அரசியல்

2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு!

நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் அது பிழையான உத்தியாகவே (Strategic Error)  முடியும். காரணம் மிக எளிது. இந்த தேர்தல் ஆளுமைகளுக்கு (மோடி vs ராகுல்) இடையிலான தேர்தலாக மட்டும் அல்ல காங்கிரஸ் vs பாஜக என்ற இரு பெரும் (?) கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக கூட நிகழப்போவது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இக்கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் தங்களின் தளங்களை இழந்துவிட்டு இருக்கின்றன.

தமிழகம், உபி, பிகார் ஆகிய மூன்று மாநிலங்களின் முதன்மையான போட்டி என்பது அங்கு வலுவாக உள்ள பிராந்தியக் கட்சிகளுக்கு இடையில்தான். அதாவது ஜெ எதிர் கலைஞர் டைப் தேர்தல் தான். பொன்னார், ஞானதேசிகன் எல்லாம் மற்றும் பலர் லிஸ்டில் தான் இங்கே. இந்த மாநிலங்களின் மொத்த லோக்சபா தொகுதிகள் 160.

ஒரிஸ்ஸா, ஹரியானா, ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் போட்டி என்பது காங்கிரஸ் எதிர் பிராந்தியக் கட்சிகள் என்பதாக உள்ளது. இந்த மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 102.

மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் போட்டி என்பது காங்கிரஸ் எதிர் இடதுசாரி எதிர் பிராந்தியக் கட்சி என்பதாக மும்முனை போட்டி. இந்த மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 65.

கர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் (அ) காங்கிரஸ்+பிராந்தியக் கட்சிகள் எதிர் பாஜக+பிராந்தியக் கட்சிகள் என்பதாக போட்டி ஏற்படுகிறது. இங்கு மொத்த தொகுதிகள் 111.

ஆக நேரடி மோதலில் காங்கிரஸ்-பாஜக ஈடுபடவுள்ள தொகுதிகள் என்பவை குஜாரத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள 105 தொகுதிகளில் மட்டும் தான். அதாவது மொத்த தொகுதிகளான 543 தொகுதிகளில் ஐந்தில் ஒரு பங்கில் மட்டுமே.

இதில் மற்றும் ஒரு பெரிய வேடிக்கை தமிழகம், கேரளம், ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 1700. அதாவது 1700 MLA தொகுதிகள். இவற்றில் பாஜக பெற்றுள்ள MLA க்கள் வெறும் 20 பேர் மட்டுமே. பாஜவுக்கு இரண்டு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள இந்த மாநிலங்களின் மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை மிகச்சரியாக 200. இங்கெல்லாம் மோடி என்பவர் NO ENTITY. ஆனாலும் தங்களுக்கு MLA-க்களே இல்லாத இந்த மாநிலங்களில் இருந்து எல்லாம் MP-க்கள் கொட்டோ கொட்டுன்னு‍ கொட்டப் போவதாக அக்கட்சியினர் சமுக வலைத்தளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் முழங்கி வருவது எவ்வளவு அபத்தம்.

காங்கிரசின் பலம் குறைந்தபட்சம் அது நானூற்று ஐம்பது தொகுதிகள் வரை வெற்றி/தோல்வியை எதிர்பார்த்து போட்டியிடலாம் என்ற அளவிற்கு அமைப்பு ரீதியான வலுவில் உள்ளது. பலவீனம் அத்தனை தொகுதிகளிலும் தனது முழு கவனத்தையும், பலத்தையும் செலவிட்டாக வேண்டும்.

பாஜகவின் பலம் அது காங்கிரசை மட்டுமே நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியுள்ள 105 தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் துணையுடன் காங்கிரசை எதிர்க்க வாய்ப்புள்ள 140 தொகுதிகள் என சுமார் 240 தொகுதிகளில் மட்டும் தனது மொத்த கவனத்தையும் குவித்தால் போதும். பாஜவின் பலவீனம் மீதமுள்ள 300 தொகுதிகளில் அது டெபாசிட் திரும்ப பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும் என்பதே.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தலா 150 இடங்களைத் தாண்டவே குட்டிக்கரணம், தோப்புக்கரணம் எல்லாம் போட வேண்டியிருக்கும். நடைபெற உள்ளது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் மாநில தேர்தல்கள்…

நன்றி: Vijaya Lakshmi முகநூல்

Related Posts