புதிய ஆசிரியன் – ஜூன் 2015 தலையங்கம்

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல.

இரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)

(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.) “இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் படைத்தானா” என்பது கவியரசு கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு திரைப்பாடலின் பல்லவி. அதன் அடுத்த வரி, ‘…ஏழையைப் படைத்தவன் அவன் என்றால், இறைவன் என்பவன் […]

காவலன் காவான் எனின்…

You added 3 new photos. 1 min · `என்கவுண்டர் என்ற பெயரில் 20 தமிழர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்டது தமிழகத்தைப் பதற வைத்திருக்கிறது. இந்தியக் காவல்துறை பணக்காரர்களிடம் கைகட்டி சேவகம் செய்கிறது; மத்தியதர வர்க்கத்தினரை உதாசீனப்படுத்துகிறது; ஏழை எளியவர் களிடம் கொடூரமாக நடந்துகொள்கிறது – காவல்துறையின் செயல் பாட்டை இப்படி ஒளிவுமறைவின்றி அப்பட்டமாக விமர்சித்திருப்பது காவல்துறை ஆணையமே நியமித்த ஒரு உயர் காவல்துறை அதிகாரி யின் அறிக்கை. இதைத்தான் ஆந்திரக் காவல்துறை சேஷாசலம் காடு களில் […]

வாங்க பழகலாம்!

பிரேம பிரபா எப்படி சார், இருக்கீங்க? உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சே. உடம்புக்கு ஒண்ணும் இல்லையே..? வழக்கமான காலை நடைப் பயிற்சியில் சந்தித்த நண்பர் ஒருவரின் அன்பான விசாரிப்பு. நான் நல்லாத்தான் இருக்கேன் சார். கொஞ்ச நாளா உங்களைத் தான் பாக்கவே முடியலை. மக வீட்டுக்கு போயிட்டீங்களோன்னு கூட நினைச்சேன். காலையிலேதான் உங்க மூத்த மகளைப் பாத்தேன். எப்போ டெல்லியில் இருந்து வந்தா? உங்க பேத்தியும் சீக்கிரம் வளந்திட்டாப் போல… வார்த்தைகள் கடகடவென வெகு இயல்பாக உருண்டு […]

அதிக பதி அதிகப்படி

டாக்டர் ஜி. ராமானுஜம் அல்லல் படவைக்கும் அல்லோபதியை வெறுப்பவர்களுக்குக் கீழ்க் கண்ட அருமையான மாற்று மருத்துவ முறைகள் இருக்கின்றன. (இக்கட்டுரை நகைச்சுவைக்காக மட்டுமே. நோ பொங்கல் ப்ளீஸ். மாற்று மருத்துவமுறை களிலும் சிறந்த முறைகள் உண்டு என்பதை நான் மறுப்பவன் அல்ல). 1. வளையாபதி – உடலை (முதுகெலும்பை) விரைப்பாக வைத்துக் கொண்டு செய்வது. மேலதிகாரிகளுக்குப் பயந்து நடுங்கி அடிமைப் பெண் எம் ஜி ஆர் மாதிரி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்று மருத்துவ முறை. […]

மாற்று அரசியலுக்கான தேவைகளின் காலம்

ஒரு தற்கொலையை முன்வைத்து  எஸ்.வி. வேணுகோபாலன் கஜேந்திர சிங் இப்படி செய்வார் என்று யாருக்குத் தெரியும்? ஆம் ஆத்மி கட்சி நடத்திக் கொண்டிருந்த புது தில்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்க ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த அவர் எடுத்த கோரமான முடிவு அங்கே, அந்த இடத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்று யார் சொல்லக் கூடும்! தேச அளவில் அனைத்துக் கண்களும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கையில் சட்டென்று சுருக்கிட்டுக் கொண்டு சாவைத் தழுவிக் கொண்டார் அந்த மனிதர். தான் வாழ்ந்த […]

புதிய ஆசிரியன்

சந்தா அனுப்ப வேண்டிய முறை ஆண்டுச் சந்தா 120 ஈராண்டுச் சந்தா 230 பத்தாண்டு சந்தா 1000 சந்தா அனுப்ப வேண்டிய முகவரி : புதிய ஆசிரியன், 6 காக்கா தோப்பு தெரு, மதுரை 625 001 தொகையை எம்.ஓ. அல்லது டி.டி. யாக அனுப்புங்கள். மணியார்டர் அனுப்புபவர்கள் மாவட்டம், பின்கோடு உட்படக் குறிப்பிட்டு தெளிவான முகவரியையும் கைபேசி எண்ணையும் தனியாக தபால் கார்டு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ( manomuta@gmail. com) மூலம் அனுப்புங்கள். வங்கிக் […]

தேர்வு மோசடிகள்… அறத்தின் வீழ்ச்சி!

எஸ்.வி. வேணுகோபாலன் ஏதோ கட்டுமான வேலை நடப்பது மாதிரியும், சாரம் கட்டாமலே ஆள் ஆளுக்கு பூச்சு வேலைக்காக ஒரு பெரிய மாடிக் கட்டிடத்தின் மீது ஏறிக் கொண்டிருப்பது போலவும் புலப்பட்டது. அல்லது, விபத்தில் சிக்கிய மனிதர் களை யாராவது தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றக் குவிந்திருப்பார்களோ? அப்புறம் என்னவென்று படித்தால் அராஜகச் செய்தி அம்பலமாகிறது! பீகார் பள்ளிகளில் பட்டவர்த்தனமாக தேர்வு மையங்களில் மாணவர்களுக்குக் கள்ளத்தனமாக உதவி செய்கிற ஏற்பாடு அது! மேன் மேலும் உயரங்களை எட்டவேண்டும் என்று […]

மௌனம் களைந்திடுவோம்

    இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதத்திலி ருந்து 49 சதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மோடி தலைமை யிலான அரசு மக்களவையில் முதலில் நிறைவேற்றியது. ஆனால், அதற்கும் முன்னால் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்து ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது அவரது காலடியில் இந்தப் பரிசை வைத்து வணங்கியது. மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் இரு அவைகளின் இணைந்த அமர்வில் நிறைவேற்றி பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க மோடி […]

பொம்மலாட்டக் கலைக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்

ஐ.வி. நாகராஜன் பொம்மலாட்டக் கலை என்பது ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கலை யாக இருந்தது இந்தக் கலை நிகழ்ச்சி கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங் களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த வித்தியாசமான கலை, அட்டைகளால் தயார் செய்யப்பட்ட பொம்மை களை திரைக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் வேடிக்கையாக கதைக்கு ஏற்ப பின்னணிக் குரல் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிரோட்டம் கொடுப்பார். அதைப் பார்த்து ரசிப்பவர்கள் தங்களை மறந்து அந்த கதாபாத்திரங்களோடு […]