அரசியல்

திமுகவை கலங்கடித்த 2ஜி ஊழல் உரையாடல் 1: (ஜாபர் சேட் – சண்முகநாதன்)

(ராஜ்யசபை உறுப்பினர் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரின் உடல்நலம் குறித்து பல வதந்திகள் வந்தன. இந்த நிலையில், தில்லியில் சவுக்கு இணையதளத்தின் முயற்சியால் பெறப்பட்ட ஆவணங்களை ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞ்சர் பிரசான்த் பூசன் வெளியிட்டுள்ளார். 2 ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் செயலர் உள்ளிட்டோர் பேசிய ‘டேப்’-ஐ வெளியிட்டுள்ளார். அவற்றில் உள்ளதாக சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சி ஆங்கிலத்தில் கொடுத்துள்ள டிரான்ஸ் கிரிப்ட் – தமிழாக்கம் செய்யப்பட்டு கீழே தரப்படுகிறது)

31.12.2010 அன்று நடந்த உரையாடல் …

அப்போது தமிழக உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் மற்றும் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் இடையே நடந்த உரையாடல்.

(Phone rings)

Jaffar Sait: ஜாபர் ஹியர்

-ஹலோ, சண்முகநாதன்

Jaffar Sait: சார், நான் அவங்ககிட்ட பேசிட்டேன்

Shanmuganathan: சரி அப்றம்

Jaffar Sait: அவர் முதல்ல 60 கோடி ரூபாய் குடுப்பாங்களாம்.அது தயாரா இருக்கு. நான் அதை கலைஞர் தொலைக்காட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு விளம்பரமா குடுத்துடறேன்.

Shanmuganathan: சரி, சரி …

Jaffar Sait: இன்னொரு 20 கோடியை விரைவில் ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆனா உடனடியா செய்ய முடியாது போல

Shanmuganathan: ஓகே… ஓகே

Jaffar Sait: சார் 60 கோடி உறுதினு சொல்லிட்டார். நானும் சரினு சொல்லிட்டேன். அந்த 60 கோடிக்கு முதலில் வேலைகளை பார்க்க சொல்லியிருக்கேன். மிச்சமுள்ள 40 கோடி ரூபாய் … முதல்ல இத முடிக்கலாம், மிச்சமிருக்கும் பணத்துக்கு என்ன செய்வதுனு அப்றம் பார்க்கலாம் னு சொல்லியிருக்கேன்.

Shanmuganathan: ஓகே … ஓகே

Jaffar Sait: அந்த பணத்தை விளம்பரமா அவங்க குடுத்துடுவாங்க சார் (இடையில் இரைச்சல்) … அப்றம் அதை கம்பனிக்கு குடுத்துடுவாங்க.

Shanmuganathan: நாம அப்படி செஞ்சா அது சரியா இருக்காது.

Jaffar Sait: ஆமாமா சார்… நான் சாய்ந்தரம் அவரை பார்க்கும்போது பேசிப்பார்க்குறேன்.

Jaffar Sait: சார், அவர் அப்றம் இன்னொரு விசயம் சொன்னார். நீங்க அனுமதி குடுத்தா, இன்னொரு 40 கோடியை இன்னொருத்தர் மூலமா ஏற்பாடு செய்வதா சொன்னார்.

Shanmuganathan: ok ok ok…

Jaffar Sait: நேர்ல பார்க்கும்போது அவர் யாருணு சொல்றேன் னு சொல்லியிருக்கார், போன்ல வேண்டாமாம். அவர்கிட்ட பேசினப்றம், சாய்ந்தரம் உங்க லைனுக்கு வரேன் சார்.

(அந்த உரையாடல் முடிகிறது)

(இந்த உரையாடலில் சுமார் 100 கோடி பணத்தை, விளம்பரம் என்ற வகையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுப்பது தொடர்பான விவாதங்கள் நடக்கின்றன. சவுக்கு இணையதளம் அணுக முடியாத அளவுக்கு லோடிங் தாமதமாகிறதும் இங்கே குறிப்பிடத் தக்கது.)

மேற்கண்ட முதல் உரையாடலை இங்கிருந்து தரவிரக்கம் செய்யலாம்: https://app.box.com/s/q44vi8jcly0v2d5opr1x

(http://ibnlive.in.com/news/aap-targets-dmk-over-2g-scam-releases-phone-conversation-transcripts/449929-37-64.html)

Related Posts