சினிமா

த்ருபங்கா .. திரை அறிமுகம்…….

இந்தி படமான த்ருபங்கா வின் கதைக்களம் பெண்களை மையமாகக் கொண்டது . கஜோல் நடித்தது என்பதால் அவரை மட்டுமே மையப்படுத்தி அமையவில்லை. ரேணுகா சஹானி எனும் பெண் இயக்குநரின் படம் இது ! சற்று பிசகி இருந்தாலும் ஆவணப்படமாக மாறும் அபாயத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார்.

குடும்பம் எனும் மையப் புள்ளி தான் பெண்ணுக்கு எனத் தீர்த்து விட்ட நிலவுடமை சமூகத்தின் கோரப் பிடியில் இருந்து விலக எண்ணும் பெண் சந்திக்கும் பிரச்சனைகள்அவளின் ஆசைகள்எதிர்பார்ப்புகள்நிராசை ஆகும் போது ஏற்படும் பாதிப்புகள்முரண்கள்தேடும் தீர்வுகள் எனக் கதையை அழகாக விரித்துதெளிவாக படமாக்கியுள்ளார் !

நாயகியாக இருக்கும் பெண் எந்த நேரத்திலும் மற்றவர் கண்களில் வில்லியாக உருமாறித் தெரிகிற வாய்ப்பும் சூழலும் கொண்டதே இந்திய குடும்ப அமைப்பு இது வெளிப் படுத்தும் ஆதிக்கமும் அடிமைத் தனமும் குடும்ப வாழ்வில் பின்னிப் பிணைகிறது அதனால் இயல்பாக மலர வேண்டிய விசயங்கள் கூட சிக்கலானதாகிறதுஅதை எதிர் கொள்ளத் தேவையான தைரியம் தான் நாயக நாயகி பாவம் கொள்கிறது.

கோமாவில் உள்ள அம்மா நயன் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் இந்த நிலையில் கூட அவரை நேசிக்க இயலாமல் வெறுப்பின் உச்சத்தில் உள்ள மகள் அனு ஒரு திரைக் கலைஞர் தந்தை முகம் கண்டறியாத அனுவின் மகள் மாஷா ஒரு சாதாரணமான பெண் இவளால் வெறுப்பு நிறைந்த தாய் அனுவின் மனதை நேசத்தால் குளிர்விக்க முடிகிறது !

கைகளால் பேனா பிடித்து எழுதித் தள்ளிய எழுத்தாளர் தனது சுய சரிதையை எழுத முடியாமல் உடல் நிலை பாதிக்கப் படுகிறாள்அதில் மன பாதிப்பு முக்கிய காரணமாய் பங்கு வகிக்கிறதுஅவளை பேட்டி எடுத்து புத்தகம் ஆக்க முயற்சி செய்யும் பத்திரிக்கையாளர் இதைக் கண்டு கொள்கிறார்அனுவின் மனமாற்றத்திற்கு இவரும் காரணமாகிறார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை இன்னொரு பெண் வாழ்வை நசுக்குமாமனிதர் எனும் பொதுச் சொல்லுக்குள் ஏன் மனுசி அடங்கு வதில்லைஒரு மனிதரைப் புரிந்து கொள்வது என்பது என்னஅறிவு …செயல் …இதயம் ..? வாழும் சூழல் …இவை யாவும் ஆணைப் புரிந்து கொள்ள மட்டும் தான் பொருந்துமா பெண்ணுக்கு பொருந்தாதா ?

குடும்பம்தாய்மை எனும் அளவுகோல்களை மட்டுமே கொண்டு பெண்ணின் தன்மையை அளக்கும் சமூகத்தில் ஆசைஉணர்வுகள்சுயசிந்தனைலட்சியம் இந்த சொற்கள் அனைத்தும் ஆணுக்கு மட்டுமே உரிமையானவையாஏதாவது ஒன்றில் பெண் தீவிரமாய் இருந்தால் அவளை பெண் எனும் சொல்லில் அடக்க மறுத்த போதும்மனுசி எனும் சொல்லுக்குள் கூட அடக்க முடியாமல் நம்மை எது தடுக்கிறதுஅவளைக் குற்றவாளி ஆக்கி முச்சந்தியில் நிறுத்த எது நம்மை தூண்டுகிறது?

காலைமாலைஇரவு எனும் முக்கால நியமங்களை தவறாது கடைபிடித்து நடப்பது தான் குடும்பத்தில் பெண்ணின் கடமை என்றால் அவளுள் எழும் ஆசைகளுக்கும்உணர்வுகளுக்கும்லட்சியங்களுக்கும் குடும்ப அமைப்பில் இடம் கிடையாதா?

ஒரு ஆண் காதலிக்கும் போது அந்தப் பெண்ணிடம் எந்த விசயம் அவனை ஈர்த்ததோ அதுமணமானதும் அப்பெண்ணிடம் இருந்து மறைந்து விட வேண்டுமாதன்னை ஈர்த்த விசயத்தை அவள் தொடரும் போதுதன்னைப் பெற்ற தாய் அல்லது தான் பெற்ற குழந்தைகள் என அவர்களும் சேர்ந்து அதை நேசிக்கச் செய்ய கணவன் எனும் ஆணால் முடியாதா?

தாய் முதன்மை என கணவன் பிரிவதை இயல்பாக எடுத்து நியாயம் சொல்லும் நம்மால்தன் விருப்பம் கருதி அதை வலியுறுத்தும்அதற்காக பிரிந்து செல்லும் மனைவியை இயல்பாய் ஏற்க முடியாதா?

பெண்ணின் சிறு சிறு தவறுகளைக் கூட இடித்துக் காட்டும் சமூகம் பொய் முகம் காட்டும் ஆண்களை எளிதில் நம்புகிறதுஇந்த சமூகத்தில் ஒரு அங்கமாகவும் உள்ள அம்மா நயன் தன் எழுத்தார்வத்திற்காக நல்ல குணம் கொண்ட கணவனை பிரிந்து சென்றுபொய் முகம் காட்டிய ஆணை நம்பி மறுமணம் செய்கிறாள்தனது பெண் குழந்தையின் பாதுகாப்பிற்கு அவனே எமன் என்பதை அறியாமல் மகளின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்.

குழந்தை உருவாவதில் ஒரு சிறு பங்களிப்பை மட்டும் செய்து ஆண் பெண்ணின் உடலுக்கும் வாரிசுக்கும் ஏகபோகம் கொண்டாடுவது குறித்து சிந்திக்க வைக்கிறாள்தனது இனிசியல் மட்டுமே குழந்தைகளுக்கு போதும் என்று சட்டப் போராட்டம் செய்து சாதிக்கிறாள்ஆனால் பெற்ற மகளின் அன்பைப் பெற இயலாமல் மரணத்தின் இறுதி நொடி வரை வாழ்வின் தண்டனையை அனுபவிக்கிறாள் .

தாயை வெறுத்த மகள் அனுவின் மணவாழ்வும் தோற்றுப் போக தனிப் பெண்ணாக அவள் தன் மகளை வளர்க்கிறாள்தந்தை முகம் அறியாத தன் மகள் மாஷா சமூகத்தில் படும் பாடு அனு அறியாதவைமாஷா அந்தத் துயரம் தன் குழந்தைக்கு வரக்கூடாது என்பதற்காக சனாதனக் குடும்பத்தில் மணமுடித்து வாழத் தீர்மானிக்கிறாள்மாஷாவின் வயிற்றில் குழந்தை உருவான பின்பே மகள் சந்தித்த பிரச்சனைகளை அனு அறிகிறாள்.

இனிசியல் மாற்றம் பள்ளியில் தந்த அவமானம் உள்ளிட்டு அனு பாதிக்கப் பட்ட எந்தப் பிரச்சனையும் அவளின் தாய் நயன் அறிந்திருக்க வில்லை எனக் கூறியதை நம்ப மறுத்தவள்அதே நிலையில் தனது மகள் மாஷா முன்பு தான் நிற்கும் கையறு நிலை தாயை உணர்ந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கிறதுஅவள் மீது மெல்லிய நேசம் பிறக்கிறதுஆனால் நடைமுறை வாழ்வில் அவள் அதைக் காட்ட இயலா வண்ணம் நயனை மரணம் தழுவுகிறது.

இதைக் காணும் போது தோசையை திருப்பிப் போடுவது போல் வாழ்க்கையை திருப்பிப் போட முடியுமாபூஜ்யத்திலிருந்து துவங்க முடியுமாகுதறப் பட்ட வாழ்க்கையை அழகாக்குவது சாத்தியமா எனும் அம்மா நயனின் புகலற்ற ஆதங்கம் நமதாக மாறுகிறது.

அம்மாவும் நானும் விரும்பினோம்வெறுத்தோம்எதுவானாலும் எங்களின் முடிவு சுயமானதுஆனால் நீ மற்றவர்கள் கைகளில் உன் வாழ்வை ஒப்படைத்து இருக்கிறாய்வளைந்து கொண்டே இருக்கும் வரை அவர்கள் உன்னை வளைப்பர்நீ நிமிரத் துவங்கும் போது உடைத்தெறியப் படுவாய் படத்தின் இறுதியில் அனு தன் மகள் மாஷாவிற்கு சொல்லும் இந்த பதில் நமக்கும் கூட பதிலாகிறது !

சமூக மாற்றத்திற்கு விரிவான உரையாடல் தேவைப்படுகிறது. குடும்பம் ஜனநாயகத் தன்மையுடன் இருந்தால் தான் உரையாடல் சாத்தியம். அதற்கான பயணத்திற்கு இது போன்ற படங்கள் உதவட்டும்!   

  • செம்மலர்

Related Posts