அரசியல்

கொரோனா அரசுக்கு கற்று கொடுத்த பாடம்……..

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை இந்த தொற்று நோய்யை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் கண்டுபிடிப்பது மூலமே தற்போது கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை கண்டறிவதற்கான வேலைகளை எல்லா நாடுகளும் செய்து வருகிறது.

இதன் தொடர்சியாக இந்தியாவிலும் சமீபத்தில் ராபிட் பரிசோதனை கருவி மூலம் அதிக அளவில் கெரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்று பரிசோதனைக்கு தேவையான ராப்பிட் கருவியை இறக்குமதி செய்தனர். ஆனால் அப்படி இறக்குமதி செய்யப்பட்ட பரிசோதனை கருவியை வாங்கியதில் பல சர்சசை எற்ப்பட்டுது. மேலும் இந்த ராப்பிட் பரிசோதனை முடிவில் பல மாறுபாடுகள் வருகிறது அதனால் யாரும் இதை பயன்படுத்த வேண்டாம் என்று ICMR அறிவித்து. தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரே பரிசோதனை முறை PCR எனப்படும் பாலிமர்ரேஸ் செயின் ரியாக்சன் என்ற பரிசோதனை முறை மட்டுமே பயன்படுத்தபட்டு வருகிறது. இதனால் தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளை வைத்து PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி இந்த PCR பரிசோதனையில் ஈடுப்பட்டுள்ள ஒரு ஆய்வாளரரோடு நடத்திய உரையாடல் .

இவர் தற்போது தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஓரு கொரோனா நோய் தெற்று கண்டறியும் ஆய்வகத்தில் பணியில் இருக்கிறார். அவர் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்தார்.

கொரோனோ நோயை தடுக்கும் பணியில் முன்னணியில் இருப்பதை நிங்கள் எப்படி உணர்கிறீர்கள் ?

                             இந்தப் பணியை செய்வதில் ஒருவிதமான திருப்தி இருக்கிறது. ஆனால் இந்த பணியைதான் நாங்கள் செய்கிறோம் என்று இன்றைக்கு வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். அப்படி சொல்லும் பட்சத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த பணிக்காக என்னை அழைந்தபோது எனது குடும்பத்தில் மிக அச்சத்துடன்தான் என்னை அனுப்பினார்கள். காரணம் இந்த பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள வழிமுறைகல் இருந்தாலும். தற்போது இந்த பணியில் ஈடுப்படும் ஊழியர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டுகிறது என்ற செய்தியை பார்க்கிறோம். இந்த செய்திகளின் தாக்கமும் தற்போது வரை இந்த தொற்று நோய்யை எதிர்த்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டமே இதர்கு காரணம். இதனால்தான் நான் இந்த பணியை செய்கிறேன் என்று சொன்னாலும் ஒரு அச்ச உணர்வுடன்தான் எங்களை பார்க்கிறார்கள்.

நீங்கள் பணிபுரியும் ஆய்வகத்தில் கொரோனா நோய் கண்டறியப்பட்டும் பணி எப்படி இருக்கிறது ?

                            நான் இருக்கக்கூடிய இந்த ஆய்வகத்தில் இதுவரையில் பெரிய அளவிலான கொரோனா நோய் தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் மிக சமீபத்தில் இங்கும் முதல் கொரோனா நோய் இருப்பதை பரிசோதனை மூலம் உறுதி செய்ப்பட்டது. அது மிகப்பெரிய ஒரு அச்ச உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. இந்த PCR பரிசோதனையை மேற்கொள்ள குறைந்தது ஆறு மணியிலிருந்து ஏழு மணி நேரம் ஆகும். கடைசி ஒன்றரை மணி நேரம்தான் மிக முக்கியமானது. அதாவது நோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவதற்கான நேரம் அது. அந்த நேரத்தில் நெஞ்சு படபடக்கும். இந்த பரிசோதனை மாதிரிகளில் கொரோனா நோய் தொற்று வரக்கூடாது என்று தோன்றும். 

நான் பணி புரியும் ஆய்வகம் அமைந்து இருக்கும் மருத்துவமனையில் தினசரி எங்கள் பரிசோதனை ரிசல்ட்டுக்காகதான் காத்து இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் வருகின்ற பரிசோதனை ரிசல்ட் பாஸ்டிவாக வரவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் அப்படி ஏதாவது தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மொத்த மருத்துவமனையும் பரபரப்பாகி விடும். உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் எங்கு இருக்கிறாரோ அவரை அங்கிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாட்டைச் செய்வார்கள். இந்த மாதிரியான தருணம் என்பது மிக மோசமானது முக்கியமானதும் கூட. அதனால் பரிசோதனை செய்யும்போது பாசிட்டிவ் வரக்கூடாது என்ற மனநிலையிலேயே இருப்போம் அனைவரும்.

இந்த PCR டெஸ்ட் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ?

                              PCR பரிசோதனை, இது ஒரு மிக பிரபலமான பரிசோதனை முறை. இந்த பரிசோதனையை மிக துல்லியமாக செய்ய தெரிந்தவர்கள் தமிழகத்தில் மிக சொர்ப்பமே. அடிப்படையில் இந்த PCR பரிசோதைனை கருவியை வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் இருக்கிறது ஆனால் இந்த பரிசோதனையை 100 பேருக்கு பரிசோதிக்க  குறைந்தது 4 லட்சம் செலவாகும் அதனால் பெரிய அளவில் இதை யாரும் பயன்படுத்த முன்வருவதில்லை. 
                               மேலும் பலவகையான PCR இயந்திரங்கள் இங்கு உள்ளது. அந்த அந்த நோய் தொற்று தன்மையை பொருத்து இந்த PCR கருவியும் மாறுபடும். கொரோனோ தொற்ற நோய்க்கு தற்போது பயண்படுத்த கூடியது ஆர்.டி. பிசிஆர் ( RT PCR ) என்ற வகையான PCR கருவியே. இந்த பரிசோதனையை செய்வதற்க்கு முன்னால் ஆர்.என்.ஏ பிரித்தெடுத்தல் (RNA Extraction) பிராசஸ் செய்வோம் அதற்கே 4 மணி நேரம் தேவைப்படும், ராப்பிட் பரிசோதனை முறையில் மாறுப்பாடு வந்நததால் அதை பயண்படுத்த வேண்டம் என்றார்கள். ராப்பிட் பரிசோதனை முறையில் ஆன்டிபாடி வள்ர்ச்சி பெற்ற பிறகே நாம் அந்த பரிசோதனை முறையை பயன்படுத்தும்போது கொறோனா நோய் தொற்று இருப்பதை கண்டறிய முடியும். அப்படி என்றால் ஒரு நபர்க்கு கொரோனோ நோய் தொற்று எற்ப்பட்டு அவர்களுக்கு ஆன்டிபாடி வளர்ச்சி அடைவதற்கு முன்னபே ராப்பிட் பரிசோதனை மேற்கொண்டல் அது நமக்கு பலன் அளிக்காது. ஆனால் இந்த ஆர்.டி. பிசிஆர் முறையில் நாம் கொரோனோ நோய் தொற்று ஆரம்பகட்டத்தில்  இருந்தாலே இநத பரிசோதனை முறை அதை நமக்கு துல்லியமாக கண்டறிய உதவும். 

ஒரு PCR பரிசோதனையை எடுப்பதற்கு முன்பு எப்படி தயாராவீர்கள் ?

                          பொதுவாக நுண்ணறிவு தொற்றுநோய் ஆய்வகம் எனப்படும் மாலிகுலர் வைராலஜி லேபரட்டரி ( Molecular Virology Laboratory ) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த ஆய்வகம் அதனதன் வேலை தன்மைக்கு ஏற்றவாறு நாம் அங்கு பணியாற்ற வேண்டியது உள்ளது. இந்த ஆய்வகத்தில் நாங்கள் உள்ளே செல்வதற்க்கு முன்னால் கைகளை சானிடைசர் வைத்து சுத்தமாக சுத்தபடுத்திய பிறகு டோனிங் ( Donning ) என்பதை செய்யவோம். டோனிங் என்பது இந்த ஆய்வகத்திற்கு உள்ளே செல்வதற்க்கு முன்னால் செய்யபட வேண்டிய ஒரு நடைமுறை. அந்த நடைமுறை படி முதலில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) பாதுகாப்பாக அணிந்து செல்வோம். இதை எப்படி அணிய வேண்டும் எந்தெந்த உபகரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிய வேண்டும் என்ற வழிமுறை வழி காட்டப்பட்டுள்ளது அதை அப்டிதான் பின்பற்ற வேண்டும். அதேபோல அந்த  ஆய்வகத்தை விட்டு வெளியே வரும்போது டோர்பிங் ( Dorfing )  செய்வோம். அதாவது எப்படி நாம் தனிப்பட்ட நபர் பாதுகாப்பு உபகரணங்களை ( PPE ) அணிந்தமோ அதனை போலவே எப்படி ஒன்றன்பின் ஒன்றாக அதனை பாதுகாப்பாக எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இப்படி பயண்படுத்தபட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எப்படி அப்புறப்படுத்த வேண்டும என்ற நடைமுறையும் உள்ளது. அதை பின் பற்றியே அந்த உபகரணங்கள் அப்புறப்படுத்தப்படும். 

                    இந்த ஆய்வகத்தில் உள்ளே போக ஒரு வழியும் மீண்டும் வெளியே வர தனி வழியும் அமைத்து இருபார்கள். இப்படி பல நெறிமுறைகள் உள்ளது இதை பின்பற்றுவது மூலமே கொரோனா போன்ற கொடிய நோய் தொற்றுகளை ஆய்வகத்தில்  கையாள முடியும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது ?

                        இந்த அனுபவம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால். நான் பணிபுரியும் ஆய்வகத்தில் நான் வந்த போது அந்த ஆய்வகத்தில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இல்லை, இதற்கு காரணம் ஒரு ஆய்வகத்தை தொடங்குவதற்கு முன்பு அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதனைப் பற்றிய அனுபவம் தமிழகத்திற்கே மிக குறைவு. தமிழகத்தில் ஆரம்பம் முதலே இயங்கி வரக்கூடிய ஒரு நுண்ணணுயிர் மற்று தொற்று நோய் ஆய்வகம் என்பது சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டி டுயூட் மட்டுமே. அந்த நிறுவனத்தில் மட்டுமே நோய் தொற்று சமந்தப்பட்ட ஆய்வை செய்வதற்கான கட்டமைப்பு உள்ளது.

தற்போது கொரோனோ நோய் தொற்றை அதிகளவில் கண்டறிய வேண்டும் என்ற நோக்கில் பல ஆய்வகத்தை தமிழகத்தில் உருவாக்கினார்கள். இது ஒரு திடீர் உருவாக்கமே அதனால் அப்படி உருவாக்கப்பட்ட ஆய்வகத்தில் எல்லாவிதமான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறி. கொரோனோ நோய் தொற்றை கண்டறிவதற்கான கட்டமைப்புகளை மட்டுமே கொண்டுள்ள ஆய்வகம் இங்கு அதிகமாக இப்போது இருக்கிறது. ஆனால் அதை தாண்டி அந்த ஆய்வகத்திற்கு அடிப்படையான சில தேவையான அடிப்படைகளை கொண்ட கட்டமைப்புகளை பற்றி தமிழக அரசாங்கத்திற்குகோ அல்லது தற்போது ஆய்வகத்தை உருவாக்கிய தமிழக சுகாதார துறைக்கோ போதுமான எந்த அறிவியல் புரிதல் இல்லை.

                  மிக அவசர அவசரமாக ஆய்வகத்தை ஏற்படுத்தியதால் பல குறைபாடுகள் இருந்தது. இந்த மாதியான ஆய்வகத்தில் இதற்காக பணி புரிய வேண்டிய பணிபுரிய வேண்டிய ஊழியர்களும் போதுமான அளவில் இல்லை. அரசாங்கம் ஆய்வகத்தை உருவாக்கிய பிறகே அதற்கான ஊழியர்களை தேடி கண்டு பிடித்தது. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட ஊழியரான நாங்கள் ஆய்வதிற்கு வந்து பார்த்த பிறகு அதிர்ச்சி அடைந்தோம். காரணம் போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லை. பின்பு இந்த ஆய்வகத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். உடனடியாக தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றோம். அதனை அனைத்தையும் உருவாக்கி கொடுத்த பிறகே தற்போது இங்கு கொரோனோ நோய் தொற்று பரிசோதனைகளை ஆய்வு செய்து வருகிறோம்..

அரசாகத்தின் செயல்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறார்கள் ?

               நமது நாட்டில் பல திட்டங்கள் நல்லாதான் இருக்கிறது ஆனால் அதை அமுல்படுத்துவதில் தான் பெரிய பிரச்சனை இவர்களுக்கு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் 2013 டிசம்பர் மாதம் 23ம் தேதி அன்று அரசாணை எண்:305 என்று தமிழக அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில்  சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம்பத்தூர் அகிய மருத்துவக் கல்லுரி உள்ள மருத்துவமனைகளில் நுண்ணணு தொற்று நோய் ஆய்வகத்தை முதற்கடடமாக உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக உயர்மட்ட மருத்துவ குழுவினர்களின் பரிந்துரையின் அடிப்டையில் கட்டுப்படுத்த முடியாத மோசமான தொற்று நோய் காலக்கட்டதை தமிழகம் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கதிலேயே இந்த அரசாணையை 2013லேயே முன்னால் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் 4.41கோடி ரூபாய் நிதியும் ஓதுக்கப்பட்டது ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இது நடைமுறைக்கு வரமலேயே கிடப்பில் போடப்பட்டது. 

ஒருவேளை அந்த அரசாணை அடிப்படையில் ஆய்வகம் உருவாக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று ஏற்ப்பட்ட ஆரம்ப காலகட்டத்திலேயே கிங் இன்ஸ்டிடுயூட்டை போலவே தமிழக அரசாங்கத்தின் கீழ் நான்கு ஆய்வகம் செயல்ப்பட்டுருக்கும். அவ்வாறு செயல்ப்பட்டு இருந்தால் இன்றைய பாதிப்புகள் குறைந்து இருக்க வாய்ப்பு ஏற்ப்பட்டு இருக்கும்.

                மேலும் இந்த ஆய்வகத்தில் பணிபுரிய கல்வி தகுதியும்   அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி எம்.எஸ்சி பயோ டெக்நாலஜி, மற்றும் எம்.எஸ்.சி மாலிக்குலர் வைராலஜி படித்தவர்கள் தகுதியானவர்கள். குறிப்பாக மாலிக்குலர் வைராலஜி படிப்பு என்பது அதிக அளவில் நுண்ணணு தொற்று நோய் மற்றும் நுண்ணணுவை பற்றி அதிக தகவல்களை கொண்ட படிப்பு ஆனால் இந்த படிப்பை கொண்ட கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. 

                    பொதுவாக லைஃப் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்வு செய்யும் அனைவரும் இந்த PCR டெஸ்ட் சம்பந்தப்பட்ட தகவல்கள்   தியரிட்டிக்களாக படிப்பதுண்டு. ஆனால் அவர்களுக்கு மேல் படிப்பிலேயே பிராக்டிகலாக எப்படி PCR பரிசோதனையை செய்ய வேண்டும் என்று சொல்லித் தரப்படுகிறது ஆனால் நடைமுறையில் PCR கருவியை பிராக்டிகலாக பயன்படுத்துவது சமந்தம்யாக குறைந்த எண்ணிக்கையில் இருக்கூடிய  கல்வி நிறுவனகளும் சொல்லி தருவது இல்லை . 

                    எனவே தமிழக அரசு இனி வரும் காலத்திலாவது PCR பரிசோதனை சம்மந்தமான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு கல்லூரிகளிலேயே இந்த படிப்பை கொண்டு வர வேண்டும்.

 மேலும் படிக்கும்போது தியரி மற்றும் பிராக்டிகல் இரண்டையும் கற்பிப்பது மூலம் இனி வரும் காலங்களில் நமக்கு PCR போன்ற கருவியை பயன்படுத்தத் தெரிந்த நபர்கள் அதிகமாக கிடைப்பார்கள். அதேபோல கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த அரசாணையை  அமல்படுத்தும் பட்சத்தில் நுண்ணணு பாடத்தை தேர்வு செய்து  படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியும். இந்த மாதியான நடவடிக்கைகளே இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவதுறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரசு கொரோனாவில் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் இது

 • ஆ.லட்சுமி காந்த் பாரதி.

Related Posts