நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானி டகாகி கஜிதா, கனடாவின் சட்பரி நியூட்ரினோ வானியல் ஆராய்ச்சி மையத்தின் (SNO) ஆர்தர் மெக்டொனால்ட் ஆகிய இருவருக்கும் அக்டோபர்  6 அன்று நியூட்ரினோ அலைவுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. SNO தொடங்கப்பட்டு அந்நிய நாட்டு ஒத்துழைப்புடன் 17 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த ஆராய்ச்சியின் தன்மை குறித்து ஷுபஸ்ரி தேசிகனுக்கு ஆர்தர் மெக்டொல்ட் அளித்த நேர்காணல் தி ஹிண்டு நாளிதழில் அக்டோபர் 13 அன்று வெளியாகியுள்ளது. பேட்டியில் அவர் […]

புளூட்டோவைப் பற்றி சில தகவல்கள்

நாசாவிலிருந்து ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன் புளூட்டோவை நோக்கி நியூ ஹாரிசான் (New Horizon) என்ற விண்கலம் ஏவப்பட்டது. அது இந்த ஆண்டு ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி 17.19 மணிக்கு புளூட்டோவிலிருந்து 12,472 கி.மீ. தூரத்தைச் சென்றடைந்தது.

போலியோ இல்லாத இந்தியா …

1.5 லட்சம் மேற்பார்வையிடுவோர் கண்காணிப்பில் 24 லட்சம் தடுப்பூசி போடுவோர் வீடுவீடாகச் சென்று, 17.2 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்து கொடுத்த பிறகே இந்த சாதனையை நாம் எட்ட முடிந்தது.

அய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..

“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

மீண்டும் சந்தைக்கு வந்தது மாகி – பாதுகாப்பு? …

“இடியாப்பத்தை மாகி நூடுல்ஸ் கவ்வும்; இடியாப்பம் மறுபடி வெல்லும்” என்று நம்மவர்கள் எழுதி மை அழிவதற்கு முன்னரே மாகி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தடை வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் பாதுகாப்பான உணவு பற்றிய விவாதத்தை இப்பிரச்சனை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. மீண்டும் என்றால்..? அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயனை மறந்திருக்க மாட்டீர்கள். 2003ஆம் ஆண்டில்  அவர் பெப்சி குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலப்பு பற்றி அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்தபோது கிளம்பிய சர்ச்சை வெறும் சர்ச்சையாகவே முடிந்துபோனது. […]

பேராசையின் உச்சகட்டம்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் பயணிக்கும் போது, இருமருங்கிலும் பச்சை பசேலன்ற வயல்வெளிகள் கண்ணுக் கினிய காட்சிகளாய் அமைந்த காலம் ஒன்றிருந்தது. வைகை அணை யிலிருந்து கால்வாய் மூலம் பாயும் நீர்வளத்தால் மேலும் வளங் கொழித்தது மேலூர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல சிறப்புக்களில் ஒன்று, அது தொடர்ச்சியின்றி இருப்பது.  மற்றொன்று அதன் தொன்மை மிக்க வலுவான பாறைகள். கிரானைட் என்றழைக்கப்படும் இப்பாறைகளின் அருமையை கட்டடக் கலை வல்லுநர்கள் நன்கறிவர். இயற்கை அளித்த இந்தக் கொடையை வெட்டி […]

பருவநிலை அகதிகள் …

பேராசிரியர் கே. ராஜு சிரியா, ஆப்கானிஸ்தான், எரிட்ரியா போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், மோதல்கள் காரணமாக ஐரோப்பிய யூனியன் எல்லையில் இதுவரை சுமார் 4,00,000 அகதிகள் தஞ்சமடையத் தயாராக வந்து சேர்ந்திருக்கிறார்கள். சின்னஞ்சிறிய படகுகளில் நெருக்கியடித்துக் கொண்டு மக்கள் தங்கள் நாட்டைவிட்டுத் தப்பி ஓடி வருகிறார்கள்.  தமது நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை செலுத்தப்பட்டது.. தண்ணீர்க் குண்டுகள் பாய்ந்தன.  அய்லான் என்ற சிறுவனின் உடல் கரையொதுங்கிய பிறகு ஐரோப்பிய […]

தன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)

இந்த மாதத்துக்கான புள்ளி இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்திற்கு சக்தியூட்டக்கூடிய இந்தப் புள்ளியின் அமை விடத்தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்தப்புள்ளி சுண்டுவிரல் நகத்தை ஒட்டி நகத்தின் கீழ்ப்பகுதி விளிம்பில் மோதிர விரல் பக்கமாக அமைந்துள்ளது (படத்தில் காட்டியபடி). இந்தப் புள்ளியை ஆள்காட்டி விரலால் கையை எடுக்காமல் மூன்று நிமிடங்கள் மிதமாக அழுத்திக்கொள்ள வேண்டும். இடது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை வலது ஆள்காட்டி விரலாலும், வலது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை இடது ஆள் காட்டி விரலாலும் தொடுசிகிச்சை […]

உணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …

ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்வார். அங்குள்ள சர்வரிடம் புகழேந்திப் புலவர் நள வெண்பாவில் தமயந்தியை வர்ணிப்பதுபோல் ஒரு ஐந்து நிமிடம் உவமானம் உவமேயங்களுடன் ஒரு ஊத்தப்பத்தை வர்ணிப்பார். மழைச்சாரல்போல காரட் வெங்காயம் எல்லாம் தூவிப் பொன்னிறமாக எடுத்து வரச் சொல்வார். அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த சர்வர் ஒரு கரப்பான்பூச்சியைப் பார்க்கும்போது காட்டும் அளவு கூட சுவாரஸ்யம் காட்டாமல் சாருக்கு ஒரு ஊத்தப்பம்! என்பார். இது போலத்தான் நிஜவாழ்விலும் நாம் படுசுவாரஸ்யமாகப் பொன்னியின் […]