அறிவியல்

அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் எனும் மூட நம்பிக்கை …

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் குறித்த அச்சமூட்டுதலும், செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இது அறிவியல் உண்மை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார்.

அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை எனவும், அப்படியொரு கருத்தாக்கம் தவறானது என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

அறிவியல் அல்ல:
கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

கத்திரி வெயில் என்பது 100 சதவீதம் வானிலை துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாகத்தின் வார்த்தை. மேஷ ராசியில் சூரியன் நுழைவதை கத்திரி வெயில் என்பார்கள். வானிலை துறை ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் தான். இது வருடா வருடம் நிகழும் இயல்பான செயல். எனவே கத்திரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

சோதிடர்களின் நம்பிக்கை:

பஞ்சாங்கத்தின் விளக்கம் ஜோதிடர் சந்திரசேகர பாரதியிடம் கேட்டோம். அவர் கொடுத்த விளக்கம் “ பஞ்சாகத்தின் கணிப்புகள் படி, கத்திரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி முடியும். கத்திரி வெயில் 25நாட்கள் இருக்கும். நெருப்பு கிரகமான சூரியன் பரணி நட்சத்திரத்தில் இருக்கும் போது கத்திரி வெயில் ஆரம்பிக்கும். சூரியன் மேஷ ராசியில் வரும் போது தான் உச்சத்துக்கு போவார்,” என்றார்.

முடநம்பிக்கையை பின்தொடர்வதா?:
ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெய்யில் என தனியாக தலைப்பிட்டு ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இதற்கு அரிவியல் பூர்வமான விளக்கம் இல்லை. அத்துடன் இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்கியபோது, மாநிலத்தில் பல பகுதிகளில் கோடை மழை தொடங்கியது, ‘காற்றழுத்த தாழ்வு’ குறித்த வானிலை மைய அறிவிப்பே மெய்யானது குறிப்பிடத்தக்கது.

Related Posts