அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

சாமியார் அசீமானந்தா வாக்குமூலமும், எதிர்வரும் ஆபத்தும் !

(அப்பாவிகளை படுகொலை செய்வதிலும், படுகொலைகளைப் பயன்படுத்தி அறியாமையில் உள்ள மக்களிடையே மத வெறியைப் புகுத்துவதிலும் அதனை அரசியல் லாபமாக அறுவடை செய்வதிலும் பாஜக ருசி கண்டுள்ளது. இந்த நிலையில், மதவெறிக் கருத்தியல் ஏற்படுத்தும் ஆபத்தான விளைவுகளை கேரவன் இதழின் நேர்முகம் வெளிப்படுத்தியுள்ளது. அந்த தகவல்களை தழுவிய கட்டுரை இங்கே)

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல்வேறு வடிவங்களில், இந்திய ஒருமைப்பாட்டை பாதித்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. இப்போது அதன் இன்னொரு உண்மை முகம் சாமியார் அசீமானந்தாவின் வாக்கு மூலங்களின் வழியே நமக்கு தெரிய வந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்க்கும் இவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பும் அதன் அரசியல் முகமான பா.ஜ.க எப்படி இவர்களைக் காப்பாற்ற முற்படுகிறது என்பது போன்ற விபரங்கள் நமக்கு தெரிய வருகின்றன.

Location of Panipat within the state of Haryana

யார் இந்த அசீமானந்தா?

தற்போது அம்பாலா சிறையில் இருக்கும் இவர் மீதான குற்றங்கள்: 18 பிப்ரவரி 2007ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சமஜவுத்தா விரைவு ரெயிலில் வெடிகுண்டு வைத்து 68 உயிர்களை கொன்றது, மே 2007ல் ஹைதராபாதில் உள்ள மெக்கா ம்சூதியில் வெடிகுண்டு வைத்து, 11 உயிர்களை கொன்றது, அக்டோபர் 2007 இல் ஆஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிவைத்து 3 பேர் உயிரை பறித்தது. இந்தக் குற்றாங்களுக்கு பின்னணியாக இருந்ததுடன், அதற்கான சதித்திட்டத்தை வகுத்த கொடிய குற்றவாளி சுவாமி அசீமான்ந்தா.

இவர் தற்போது சிறையில் இருக்கிறார். சட்டப்படியான தண்டனைகள் அவருக்கு கிடைக்கும். ஆனால் விஷயம் அவ்வளவு எளிதல்ல. இந்த பயங்கரவாத சங்கிலித் தொடர் எவ்வாறு செயல்படுகிறது? அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் சிந்தனைக்கு ஆணி வேர் என்ன என்பதுதான் பிரச்சனை. அதைத்தான் கேரவன் இதழ் வெளிக் கொண்டுவந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தொடர்பு:

‘நம்பிக்கையாளர்’ என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில். அசீமான்ந்த் தான் சதித்திட்டம் தீட்டியதை ஒப்புக்கொள்கிறார். அத்துடன், தங்கள் சதிச் செயல்களுக்கு அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் ஸின் ஆசீர்வாதம் இருந்த்து என்கிறார். தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத், கடந்த 2005 ஆம் ஆண்டில், ‘இந்த வன்முறை செயலை கண்டிப்பாக செய்யவெண்டும் என்றும் ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஸின் பெயர் சம்பந்தப்படக் கூடாது’ என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், ’நாங்கள் சம்பந்தப்படாவிட்டாலும், உங்கள் பக்கம் தான் நிற்கிறோம் என்றும், அந்த செயல் கிரிமினல் குற்றம் ஆகாது என்வும், நமது கொள்கையுடன் சம்பந்தப்பட்டதாகத்தான் இந்துக்கள் கருதுவார்கள். இந்தியா முழுவதும் இந்த வன்முறையை தூண்ட ஆர்.எஸ்.எஸ்சின் ஆசீர்வாதம் உண்டு’ என்று மோகன் பகவத் சொன்னதாக அவர் மிக இயல்பான தனது உரையாடலில் வெளிப்படுத்துகிறார். அசீமானந்தின் கூட்டாளியான சுனில் ஜோஷி என்பவன் 2007 டிசம்பரில் சந்தேகச் சூழ்நிலையில் இறந்துவிட்டார். அதே சமயம், தேவையான ஆதரங்கள் இருந்தும் மோகன் பகவத் இதுவரை சுதந்திரமாகவே நடமாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசீமானந்தா எவ்வாறு உருவாக்கப்பட்டார்?

அசீமானந்தாவின் இயற்பெயர் நப குமார் சர்க்கார். அவர் தந்தை ஒரு காந்தி பக்தர். காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற தந்தையின் சொல்லை மீறி ஒரு தீவிர இந்து வெறியனாகத்தான் அசீமானந்த் வளர்ந்தான். சிறு வயதில் ராமகிருஷ்ணா மடத்துடன் இருந்த தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் கிளை ஸ்தாபனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இந்து அல்லாதவர்கள் மீது கடும் வெறுப்பை வளர்த்துக் கொண்டான்.

சுனாமிக் கொடூரத்திலும், வெறுப்பு:

பேட்டியில் அசீமானந்தா குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி அவனின் வெறுப்பை படம் போட்டு காட்டுகிறது. 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் தீவுகளில் இவன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு கிறிஸ்துவப் பெண்மணி தன் குழந்தைக்கு பால் கேட்டு இவன் இருப்பிடம் வந்தாள். அங்கு உள்ள ஆட்கள் பால் கொடுக்க மறுத்துவிட்டனர். மூன்று நாட்களாக குழ்ந்தைக்கு எதுவும் கொடுக்கவில்லை. பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை இறந்து விடும் என்றும் அவள் மன்றாடியபோது, அவர்கள் சுவாமிஜியிடம் கேட்குமாறு கூறிவிட்டனர். அசீமான்ந்த் அவர்கள் செய்த்து சரிதான் என்றும், உனக்கு இஙுகு பால் கொடுக்கமுடியாது என்றும் கூறிவிட்டான். இந்த நிகழ்ச்சியை அவன் பெருமையுடன் குறிப்பிடுகிறான்.

ஆர்.எஸ்.எஸ் கொடுத்த விருது:

இந்த சதித் திட்டங்களை மிகவும் இயல்பான தனது உரையாடலில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் வழக்கம் போல் தனக்கும், அசீமானந்தாவுக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லத் தொடங்கியுள்ளது. ஆனால், இதே அசீமானந்தாவுக்கு டிசம்பர் 2005 இல் கோல்வால்கர் விருது ஆர்.எஸ்.எஸ் ஆல் வழங்கப்பட்டது. இதில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொண்டார்.

முதலில் வன்முறை, பின் பயங்கரவாதம்:

குஜராத்தின் தென்பகுதியில் கிழக்கும் மேற்கும் மஹாராஷ்டிர மாநிலம் எல்லையாக அமைந்துள்ள மிகச்சிறு பிரதேசம் ‘டாங்ஸ்’. அங்கு வாழும் 2 லட்சம் மக்கட் தொகையில் 73சதவீதம் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். 93 சதவீதம் ஆதிவாசியினர். கிறிஸ்துவ பாதிரிமார்கள் இங்கு பணியாற்றிவந்தனர். அசீமான்ந்த்தா இந்த இடத்தை தன் மைய வேலைப்பகுதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவசரகால நிலைக்குப் பின்னர் வங்காளத்திலும் வடகிழக்கு பகுதியிலும் பணியாற்றவே ஆர்.எஸ்.எஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற ஸ்தாபனம் அசீமான்ந்தாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலில் வன்முறை. பின்னால் பயங்கரவாதம். இதுதான் இந்த ஸ்தாபனத்தின் நடைமுறை கோட்பாடு.

ஆதிவாசிகளின் வறுமை நிலையை மாற்றுவதோ அல்லது அவர்களது முன்னேற்றமோ தனது நோக்கம் அல்ல. மாறாக, அவர்கள் யேசுவை வழிபடப் போகிறார்களா அல்லது ராமனை வழிபடப் போகிறார்களா என்பதுதான் கேள்வி என்று அசிமான்ந்தா கூறியுள்ளார்.

பாஜக ஆட்சியின் போது:

டாங்ஸ் பகுதியில் அமைதியின்மை, வன்முறை ஆகிய இரண்டும் ஒரு சேர அசீமான்ந்தா 1998ல் அங்கு சென்ற பின் தலை தூக்க ஆரம்பித்தன. மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு பெரும் தலைவலியாக மாறியது. முதலமைச்சராக இருந்த கேஷுபாய் படேலை கூப்பிட்டு அசீமான்ந்தாவை கட்டுக்குள் கொண்டுவர பணித்தார். ’எங்களது வேலையை நிறுத்தியதும் அல்லாமல், எங்களில் பலரை கைதும் செய்தார்’ என்கிறார் அசீமானந்தா.

நரேந்திர மோடி வெளியில் நின்று கத்திக்கு சாணம் தீட்டிக் கொண்டிருந்த நேரம் அது. ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் அசீமானந்தாவை சந்தித்த மோடி, ”கேஷுபாய் உங்களுக்கு செய்வது எனக்கு தெரியும். சுவாமிஜி, நீங்கள் செய்யும் வேலைக்கு ஈடு இணை கிடையாது. நீங்கள் சரியான வேலையை செய்கிறீர்கள். நான் தான் முதலமைச்சராகப் போகிறேன். வந்த பிறகு உஙகள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். அமைதியாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 2001ல் மோடி முதலமைச்சரான பின்னர், கோத்ரா சம்பவத்தை காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். டாங்ஸ்க்கு வடக்கில் உள்ள பன்ச்சமஹால் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் வேலைக்கு நான் தலைமை தாங்கினேன் என்று அசீமான்ந்த பெருமையுடன் கூறிக் கொள்கிறார். அசீமான்ந்தாவின் பிடியை பலப்படுத்த மோடி, 2002ல் டாங்ஸ்க்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. அமீத் ஷாவை வைத்து மதச்சுதந்திர மசோதாவை இதற்குப் பின்னர் தான் மோடி கொண்டு வருகிறார்.

அதிகாரத்தை எட்டும் குறுக்கு வழி:

டாங்ஸ் இப்பொது ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. டாங்ஸ் பரிசோதனையின் வெற்றி, அசீமான்ந்தாவுக்கு மட்டுமல்ல மோடிக்கும் இந்துத்வா அரசியலுக்கு புது வடிவம் கொடுக்கும் முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தது. இதற்கு பின்னர் தான் சம்ஜுத்தா விரைவு ரயில், ஆஜ்மீர், மேலகான், ஹைதராபாத், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்த்த பயங்கரவாத சதித்திட்டஙகள் தீட்டப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ். அசீமானந்தாவின் இந்து வெறியை பயன்படுத்திக் கொண்டது ஒன்றும் வியப்பில்லை. அதைப்போல மோடி தனது பிற்கால அரசியல் கனவுகளுக்கு அசீமானந்தா போன்ற இந்து மத வெறியர்களையும், ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரத திட்டத்தையும், அதனை மறைத்த அவர்களின் விளம்பர பிம்பத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முழுமையான மொழியாக்கம்:
நம்பிக்கைவாதி 1
நம்பிக்கைவாதி 2
நம்பிக்கைவாதி 3
நம்பிக்கைவாதி 4
நம்பிக்கைவாதி 5
நம்பிக்கைவாதி 6

Related Posts