சினிமா தமிழ் சினிமா

அறம் காண விரும்பு . . .

– வினோத் மலைச்சாமி

இந்தியாவின், ISRO மூலமாக விண்வெளியில் ஏவப்பட 800 கோடிக்கு தயாரிக்கப்பட்ட ஏவுகணை, உலக நாடு மற்றும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்கள் (ஆபத்தான பார்வை ) உற்று நோக்க நிலத்தடி நீர் தன்மையை உறிஞ்சி எடுக்க மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் 381 உயிர்களை தொட்டு பிஞ்சு குழந்தைகள் வரை காவு வாங்கி இருக்க. மேல்நோக்கி பறக்க கருவி இருக்கும் இந்தியாவில். கீழ்நோக்கி பாய்ந்து அப்பாவி உயிர்களை மீட்க கருவி கண்டுபிடிக்க முடியாத நிலை தான்.

ஆண்டாண்டு காலமாக இந்த தேசத்தில் பிறந்த பாவத்திற்காக கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களை இழிவில் இருந்து மீட்க இன்று வரை எந்த கண்டுபிடிப்பும் கருவியாக மாற்றமும் அடையவில்லை. ஆழங்களால் மட்டும் மாறுபட்டு நிற்கும் மலக்குழியும் ஆழ்துளை கிணறும் ஒன்றே அதற்கு கருவிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை
இத்தாலியின் நீர் ஊற்றுகளில் பிடிக்கப்பட்டு அதை பாட்டில் தண்ணீராக மாற்றி விற்கும் முறை நடைமுறையிலிருந்தது. அந்த முறை இந்தியாவின் பார்லி நிறுவனத்தால் 1965-க்கு பின் மும்பையில் கொண்டுவரப்பட்டது. இத்தாலிய நிறுவனமான (bislari ) பிஸ்லரி மூலமாக அது இந்தியாவில் காலூன்றியது. ஒரு சர்வதேச ஒப்பந்தமாக, இதுதான் நிலத்தடிநீர் சர்வதேச வணிகமாக மாற்றியமைய முதல் வடிகாலாய் அமைந்தது.

அதன் பின் வந்த உலகமயமாதல் ஏற்கனவே இடைச்செருகல் ஆக இருந்த பிஸ்லரி போன்ற பல நிறுவனங்களுடன் சேர்ந்து தேசம் எங்கும் தங்களின் கார்ப்பரேட் ஆதிக்கத்தை பரப்பி நிலத்தடி நீரை அரசு எந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் இருந்து உறிஞ்சி எடுக்க தொடங்கினார்கள்.
அப்படி உழவுக்கும், குடிக்கவும் பயன்படும் நிலத்தடி நீர் உப்பாகி சுவை இழந்து இருக்க வீசும் காற்றில் கூட ஈரம் இல்லாமல் போக. உழவு தொழிலை செய்ய முடியாமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து ஒருநாள் கூலித் தொழிலாளர்களாக, உடனே தாக்கத்திற்கு உள்ளாக்கிடக் கூடிய (Vulnerable community ) மக்களாக மாற்றியது. உலகமயமாக்கமும், உலக வெப்பமயமாக்கமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

அரச வம்சத்தின் சித்தார்த்தன், நாட்டை விட்டு வெளியேறி துறவு நிலையை எட்டி புத்த மகானாக மாறிய பின், காடுகளுக்கு நடுவிலே தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார். ஆகவே அவர் செல்லும் வழியெங்கும் அவரிடம் ஞாயம் கேட்கவும், தங்களின் துயரத்தை கூறி தீர்வு பெற்றுச் செல்லவும் மக்கள் வந்து போவர். மக்களுக்கு மனநிலையை உறுதியும், நம்பிக்கையும் பெறச்செய்தவர் புத்த மகான்

காடுகளில் இருக்கும் போதி மரத்தின் கீழ் அமர்ந்தது போல அரசாங்க அதிகாரியான மதிவதனி வறண்டு போன கழனிகள் மத்தியில் குடில் அமைத்து புல்லேந்திரனின் துயரத்தை தீர்க்க அங்கியில் தோன்றிய புத்த மகான் போல ஞாயம் (அறம் ) போதித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வு எவ்வாறு திருவள்ளுவர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தையும் , புல்லேந்திரனின் மகளுமான தன்ஷிக்காவின் வாழ்வில் நேர்கோட்டில் வந்துபோனது என்பதையும் அன்றாட வாழ்வியலில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் (BPL ) வர்கத்தினர் அனுபவித்து வருகிறார்கள் என்பதே “அறம்” திரைப்படம் வழியாக இயக்குனர் கோபிநயினார் உருவாக்கிய திரைக்கதை

அறம் யாரை குறி வைத்து இருக்கிறது
என்ன கபடி விளையாட விடாதவன் ?
அவன மட்டும் நீச்சல் அடிக்க விட்டுடுவானா என்ன ?
நமக்கு படிப்பு சம்பாதிக்க இல்ல…
கௌரவமா தலைநிமிர்ந்து வாழ

என்று கணவன் மனைவி பேசிக்கொள்வதும்.
4 வயது குழந்தை ஆழ்குழாய் கிணறுகள் விழுந்துவிட்டது என்ற தகவல் மக்களிடம் இருந்து தாசில்தார் மற்றும் கிராம நிர்வாகி அலுவலகத்தில் சொல்லப்படுகிறது.
தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலனஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வர வற்றிப்போன நீர் நிலையில் இருக்கும் மடை அருகே தீயணைப்பு ப்ரேக் டவுன் ஆகிறது .
தாசில்தார்: இந்த தீயணைப்பு வாகனத்தை ஒதுக்கி வைத்து மற்ற வண்டிகள் சென்று விடலாம் . ஆனால் local politics காரணமாக வாகனம் செல்லும் பாலம் சரிசெய்யாமல் இருக்கிறது
Local politics என்பது இந்த சாலையில் நீ சாவு நிகழ்வுகளை நடத்த கூடாது , இந்த சாலை வழியாக நீ படிக்க செல்ல கூடாது.
போலிஸ் அதிகாரி : யார் மேல கல் எடுத்து அடிக்கனும் னு
சரியா பார்த்து அடி
காவலர்: இத காரணமா வச்சே அந்த அம்மாவ அனுப்பிடுங்க
போலிஸ் அதிகாரி: இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பொறுக்கி இருக்கான் மேடம்

அரசியல், ஆதிக்கம் (எ)அதிகாரம் , அரசு நிர்வாக கட்டமைப்பு
என்ற மக்கள் ஜனநாயகத்தில் சிரடுகளாய் வேர் பதித்தி இருக்கும்
அராஜகத்திற்கு
So called power politics structure யை குறிவைத்து இருக்கிறது.

மதிவதனி உணர்ந்த அரசியல் அறம்
கலெக்டர் மதிவதனி: உங்களுக்கு குடிக்க நல்ல நீர் கிடைக்காத வரை நான் தண்ணீர் குடிக்க மாட்டேன் என்று கூறியவிட்டு உயர்ந்த ரக காரில் இரண்டு மூன்று காவல்துறை வாகனத்தின் பாதுகாப்பில் அடுத்த நகர்வை நோக்கி நகர்கிறார்
யதார்த்தத்தில் இருந்து விலகிய அரசியல், பாவப்பட்ட மக்களுக்கு நல்ல உடை கிடைக்காத வரை நான் உடை அணியமாட்டேன் என்று சொல்லி இரவில் பூச்சிகள் தொந்தரவு இல்லாத மிட்டா மிராசு வீடுகளில் ஒய்வு எடுப்பதும்
கலெக்டர் மதிவதனி:
கண்டிப்பா அந்த கவுன்சிலரை கைது செய்வோம் ? குழந்தையவும் கட்டாயம் காப்பாத்துவோம் ?
தொழிலாளி : இந்த இரண்டும் நடக்காது
என்று சொல்ல
கலெக்டர் மதிவதனிக்கு இருமல் வந்து இரும
எதார்த்த அரசியல் : நீர் மறுக்கப்பட காரணம் வறுமையும், சாதியும் என்பதை உணர்ந்து கலெக்டர் மதிவதனி நீரை பருகும் போது.ஒரு மகான் சௌதாகர் குளத்தின் நான்கு புறங்களையும் சுற்றி வளைத்து மக்களை நிறுத்தி.
எந்தக் குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என மனிதர்கள் ஒதுக்கினார்களோ, அந்தக் குளம் அவர்களின் முகங்களை வாஞ்சையுடன் பிரதிபலித்தது. முதல் ஆளாக அந்த மகன் ஒரு கை நீர் அள்ளிப் பருகினார். பின் அனைவரும் இறங்க, குளம் கொண்டாட்டக் களம் ஆகியது.
பாதை இல்லாமைக்கும் , அரசு அடக்குமுறைக்கும், அரசு நிர்வாக அலட்சியத்திற்கும் சாதியே காரணம் என்பதை நீர் உண்டு அறம் கண்டார் மதிவதனி.

அறம் பொழிந்தோர்
நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார். பெண்ணிய ஆளுமை என்ற கட்டில் அவ்வளவு எளிதாக மட்டும் பொருத்தி விட முடியாது காரணம் விடாமுயற்சி என்பது பாலினம் ரீதியாக நிலைத்தோர், நிலையற்றோர் என்று இருக்கிறது ஆகவே தான் கோபி நயினார் தனது ஆன்மாவில் இருந்து மதிவதனி என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நயன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் கொஞ்சம் ஸ்டைல் நடைகளை சற்று குறைத்து இருக்கலாம் அது மட்டுமே கதையோடு உட்டாத செயற்கையாக இருந்தது. அனைத்தும் பெர்ஃபெக்ட்.
ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தையின் குடும்பமும் அந்த குடும்ப கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக பொருந்து இருக்கிறது தாய் , தந்தை, அண்ணன் , மாமன் என்று எதிர்த்த குடும்ப பிரதியாக திரைப்படம் எங்கும் கான முடிந்தது .
விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பின்மை, போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த எதார்த்த மக்களை போற்றிப் புகழ்ந்தே ஆக வேண்டும் …

அறத்தை உருவாக்கியவர்கள்
ஒம் பிரகாஸின் திறம்பட ஒளிப்பதிவு Exterior காட்சிகளை உடலும் சதையாக ஒட்டி இருக்கும் உணர்வாக பிரமிக்க வைக்கிறது.ஆகவே மேக்கிங் பக்கம் அசுர களம் கண்டவராக நிற்கின்றார் கோபி நயினார்.
ரூபன் படத்தொகுப்பு விவாத அரங்கு காட்சியில் நெறியாளர் கேள்விக்கு பதில் தரும் நபர் திடீர் என்று கேமராவை பார்த்து விடுவார் அந்த இடத்தை தவிர ஒரு இடத்தில் எடிட் அணுகுமுறையில் ரம்ப் எடுத்து இருப்பார் அவ்வளவு அழகு, கதைக் களம் உலை கொதிக்கத் தொடங்கி முடியும் வரை நம்மை நாற்காலியில் கட்டி வைத்து விடுகிறார் ரூபன்
லால்குடி இளையராஜா கலைநயம் படம் நெடுக இட்டு செல்லும் குறியீடுகளை வைத்து நம்மை அறக்கல்வியை ஞாபகப்படுத்தி இருக்கிறது . ஆழ்துளை கிணறு வடிவாக்கம் தொடங்கி அதை ஒட்டிய கூடாரம் அதில் இருக்கும் கருவிகள் என்று எதார்த்ததில் இருந்து பிரமாண்ட இடம் நோக்கி எடுத்து சென்ற காட்சியாக பங்குக்கு வித்திட்டு இருக்கிறது.
ஜீப்ரான் ஆளும் காட்சிகள் கதாப்பாத்திர வலிகளை நம் கண்ணீர் வழியாக விதைத்து இப்படி பட்ட படத்தில் இந்த காட்சிகள் வரும் என்று ஒரு அனுமானம் இருக்கும் ஆனால் ஜீப்ரான் நம் அனுமானத்தை மடைமாற்ற பெரும் உதவி இருக்கிறார். பாடல்களை சரியாக pitch செய்து இருக்கிறார் கதை களம் மாறாமல். மேலும் “அறம்” திரைப்படம் பார்த்த ஒருவருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல ஒரு மாத காலம் ஆகிறது என்றால் அதற்க்கு ஜீப்ரான் என்ற இசை இயக்குனர் பங்கு மிகப்பெரியது.

இயக்குனர் கோபி நயினார்

மற்ற இயக்குனர்களுக்கும் இவருக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இயக்குனர்கள் கதை களத்தை தங்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை களத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே, அதாவது ஒரு இயக்குனர் நேரடியான (நிகழ்வு நடந்த) கதை களம் நோக்கி சென்றால் தான் அந்த இடத்தின் Warm condition-ஐ நம் மீது நீர் பாய்ச்ச முடியும். அவற்றைப் போல் நிகழ்காலத்தில் நடக்கும் அனைத்து மனித மாண்புக்கு எதிரான இழிவையுமொரு நல்ல களப்பணியாளர் (Field Worker ) மட்டுமே அதை scripts work செய்து காட்சி வடிவாக்கம் செய்ய முடியும்.இதை visual insight implementation என்று கூற வேண்டும்.

Related Posts