பிற

மண்டேலா-அம்பேத்கர்: ஒடுக்கப்பட்டோரின் குரல்கள்!

இறப்பு என்பது‍ எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், அவர்கள் இந்த சமூக நலன்களுக்கு‍ எவ்வளவு பங்காற்றியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து‍ ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படும். அப்படி‍ நிறவெறிக்கு‍ எதிராக கறுப்பின மக்களின் குரலை ஒன்று‍ திரட்டிய நெல்சன் மண்டேலா அவர்களின் பங்கு‍ மகத்தானது.

நேற்றைய தினம் (டிசம்பர் 5, 2013) அவர் மறைந்து‍விட்டார். நெல்சன் மண்டேலாவின் சமூக பங்களிப்பை சற்று‍ நினைவு கூர்வோம்.

பழங்கால மனிதகுல வாழ்க்கையின் மிச்ச சொச்சமாகிய சாதிவெறிக்கு‍ எதிராய் தலித் மக்களை ஒன்று‍ திரட்டிய பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு தினம் இன்று‍ (டிசம்பர் 6, 2013).  பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் சமூக பங்களிப்பையும் நினைவு கூர்வோம்.

 Mandelaதென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999

பிறப்பு ஜூலை 18, 1918
முவெசோ, தென்னாப்பிரிக்கா
இறப்பு திசம்பர் 05 2013 (வயது‍ 95)
வாழ்க்கைத்
துணை
எவெலின் மாசே (1944–1957)
வின்னி மண்டேலா (1957–1996)
கிராசா மாச்செல் (1998–இன்று)
இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்டேட், தென்னாப்பிரிக்கா
சமயம் மெதடிசம்
கையொப்பம் நெல்சன் மண்டேலா's signature

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர்.

தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள்.

1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.

மண்டேலா 1962 இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

1990 இல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.

1994 மே 10-ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 Ambedkarமுதல் இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவர்

பிறப்பு பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர்
ஏப்ரல் 14, 1891
மாவ் (Mhow), பிரித்தானிய இந்தியா (இப்போது மத்தியப் பிரதேசம்)
இறப்பு திசம்பர் 6 1956 (வயது‍ 65)
தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள் பாபா சாகேப், பாபா, பீமா, மூக்நாயக்
படித்த கல்வி நிறுவனங்கள் மும்பை பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளாதாரப் பள்ளி
அமைப்பு(கள்) சுதந்திர தொழிலாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு
பட்டம் முதல் இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவு குழாமின் தலைவர்
அரசியல் இயக்கம் தலித் பௌத்த இயக்கம்
சமயம் பௌத்தம்
வாழ்க்கைத் துணை இராமாபாய் அம்பேத்கர் (தி. 1906)
சவிதா அம்பேத்கர் (தி. 1948)
விருதுகள் பாரத ரத்னா
கையொப்பம்

பிரித்தானிய இந்தியாவில் மாவ் (Mhow) எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.

1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு  நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றினார்.

இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.

Source: Wiki

Related Posts