ஒற்றை வீட்டில் வயதான தம்பதியர்.தங்களது மூன்று கால் நாய் மானூலியாவுடன் வசிக்கிறார்கள். அந்த நிலத்தில் பூக்களைவளர்த்து அதை விற்று வரும் வருமானத்தைக் கொண்டு அவர்களது செலவுகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். கற்பனை செய்துபார்த்தால் மிகவும் ரம்மியாக இருக்கிறதா?. அடுத்த வரியை படித்தால் அந்த ரம்மியமான உணர்வு ஆச்சரியமான உணர்வாய்மாறிவிடும்.அது ஒரு நாட்டின் அதிபர் வீடு. […]

வல்லினம் ஆக்சுவலி இடையினம்

கல்லூரி படிக்கும் போதே வல்லினம் டிரெய்லர் வந்துவிட்டது. டிரெய்லரைப் பார்த்ததும் அப்படியே  மண்டை முடி எல்லாம் நட்டுக்கொண்டு. படம் பாக்குறோம்டா என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் நான் படித்து முடித்து வேலைக்குப் போய் அடுத்து வேறொரு கம்பெனி மாறிய பிறகு தான் வந்திருக்கிறது. இருந்தாலும் போய் பார்த்துவிடுவோம் என்று போய் பார்த்தேன்.  தியேட்டரில் மொத்தமே இருபது பேர்தான் இருந்திருப்போம். படம் ஆரம்பத்திலேயே கழுகு நாயகன் கிருஷ்ணா வந்தார்… என்னடா கிருஷ்ணா இருக்கார்னு சொல்லவே இல்ல ஒரு வேளை […]

ஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்!

ஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.

எடிசன் செய்த கொலை!

வரலாறு என்பது வேட்டைக்காரர்களின் டைரிக் குறிப்பே. சிங்கம் வந்து உண்மையைச் சொல்லாதவரை வேட்டைக்காரர்கள் தான் ராஜாக்கள். இது டெஸ்லா என்கிற அறிவியல் சிங்கத்தின் கதை.

கழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்

”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.

மதத்தால் மரித்த மருத்துவச்சி

அறுவை சிகிச்சை மட்டும் இல்லை என்றால் இன்று நம்முடைய பிரியத்திற்குரிய பலர் நம்மோடு இருந்திருக்க மாட்டார்கள். இறப்பைத் தள்ளிப்போட மட்டுமல்ல சிசேரியன் மூலம் பிறப்பை தீர்மானிக்கும் சக்தியும் அறுவை சிகிச்சைக்கு உண்டு. அறுவை சிகிச்சை என்பது ஒரு தனி வைத்திய முறை. அதை எந்த வைத்தியமுறையுடனும் இணைத்து சிகிச்சையளிக்க முடியும். நமது நாட்டில் கூட சுஷ்ருதா என்கிற மருத்துவர், ஆயுர்வேதத்தோடு இணைத்து மூளை அறுவை சிகிச்சை  செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்திய ராணுவத்தில் குழந்தைகள்

மற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு தான் கல்வி என்று ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கல்வியை கொடுக்க வேண்டியது அரசாங்களின் கடமை.

வரலாற்றில் இன்று – ஆந்திர பிரதேசம் பிறந்தது

இந்தியா என்பது பல தேசிய இனங்களின் சங்கமிப்பு. தனித் தனியாக சிதறிக் கிடந்த பல ராஜ்ஜியங்களை ஒன்றாக்கியது ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இந்திய அரசு அதிகாரத்தை ஒப்படைக்கும் போதே அவர்கள் எதிர்பார்த்தது “இந்தியா உடைந்துவிடும்” என்பது தான். ஆனால் பல தடைகளைக் கடந்து இன்றும் இந்தியா ஒன்றாய் எழுந்து நிற்கிறது. அதற்கு முழு முதல் காரணம் ஒவ்வொரு இனத்துக்கும் தனியான  மாநிலம் என்று அமைந்து இருக்கும்  மொழிவாரியான  மாநில அமைப்பே.