சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

ஜோக்கர் – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் . . . . . . !

1470114416-9272

ஜோக்கர் இயக்குநர் ராஜீமுருகன், மக்களை  பேசவில்லை. மக்களை நோக்கி பேசி இருக்கிறார். படத்தின் வசனங்கள் அத்தனையும், கை தட்டலாக அறுவடையாகிறது.

படம் துவங்குகிறது, அதிகாலை சாலையோரம் சிறுவர்கள் காலைகடனுக்காக அமர்திருக்கின்றனர். துடைப்பம் … துடைப்பம் என்று சைக்கிளில் துடைப்போம் விற்பவர்கள் வருகின்றனர். அதில் இருந்தே சமூக அவலங்களை துவைக்க ஆரம்பிக்கிறார் இயக்குனர்.

ஜனாதிபதி  மணல் லாரியால் கால் ஒடைந்த போன உசைன் போல்ட்டுக்காக  கலெக்டரிடம் நீதி கேட்கிறார்.!!! அவருடன் இணைகின்றனர் இசையும், பொன்னூஞ்சலும். இருவரும் சட்டக்கல்லூரி மாணவியான நந்தினியையும், டிராபிக் ராமசாமியையும் நினைவு படுத்துகின்றனர்.

அப்போது வரும் வசனம்  கலெக்டர் சார், நீங்க ஒண்ணும் எங்களுக்கு சகாயம் செய்யவேணாம். ‘சகாயம்’ மாதிரி நடந்துகுங்க அது போதும்”. அதன் பின்பு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு வாகன ஓட்டிக்காக  போராடும் ஜனாதிபதி, “எந்த ஸ்டேஷனாலயாவது ஆடிகாரையோ பி.எம்.டபிள்யு காரையோ பிடிச்சி வச்சிருக்கீங்களா ?” என்ற வசனம் அங்கு தூள் கிளப்புகிறது.

என்னங்க சார் உங்க சட்டம் பாடலில் ஜனாதிபதி சாலையை சீரமைக்க கோரி ரோட்டில் நீந்தும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க ” எவ்வித சலனமும் இல்லாமல் வாகன ஓட்டிகள் செல்வதை காட்டுவது செம சாட்டையடி!!!

பள்ளி வளாகத்தில் மூடப்படாத ஆள்குழாய் கிணற்றில் விழும் குழந்தையை பார்க்க மருத்துவ மனையில் செல்லும் ஜோக்கர் டீம்,  குழந்தைக்காக தன்னுடைய பொதுநிதியில் இருந்து ரூ 5  லட்சம் உடனே ஒதுக்குகிறது!!!

அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது, தீர்ப்பில் கல்வியாளர் திறப்பட நான்கு பள்ளிகளை நடத்துபவர், எனவே அவர் மீது தவறில்லை என்ற ரீதியில் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை ஆகி வெளியில் வரும் கல்விமானுக்கு காவல்துறை சால்யூட் அடித்து கார் கதவை திறந்து விடுகிறது. அப்போவென மரத்தடியில் நிற்கிறார் ஜனதிபதி மன்னர் மன்னன்.

உடனடியாக 6 மாதம் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி சட்டம் போடுகிறார். அந்த கல்வியாளரை கொலை செய்ய முயல்கிறார். பின்பு இப்தார் விருந்தில் நிறைவுரை!! ஆற்றும் முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

ப்ளாஷ்பேக் அங்க ஆரம்பம் ஆகிறது, தனியார் தண்ணீர் ஆலையில் வேலை செய்கிறார் மன்னர் மன்னன். தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்ணுடன் ஒரு கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டிற்கு லாரியில் மிலிட்டரிகாரர்  (பவா செல்லதுரை) யுடன் செல்கிறார். அங்கே வழங்கப்படும் மதுபாட்டிலை! அந்த பெண் அவர் அப்பாவிற்காக வாங்க கூட்டத்தில் போராடுகிறார்!!! ஆனால்அந்த பழக்கமில்லாத அவன்  பெண்ணுக்காக போராடி வாங்குகிறான். அப்போது கூட வரும் பெண் ” ஆமா இவங்க அப்பா மார்புசளிக்காக குடிக்கிறார், எம்புருசன் என் மார்புல அணையறதுக்காக குடிக்கிறார்”வசனத்திற்கு திரையரங்கமே ஆர்ப்பரிக்கிறது.

பல்வேறு செயலுக்கு பின் அந்த பெண்ணுக்கு அவனை பிடித்துவிட, தான் வாழ போகும் வீட்டை பார்க்கவருகிறார். அவ்வீட்டில் கழிவறை இல்லாதது கண்டு  கழிவறை கட்டினால் தான் கல்யாணம் என்று சொல்லிவிடுகிறார்.

கழிப்பறை கட்டுவேன் என்ற உறுதியில் கல்யாணம் நடக்கிறது.

நிற்க .,

பின்பு கழிப்பறை கட்டியது எப்படி? அதற்காக நடந்த விழா, அதற்கு குடியரசு தலைவரே வருவது!!  ஏன் இவர் ஜனாதிபதியாக மாறினார் என்பது திரையில் காண்பதே சிறப்பு. இறுதி காட்சியில் நாம யாருக்காக போராடுறமோ அவங்களே நம்மள ஜோக்கரா பார்க்கறாங்க… என்று பொன்னூஞ்சல் பேசும் வசனத்தில் தியேட்டரே மயான அமைதி.

படத்தின் காட்சியமைப்பு,  ஒளிப்பதிவு,  வசனம், கதாபாத்திரங்கள் , ரசிகர்கள் என அனைத்தும் ஒரே நேர்கோட்டில்…

இனி நாம் ஜோக்கராகமல் இருக்க, இந்த ஜோக்கரை பார்ப்போம். பாராட்டுவோம்

– காளிதாஸ்.

Related Posts