அரசியல்

65 ஆண்டுகளுக்குப் பின் ஹிரோஷிமா – டெட்ராய்ட்

இரண்டு குண்டுகள் வெடித்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிரோஷிமா மற்றும் டெட்ராய்ட். அங்கு என்னதான் நடந்தது?

நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான்…

1945 ஆகஸ்டு மாதத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இரண்டு அணுகுண்டுகள் வெடித்து, இரு நகரங்களும் நாசமாகிப் போனது.

1. 1945 இல் – ஹிரோஷிமா (HIROSHIMA)

65 ஆண்டுகளுக்குப் பிறகு – ஹிரோஷிமா (HIROSHIMA)

2. ஹிரோஷிமா நிகழ்வின் 65 ஆண்டுகளுக்குப் பின்  – டெட்ராய்ட் (DETROIT)

இந்த இரண்டின் மீதும் நீண்ட காலத்திற்கான பேரழிவை ஏற்படுத்தியது எது?

  1. அணுகுண்டு, (இது அமெரிக்காவால் உலக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வீசப்பட்டது)
  2. வங்கி மற்றும் பெருநிறுவனங்களின் உலகமயமாக்கல், அவுட்-சோர்ஸிங். மேலும், வேலைவாய்ப்பு, தொழிலாளர் சங்கங்களை நசுக்கியது மற்றும் வால் ஸ்டிரீட் ஆகியவைகளே. (சொந்த மக்களுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுத்தும் கொள்கையின் விளைவுகள்)

வளமான, சுதந்திரமான, அரசின் கட்டுப்பாடுகளற்ற, பொருளாதாரத்திற்கு எந்த நாடு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறதோ,  அங்குதான் தெரு விளக்குகள் 48 சதவீதம் எரியவில்லை, நிரந்தர வேலைவாய்ப்பில்லாமல் திரிகிறார்கள் பல இளைஞர்கள், பெருகிவரும் குற்றங்கள்… இவையெல்லாம் மோட்டார் நகரம் அமெரிக்காவின் மெக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த டெட்ராயிடில் (Detroit) தான். இந்நகரம் சந்திக்கிற காட்சிகள் இவை. அமெரிக்காவில் ஒரு காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்னணியில் நின்ற அந்த நகரம், திவாலாக அறிவிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

இதற்கான முக்கியக் காரணம், அரசுத்துறை நிர்வாகங்களுக்கான நிதி கெடுபிடிகளுக்கும் தனியார் துறையினருக்கான சலுகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட காரணங்கள்தான். நகர நிர்வாகத்தின் கடன் பளு 18 பில்லியன் டாலர் (இந்தியப் பண மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 339 கோடி ரூபாய்).

“இந்தியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரமே” அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று மக்களை நம்ப வைக்க முயல்கிற ஆட்சியாளர்களும், அரசியலுக்காக எதிர்த்துக் கொண்டே அதே கொள்கைகளையே வலியுறுத்துகிறவர்களும், தாராளமய பிரச்சாரம் செய்பவர்களும் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்களா? இல்லை மக்களாகிய நாம் விழித்துக் கொள்வோமா? இந்தியா மட்டுமல்ல வளரும் நாடுகள் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

Related Posts