”கெட்ட கனவில்” இணையும் தினமணியும் – வினவும்:

கபாலி சினிமா, வினவு விமர்சனத்தின் மீதான விமர்சனம்: மனநல மருத்துவர் ஷாலினி: ரஜினி படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வசனம் இருக்கும். இதில் இல்லை. பா. ரஞ்சித் தனது அடுத்த பட்த்தில் கருப்பு பெண்ணுக்கு நாயகி வேடம் கொடுக்க வேண்டும். திருட்டு வணிகம்: கட்டணக் கொள்ளைக்கு எதிர்வினையாக திருட்டு DVD-ல் படம் பார்ப்போம். பெரியாரிஸ்டுகள்: பெரியார் படத்தை  காட்டியிருக்க வேண்டும். இப்படியான நேர்மறை விமர்சனங்கள் உண்டு. நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒற்றைக் காட்சி கூட கபாலியில் ரசிக்க […]

நா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்!

பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார்…. தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் என்கிற கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமாருக்கு சிறுவயதில் இருந்தே புத்தகங்களோடு… நெருங்கிய உறவை உருவாக்கிக் கொடுத்தார், அவரது அப்பா. 1975 ஜூலை மாதம் 12ம் தேதி பிறந்த நா.முத்துக்குமார், 2016ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 14ம் தேதி, தன்னுடைய 41வது வயதில் நம்மை விட்டு, இந்த உலகத்தை விட்டு…. அவரது உறவை துண்டித்துக் கொண்டார். சென்னை […]

சாதிவெறி, அராஜகம், பாமக …

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து எங்கள் சுயவிருப்பத்தின்படியே திருமணம் செய்து கொண்டுள்ளோம். என்னை யாரும் கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருப்பு முகமூடிப் போராட்டம் !

அரசியல் ஆதாயத்துக்காக தனி நபர்களின் கருத்துரிமை, வாழ்வுரிமையைத் தாக்கிடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இணையதள செயல்பாட்டாளர்கள் ‘கருப்பு முகமூடி போராட்டத்தை’ முன்னெடுக அழைக்கிறோம்.

கீழ வெண்மணி – சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம்!

இதே தமிழகத்தில்தான் டிசம்பர் 25 தேதியும் வந்தது. ‘கீழ வெண்மணி’ படுகொலைகளை – மறந்துவிட முடியுமா? “அந்த கிராமத்து ஏழைகள் அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டது ஒரு குற்றம். கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் வர்க உணர்வோடு, சுயமரியாதை உணர்வும் பெற்று எதிர்க்கத் தொடங்கிவிட்டது மற்றொரு குற்றம். இதனை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறியும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கமுமே, 3 வயது குழந்தை உட்பட 40 மனிதர்களை உயிருடன் எரிக்கச் செய்தது” இந்தியாவெங்கும் வர்கச் சுரண்டலும், சாதி ஆதிக்க […]

வாழவே நாம் போராடுகிறோம் ! (தலையங்கம் 2)

கடந்த 3 தினங்களில் 3 விதமான தியாகங்களை நாம் நினைவு கூர்ந்தோம். முதலாவது தோழர் நீலவேந்தனுடையது, இரண்டாவது இலங்கைப் போராளி திலீபனது, மூன்றாவது புரட்சியாளர் பகத்சிங்கினுடையது.
மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்ட அளவில் இந்த ‘உயிர்த் தியாகங்கள்’

‘தந்தை பெரியார்’ காலாவதியாக வேண்டும் !

தலைப்பு உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனால், அதுதான் ‘தந்தை பெரியாருக்கு’ அர்த்தமுள்ள நினைவு கூறலாக அமைந்திடும்.

அவர் சாதீயத்துக்கு எதிராக சுயமரியாதையை முன்நிறுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை புகட்டினார். பெண் விடுதலைக்கு உண்மையான குரல்கொடுத்த மனிதராக இருந்தார். பெரியார் விரும்பிய மாற்றங்கள் இங்கே ஓரளவு நடந்திருக்கின்றன.

’மாற்று – சமூக இணையம்’ ஒரு புதிய தொடக்கம் …

அன்பார்ந்த நண்பர்களே, ஆகஸ்ட் 15 முதல் ஒரு புதிய இணையதளம் தொடங்குகிறோம். தமிழில் சமூக வலைத்தள வசதிகளை உள்ளடக்கிய முதல் இணையமாக இது அமைந்திருக்கும். டுவிட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் – போல அல்லாமல், ’மாற்று’ மேலும் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ‘கட்டற்ற மென்பொருள்’ கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இணையத்தில் நமது அந்தரங்கத்திற்கு பாதுகாப்பில்லை என்பதால், மிக அவசியமான தகவல்களை தவிர மற்ற தகவல்களை நாங்கள் கேட்பதில்லை. அவசியமான விவாதங்களுக்கான களமாகவே இதனை அமைத்துக் […]