ஆபாசமான சூழலை மாற்றுங்கள்:சாதத் ஹசன் மண்டோ!

சாதாரண மக்களின் வாழ்க்கையில் நடக்கின்ற அன்றாட நிகழ்வுகளை தனது வலிமையான வார்த்தைகளில் கூர்மையான படைப்புகளாக மாற்றியவர் சாதத் ஹசன் மண்ட்டோ. அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது என்று வெகுமக்கள் மத்தியில் உள்ள கருத்தாக்கங்கள், பலரின் வாழ்க்கையாக உள்ளது என்பதை ரத்தமும் சதையுமாக மண்ட்டோ வெளிப்படுத்தியுள்ளார். அவரின் படைப்புகள் படிப்பவர்களின் மனசாட்சியை உலுக்குகிறது; பதறச் செய்கிறது; உடலை சில்லிடச் செய்கிறது.

இன்சூரன்சை இறையாக்கத் துடிக்கும் நரிகள்!

சமீபத்தில் பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund) இந்திய நிதித்துறையின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிரமமான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் போது கூட இந்திய இன்சூரன்ஸ்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. இன்சூரன்ஸ்துறையின் சொத்து மதிப்பு இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 16 % க்கும் மேல் இருப்பதாக அந்த அறிக்கை பாராட்டுகிறது. உலகின் வளர்ந்த நாடுகளில் கூட இது போல இல்லை என்றும் குறிப்பிடுகிற அந்த அறிக்கை இன்சூரன்ஸ் […]

சட்ட மன்ற தேர்தல்களில் கிரிமினல்கள்

தற்போது (2013) ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், டெல்லி, ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டுள்ள, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , குறித்த விபரங்கள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது .

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ!”

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து பழக்கப்பட்ட சங்கராச்சாரியார்களின் கைகள் நீதிமன்றத் தீர்ப்பை கேட்டவுடன் வெற்றி என்று சைகை காட்டும் வகையில் உயர்ந்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் […]

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள்!

கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் நவம்பர் 29, 1908 (1908-1957) பிறந்த நாள் இன்று. வாழ்க்கை வரலாறு‍ நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தவர். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக அவரது‍ வாழ்க்கை தொடங்கியது. பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக கலையுலக வாழ்வை துவக்கினார்.

தெகல்கா வழக்கும், அது எழுப்பும் சில கேள்விகளும் !

‘தெகல்கா’ (Tehelka) பத்திரிகை நிறுவனத்தில் அலுவலக வேலைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது உடன் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணிடம்  தலைமைப் பதிப்பாசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கோவா அரசாங்கமும் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளன. இது மிகச் சரியான நடைமுறை. பொதுவாக பாலியல் குற்றங்களைப் பொறுத்த வரை, காவல்துறை தானாகவே நடவடிக்கை எடுக்க வேண்டிய “வாரண்ட்” தேவையில்லாத குற்றங்களாகும். மேலும் இது போன்ற குற்றங்கள் பற்றிய தகவல் பொது […]

பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள்!

நவம்பர் 27, 1820 எங்கல்ஸ் பிறந்த நாள்! கம்யூனிச ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் : Friedrich Engels (1820 -1895) இல் பிறந்தார். அவர் கம்யூனிச தத்துவார்த்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு‍ நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர். அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனாலும் சுயமாக கல்வி பயின்று‍ மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு‍ நான்’ என அழைத்தார்.

இப்படியும் சிரிக்கலாம் – கவிதை

நண்பர் மங்களகுடி  நா.கலையரசன் எழுந்துவரும் இளம் கவிஞர். அவரது நெடுங்கனவு என்ற கவிதை தொகுப்பு மிகவும் கோபத்துடன் சமூக அவலங்களை சாடி வந்த நல்ல கவிதை நூல். அவரது சிரிப்புக் குறித்த ஒரு கவிதை இது. காசு பணம் தேவையில்லை கரைந்துவிடும் கவலையில்லை காத்திருந்து கைக்கொள்ளும் கடல் கடந்த பொருளுமில்லை தள்ளுபடி தவணைமுறை தந்து வாங்க தேவையில்லை நமக்குள்ளே நிறைந்திருக்கும் அன்பின் சிலிர்ப்பு -இது நமக்கு மட்டும் இயற்கை தந்த அற்புதம் சிரிப்புநீண்ட காலமாச்சுங்க –நாம

குட்டிக் குழந்தைகளின் வகுப்புத் தோழன்!

தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக் கொள்வீர்களா? புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று உற்சாகம். இரண்டு, மூன்று வயதாகும்போதே கடைக்கு அழைத்துவரப்படும் ஒவ்வொரு முறையும் அவளோடு கொஞ்சம் நேரம் செலவிடுவது, பேச்சுக் கொடுப்பது, விளையாடுவது என்றாகியது.

என்னதான் நடக்கிறது வெனிசுவேலாவில்???

வெனிசுவேலா என்கிற தென்னமெரிக்க நாடு குறித்து ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். 1999 வரை, அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் ஆட்சி புரிந்து வந்த வரை மேற்குலக நாடுகளோ ஊடகங்களோ அந்த நாடு குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை, செய்திகளாக நமக்குத் தெரிவிக்க விருப்பப்படவுமில்லை. அதன் பிறகு 1999 இல் மக்களின் பேராதரவுடன் ஹூகோ சாவேசின் ஆட்சி மலர்ந்த பின்னர்தான், வெனிசுவேலாவை அது வரையிலும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கத் துவங்கினர். […]