Home Articles posted by ஆசிரியர்குழு‍ மாற்று
சினிமா

த்ருபங்கா .. திரை அறிமுகம்…….

இந்தி படமான த்ருபங்கா வின் கதைக்களம் பெண்களை மையமாகக் கொண்டது . கஜோல் நடித்தது என்பதால் அவரை மட்டுமே மையப்படுத்தி அமையவில்லை. ரேணுகா சஹானி எனும் பெண் இயக்குநரின் படம் இது ! சற்று பிசகி இருந்தாலும் ஆவணப்படமாக மாறும் அபாயத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார். குடும்பம் எனும் மையப் புள்ளி தான் Continue Reading
அரசியல்

எதற்காக புதிய பாராளுமன்ற கட்டிடம்?

மனித வரலாற்றில் மிக வீரியமான, எழுச்சி மிக்க இந்திய விவசாயிகளின் போராட்டம் எந்த வித சமரசமும் இன்றி ஆளும் வர்க்கத்தை அசைக்கும் ஓர் போராட்டமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதே வேலையில் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகயை நிறைவேற்றுவதற்கு பதிலாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்க்கு அடிக்கல் நாட்டி தனது நீண்டகால திட்டத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது. இதை Continue Reading
அரசியல்

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை.. பேராபத்தில் எண்ணூர் – பழவேற்காடு மக்கள்……..

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் Continue Reading
தமிழ் சினிமா

மாஸ்டர் – விமர்சனம்……..

தனித்த இளம்பிராய பவானியிடமிருந்து துவங்கும் திரையில் டைட்டில் கார்டுக்கு முந்தைய சட்டகத்திலேயே விஜய் சேதுபதி யார் என்பதை அடித்தளமிட்டு விடுகிறார்கள் சீர்திருத்த பள்ளியில் நேரும் வதைகளிலிருந்து எதிர்மறை எண்ணங்களை கிரகித்து வெளியுலகிற்கு வெளியேறும் பவானி சீர்திருத்த பள்ளி சிறுவர்களுடனான தொடர்புகளுடன் சில பழிவாங்கல் கொலைகளுடன் குற்றசம்பவங்களை செய்து பொருளீட்டி நிழலுலக தாதாவாக Continue Reading
பிற

வரமுடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா…………….

“சிந்தனுக்கு என் பிரியங்களும்… வாழ்த்துக்களும்..”– எஸ்.கருணா இதுதான் கருப்பு கருணா தோழர் எனக்காக பேஸ்புக்கில் எழுதிய முதல் வரி. 2010 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளுக்கு பேஸ்புக்கில் அவர் எனக்கு இவ்வாறு வாழ்த்துக் கூறியிருந்தார். அன்று வாழ்த்து தெரிவித்த சில நூறு பேரில் ஒருவரான அவரிடம் தனியான ஒரு அன்பும் பாசமும் உருவாகும் என்று நான் அப்போது Continue Reading
அரசியல்

“மதம் மக்களின் அபின்” எனும் வறட்டுத்தனமான பிரச்சாரம்……………..

“மதம் மக்களின் அபின்” என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன கூற்று திரிபுபடுத்தப்பட்டு, பலரால் பிழையான முறையில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அந்தக் கூற்றில் கார்ல் மார்க்ஸ் மதத்தை போதைப்பொருளுடன் ஒப்பிட்டு சொன்னதாக வறட்டு நாத்திகர்களும் வாதாடுகிறார்கள். அது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான பொய்ப் பிரச்சாரம். கார்ல் மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் வலது தத்துவம்” என்ற Continue Reading
அரசியல்

வரவேற்கிறோம், ரஜினி சார்…..!

சிவாஜிராவ் கெய்க்வாட்….! ரஜினிகாந்த் அவர்களின் இயற்பெயர்! 1975இல் தமிழில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 1979க்குள் 50க்கும் அதிமான படங்களில் நடித்து, பொருளும், புகழும் ஈட்டினாலும்கூட, மன அமையின்றி, திரைத்துறையைவிட்டு விலகும் முடிவை ரஜினி எடுத்தார். பாலச்சந்தர் Continue Reading
கலாச்சாரம்

மார்க்சிய விமர்சன மரபின் தொடர்ச்சி பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர். தொ.ப……….

பாசிசச் சூழலின் பிடியில் நாடு இறுக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்ற இந்தச் சூழலில், பாசிசத்திற்கு எதிராக, ஒற்றை இந்துத்துவத்திற்கு எதிராக, ஏறக்குறைய 40 வருடங்களாகப் பண்பாட்டு ஆய்வுகளின் வழியே, நிலத்தின் பன்முகத்தன்மையை விளக்கிய பெருமகன் பேராசிரியர் தொ பரமசிவன். தொ ப அவர்களின் மறைவுச் செய்தியை கேட்டதிலிருந்து, நண்பர்களும் தோழர்கள் பலரும் அவரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து Continue Reading
இலக்கியம்

டெங் ஷியோ பிங்.. தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்……….. தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி.

1949ல் வெற்றி வாகை சூடிய சீனப் புரட்சியில் தோழர் மாவோவுடன் பங்கேற்றவர். ஏற்ற இறக்கங்களுடன் கூடிய தனது வாழ்வில் எழுபது ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்து, பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சீன மக்கள் குடியரசின் முதல் தலைமுறை, முக்கியத் தலைவர். வயதின் காரணமாக பொறுப்பிலிருந்து தானாக விலகி தனது கருத்துக்கு நியாயம் செய்தவர். அவர் தான் தோழர் டெங் ஷியோ Continue Reading
அரசியல்

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்……….!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்ப டெல்லி தலைநகரம் போராடும்  விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 96,000 ட்ராக்டர்கள்  1 கோடியே 20லட்சம் விவசாயிகள் டெல்லியை சூழ்ந்துள்ளனர். 550க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்த போராட்டம் அரியானா டெல்லி எல்லையில் GT.கர்ணல் ரோடு சிங்கு மற்றும் டிக்ரியல் தேசிய நெடுஞ்சாலையையும், உத்திரபிரதேசம் டெல்லி எல்லையில் காசிப்பூர் Continue Reading