அரசியல்

ஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . !

தன் வீட்டு மட்டக் குதிரைகளின் பசியாற்றுவதற்காக, புல்லறுக்கச் சென்ற 8 வயது சிறுமி அஸிஃபா-வின் உடல் மீது இந்துத்துவாவின் வன்மம் கோரத் தாண்டவமாடி இருக்கிறது. பிஜேபியின் மாபாதகத்திற்கு இந்த தேசத்தின் எட்டு வயதுக் குழந்தை இரக்கமில்லாமல் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறாள்.

எட்டு வயது குழந்தை. அவளைக் கடத்தி அருகில் உள்ள கோவிலின் தேவஸ்தானத்தில் நாட்கணக்கில் அடைத்து வைத்து, விழிக்கும் போதெல்லாம் கடுமையான மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள். சஞ்சிராம் என்னும் வருவாய்த்துறை அதிகாரி திட்டமிட, அவனது மகன், அவனது மருமகன், அவர்களின் நன்பனொருவன் சேர்ந்து இந்த சகிக்க முடியாத கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரியும் உடந்தை.

காணாமல் போன அஸிஃபா, உடலெல்லாம் சிதைக்கப்பட்டு காட்டிலிருந்து கண்டெடுக்கப்படுகிறாள். பாவப்பட்ட பெற்றோரும் அந்தப் பகுதி மக்களும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறார்ர்கள். துப்பு கிடைத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். பண்டிட்கள் பிஜேபியின் தலைமையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊர்வலம் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் பார் அசோஷியேஷனும் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.

பிஜேபியின் மாபாதகத்திற்கு இந்த தேசத்தின் எட்டு வயதுக் குழந்தை இரக்கமில்லாமல் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறாள்.

ஆஸிஃபா என்பவள் தனியல்ல. ஒட்டு மொத்த தேசத்தின் அடையாளம். அந்த கயவர்களும் தனியல்ல அவர்கள் RSS ன் அடையாளம். இவர்கள் மனிதர்கள் அல்ல. மிருகங்கள். இவர்களை மத அடிப்படையில் ஆதரிப்பவர்களும் மனிதர்களல்ல. வாய்ப்பு கிடைக்காத அல்லது தைரியம் குறைந்த மிருகங்களே.

இந்துத்துவத்திற்கு ஆதரவாக இவர்கள் வாதாடும் அனைத்தும் ஆர் எஸ் எஸ் எடுத்துப்போட்ட குரூரமான வாந்திகள்தான். சொந்த சிந்தனையுள்ளவன் தவறுகளை சிந்திப்பான். மதவெறி பிடித்தவன் தன்னை தன் மதத்தை தற்காக்க அடுத்த முயற்சியாக வன்முறையில், மிரட்டலில் இறங்குகிறான். இந்த கயவர்களை தண்டிக்கும் முன் வெறுப்பை வளர்க்கும் வெறுப்பில் வளரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்வதே சரியானது.

மாற்று மதத்தினரை கொன்று தன் மதத்தை காப்பதாக கூச்சமின்றியும் தயக்கமின்றியும் கொலை செய்ய வைக்கும்  தைரியத்தை தரும் ஆர் எஸ் எஸ் ஒரு கொடூரமான  பயங்கரவாத இயக்கமாகும்.

ஷாகா என்ற பெயரில் தற்காப்பு என்ற பெயரில் கொலை செய்ய பயிற்சி அளிக்கும் இந்த இயக்கம் உங்கள் பகுதிகளில் இருந்தால் புறக்கணியுங்கள். உங்கள் குழந்தைகளை காப்பாற்றி கொள்ளுங்கள்.  குற்ற செயல்களை சரியே என நியாயப்படுத்துவதை தொழிலாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் இச்சமூகத்தின் புற்று நோய்.

மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம் முன்னின்று நடத்தியதுதான் பாபர் மசூதி இடிப்பு. இந்தியாவில் வெடித்த அநேக குண்டுவெடிப்புகளுக்கான சூத்திரதாரர்கள் இவர்கள்தான். மதப்பிரச்சனைகளை உருவாக்கி அதன் எதிர்வினைகளை மக்கள் முன் பூதாகரமாக்கி இன்னொரு மதத்தை எதிரியாக்கி தம்மை வளர்க்கும் இதன் அரசியல் பாதுகாப்புக்கு அமைந்த ஆட்சியும் கட்சியும்தான் பிஜேபி.

இந்திய ஐ.ஐ.டிகளில் இடப்பங்கீடு முறையை நூதனமாக ஆட்டையப்போட்டு படித்து  வெளிநாட்டில் சொகுசாக வாழும் &  உயர்சாதியாக தம்மை வர்ணிக்கும் பலரின் பொருளாதார உதவிகளில் நிற்கும் இந்த இயக்கம் இந்தியாவை நகர்த்துவது இந்து ராஜ்யம் எனும் சமத்துவமற்ற நிலையை நோக்கி. கலவரம் செய்தோமா கல்லெடுத்து எறிந்தோமா என அப்பாவியாக கேட்கும் பத்ரி சேஷாத்ரி போன்றவர்களுக்கு இந்த மறைமுக உதவிகள் தூண்டல்கள் தெரியாதா என்ன?

கொண்ட கொள்கைக்கு எந்த லெவலிலும் இறங்குவார்கள் என்பதற்கான உதாரணங்கள்தான் கோத்ரா ரயில் தீ வைப்பும்  அதனை சாக்காக வைத்து குஜராத்தில் வெறியாட்டம் ஆடியதும் . கர்ப்பிணி பெண்ணின் வயிறு கீறி சிசுவை கொன்ற மதப்பேய்களின் வரலாறு மிக கொடூரமானது.

கர்ப்பிணிக்கு எழுந்து இருக்கை கொடுக்கும் மனிதாபிமானமும் பூங்காக்களில்  தன் குழந்தையோடு விளையாடும் யாரென்று தெரியாத குழந்தைக்கும் சேர்த்து சாக்லேட் கொடுக்கும் அன்பும் கொண்ட மகத்தான மனிதர்கள் நடுவே இந்த ஆர்.எஸ்.எஸ்  மாபாதகர்களின் சித்தாந்தங்கள்  கொலை செய்யவும் பிறப்புறுப்பில் சூலாயுதம் சொருகவும் கற்று தருகின்றன.

சகல தகுதிகளிருந்தாலும்,  ”கட்டப்பாவை” அடிமையாக இருப்பதே பெருமை என கற்றுக்கொடுக்கும் தந்திரமான தர்மம் இவர்களுடையது. ஏகலைவனின் கட்டை விரல் வெட்டிய, சம்பூகனின் தலையை வெட்டிக்  கொன்ற, பெண்ணடிமைத்தனத்தை போற்றுகின்ற, உயர்வு தாழ்வு எனும் நிலையில் சமூகத்தை என்றென்றும் வைத்திருக்க விரும்புகின்ற,  குரூரமான நீதியற்ற ராஜ்யம் இவர்களுடையது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களில் இணைந்த அல்லது இவர்களை ரகசியமாக ரசிக்கும் இந்து மத நண்பர்களே விழித்துக் கொள்ளுங்கள். பூக்ககளால் அலங்கரிக்கப்பட்ட புதைகுழி. புன்னகைகளில் குடியிருக்கும் குரூரமாகும் ஆர்.எஸ்.எஸ்.

எப்போதெல்லாம் உங்கள் மனதில் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ்  போன்ற மதவாத மதவெறி பிடித்த இயக்கங்களின் சாமர்த்தியமான வாதங்கள் சரியென தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் வீடு பக்கத்து வீடு குழந்தைகளையும் ஆஸிஃபா போல பலி கொடுக்க போவதாக உணருங்கள். மதவெறி இயக்கங்கள் எந்த மதமாகினும் புறக்கணியுங்கள். மதங்களின் உருவாக்கமே சுரண்டலின் நிலையை தக்க வைத்திட உருவாக்கப்பட்ட நிறுவனமயமாக்கப்பட்ட ஒன்றுதான் என உணருங்கள். உலகை படைத்தவன் கடவுள் என்றால், அதிலே பெயரை சூட்டி குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள். ஆஸிஃபா திரும்ப கிடைக்க மாட்டாள். நீங்களும் உங்கள் மவுனமும் பக்தியும் இன்னொரு ஆஸிஃபாவை பலியிடாதிருக்கனும் என்பதே விருப்பம்.

மேலும், ஒவ்வொரு முறை ஒரு குரூரம் அரங்கேறும் போதும், அந்தந்த நேரத்தின் உணர்வெழுச்சியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள் என்பதெல்லாம் முழு தீர்வாகாது. அவர்களை வளர்த்தெடுத்த வெறுப்புணர்வை விதைத்து கட்டமைத்த இந்துத்வ இயக்கமும் கட்சியும்தான் முழுப்பொறுப்பாகும். கழுவிலேற்ற வேண்டியது முதலில் இத்தகைய கொலைகளை சிதைப்பை தூண்டும் நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி-களைத்தான்..

#justiceforAsifa

– சதீஷ் செல்லதுரை.

Related Posts