ஏன் யோகாசனம் செய்ய வேண்டும்?

சித்தர்கள் நோய்கள் வராமலும் வந்த நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் எளிய வழிமுறைகளை உருவாக்கி கொடுத்துள்ளார்கள். இந்த யோகாசன பயிற்சிகளை தினசாரி வாழ்வில் செய்து வந்தால் நாம் நோய்களில் இருந்து விடுபட முடியும். யோகத்தின் பலன்கள்:- யோகாசனம், உடல் உறுப்புகளை நன்றாக இயங்கவைக்கிறது. சுரப்பிகளின் இயக்கத்தை சீரமைக்கிறது. இதயத்தையும், இரத்த ஊட்ட நாளங்களையும் ஊக்குவிக்கிறது, இதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்தும் காப்பாற்றி அவைகளை நிவர்த்தி செய்கிறது. சோம்பலினை முற்றிலும் போக்கி புத்துணர்ச்சியளிக்கிறது. உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. […]

யோகா – வரலாறு…

(யோகாசனம் என்ற கலை, உலகம் முழுவதும் ஏராளமானோரால் பின்பற்றப்படுகிறது. மிக அதிக விகிதத்தில் மருத்துவர்களைக் கொண்டுள்ள கியூப தேசத்திலும், யோகாசனத்தை தினமும் செய்துவர மருத்துவர்கள் . இந்தியாவிலோ, அது ஆன்மீகவாதிகள் சிலரின் தனியுடைமையாக மாற்றப்பட்டு, கடுமையான விலைவைத்து விற்கப்படுகிறது. யோகாசனம் ஒரு அறிவியல், அது அனைவருக்குமானது, ஒவ்வொருவரும் கற்று, மேம்படுத்தப்படவேண்டிய கலை என்கிற அடிப்படையில் ‘மாற்று’ இணையத்தில் இந்தத் தொடர் வெளியிடப்படுகிறது) யோகா எங்கிருந்து உருவானது, யாரால் உருவாக்கப்பட்டது என்ற சரியான வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் […]

யோகாசனம் – ஒரு அறிவியல் கலை …

தவ நிலை எட்டு இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானம் சமாதி அயமுறும் அட்டாங்கம் ஆவது மாமே. -திருமந்திரம். (552) இயமம் – தவம். நியமம் – ஒழுக்கம். எண்ணிலா ஆதனம் – எண்ணற்ற ஆசனங்கள். நயமுறு பிராணாயாமம் – நலம் தரும் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி, பிரத்தியாகாரம் (புலண்களை அடக்குதல்). சயமிகு தாரணை, தியானம், சமாதி – வெற்றி உண்டாக்கும் தாரணை, தியானம், சமாதி. அயமுறும் […]