Home Articles posted by Kanagaraj
அரசியல் நிகழ்வுகள்

ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.Continue Reading
அரசியல்

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் உங்கள் பங்களிப்பைச் செலுத்தினீர்கள் என்று பத்திரிகைகள் எல்லாம் புகழாரம் சூட்டிக் Continue Reading
இலக்கியம் சமூகம்

துன்பக்கேணி – யாருக்கு அவமானம்?

சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய கொண்டாடப்பட்ட இரண்டு சிறுகதைகள் நீக்க்கியருக்கிறது. இந்தப் பிரச்சனையில் இரண்டு அம்சங்கள் முன்னுக்கு வருகின்றன. ஒன்று இந்த இரண்டு சிறுகதைகளும் தலித் மக்களை சிறுமைப்படுத்துவதாக இருக்கிறதா என்பது, இரண்டாவது அந்த நோக்கத்திலிருந்துதான் அது எழுதப்பட்டது என்பது.Continue Reading
அரசியல்

படிக்கக் கூடாத கடிதம்-2!

முதல் பகுதி இங்கே பிரீதம்! இப்போது ஒரு வேளை உனக்கு தெரிந்திருக்கக் கூடும். சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் கூட நிர்வாகம் அனுமதித்த எண்ணிக்கைக்கு மேல் கழிப்பறைக்கு செல்ல முடியாது. எத்தனை முறை என்பது மட்டுமில்லை, எவ்வளவு நேரம் என்பது கூட வரையறுக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டுக் கூட மிகக் குறைந்த நேரமே கொடுக்கப்பட்டிக்கிறது. சாப்பாட்டு நேரம் ஆனவுடன் தட்டுக்களை ஏந்திக் Continue Reading
அரசியல்

படிக்கக் கூடாத கடிதம்-1!

அன்புள்ள பிரீதம், எனது அன்பு முத்தங்கள். நேற்றோடு 79 முறை சிறையில் கம்பிகளுக்கு அப்பால் இருந்து என்னை பார்த்துச் சென்றாய். இப்போது எந்த நாளையும் விட நேற்றைய தினம் உனது வருகை என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. நேற்றோடு நமக்கு திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது திருமண நாளை அதை நினைவுபடுத்தாமலேயே என்னை நீ பார்த்துச் சென்றாய். எனக்கு நினைவு இருந்த போதும் அதை Continue Reading
அரசியல் அறிவியல்

தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் தாதுக்கள் அடங்கிய மணல் அள்ளுவதில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றிருக்கிறதா? என விசாரணை நடந்துள்ளது. தமிழக வருவாய்த்துறை ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் குழு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் அறிக்கைகள் வருவதற்கு முன்பாகவே இந்த அறிக்கை முறைகேடுகளையும் விதிமீறல்களையும் Continue Reading
அரசியல் சித்திரங்கள்

திடங்கொண்டோர் மெலிந்தோரை தின்று பிழைத்திடலாமோ?

உணவுப் பாதுகாப்பு மசோதா மீது இருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதா வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் வேண்டும்; அனைத்துப் பொருட்களும் வேண்டும், 35 கிலோ அல்லது நபருக்கு 7 கிலோ; இதில் எது அதிகமோ அது வழங்கப்பட வேண்டும்; அரிசி ரூ.2/- Continue Reading