அரசியல் கலாச்சாரம் காதல் சமூகம்

LGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .

கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians குறித்தான ஆவணப்படமொன்று இயக்கும் பணியில் உள்ளார். LGBT செயற்பாட்டாளரான மாலினியிடம் LGBT குறித்தும், ‘பிரைட்’ ஊர்வலத்தின் நோக்கங்கள் குறித்தும் சில கேள்விகளை மாற்று இணையதளம் சார்பில் முன் வைத்தோம்.

சென்னையில் LGBT உரிமைகளுக்காக ஊர்வலம் சென்றீர்கள் … நீங்களெல்லாம் யார்?

LGBT என்பது Lesbian Gay BiSexual Transgender என்பதன் சுருக்கம். Gender  ரீதியாகவும் Sexuality ரீதியாகவும் உள்ளவர்களை குறிக்கும் சொல்லாடல். Lesbian, Gay, Bi Sexual, Transgender, Queer People ஆகிய எல்லோரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதற்கு ஆதரவான மக்களும் கலந்து கொண்டார்கள். 25 வகையிலான Gender-களும், 50 வகைக்கும் மேலான Sexuality-யும் இருப்பதாக சொல்லப்படுகிறது. Lesbian, BiSexual, Gay, Transgender, Transmen, Transwomen, Asexual, Poly Sexual & Pan Sexual ஆகியோர் இந்த LGBT ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இந்தியாவில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை சேர்ந்தவர்களும் மேலும் உலகம் முழுவதும் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.

ஒருவரின் பாலியல் தேர்வுகள் தனிப்பட்ட விருப்பங்கள், அதை ஏன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்?

இந்த சமூகம் எங்களை அங்கீகரிப்பது ஒரு புறம் என்றாலும், எங்களை நாங்களே அசிங்கமாக எண்ணாமல் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சுயமரியாதை நடை. எங்களுடைய பால் அடையாளம் இப்படிதான், எங்களின் பால் ஈர்ப்பு இப்படித்தான் என்று இந்த சமூகத்திற்கு வெளிப்படையாக தெரிவிக்கவே இந்நடை.

Straight Couple என்று சொல்லப்படுகிற ஆண்-பெண்ணுக்கு இடையிலான காதல் இங்கே எந்தவிதக் கேள்விகளுமின்றி அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்வதன் மூலமாக இருவருக்குமான காதல், உறவு, அந்த உறவின் மூலமாக பிறக்கப் போகும் குழந்தை போன்றவற்றை பெருமிதமாக அறிவிக்கும்போது, எங்களின் பால் ஈர்ப்பு, பால் தேர்வு போன்றவையும் இயற்கையானதே என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய தேவை இந்த காலகட்டத்தில் உள்ளது.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் இங்கே வெளிப்படையாகவும், புனித்தன்மை வாய்ந்ததாகவும் காட்டப்படும் போது, அதில் ஏதும் அசிங்கமோ அவமானமோ இல்லை என்று சொல்லப்படும் போது, ஓர்பால் ஈர்ப்பாளர்களின் காதலும், அதை வெளிப்படுத்துவதும் இங்கே ஏன் அசிங்கமாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்புவதும் தவிர்க்க இயலாதது.

ஒரு பெண்ணின் பருவ வயது எட்டும் நிகழ்வு இங்கே பட்டிதொட்டியெங்கும் விருந்து வைத்து, ஒலிப்பெருக்கி வைத்து கொண்டாடப்படும் இந்த சமூகத்தில், இரண்டு பெண்களின் காதலையோ இல்லை இரண்டு ஆண்களின் காதலையோ ஏன் இந்த சமூகம் அங்கீகரிக்க மறுக்கிறது.

காதல் என்றால் எல்லாமே காதல் தானே? உங்களுக்கு வந்தால் காதல், எங்களுக்கு வந்தால் காமம் என்கிற பார்வை நிச்சயம் மாற்றப்பட வேண்டும். எங்களுடைய காதலுக்கும் உரிய மரியாதை சமூகத்தால் கொடுக்கப்பட வேண்டும். யாருக்கு வந்தாலும் ரத்தம் தான் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியல்ல என்ற நகைச்சுவையே நினைவுக்கு வருகிறது.

’இயற்கைக்கு விரோதமானவர்கள்’ என்ற விமர்சனத்தைக்  கண்டு அஞ்சவில்லையா?

எது இயற்கை? எது செயற்கை? என்பதை யார் முடிவு செய்கிறார்கள். இப்படி இருப்பதுதான் இயற்கை என்றால் sub-buzz-14371-1467020783-1நீங்கள் ஏன் செல்ஃபோன், டி.வி உள்ளிட்ட போன்ற செயற்கையான விசயங்களையும் வாழ்க்கையில் பயன்படுத்துகிறீர்கள். உடம்பில் ஏற்படுகிற மாற்றமும், உணர்வில் ஏற்படுகிற மாற்றமும் எல்லாமே இயற்கையானதே. மூளை சொல்வதை மனசு செய்கிறது, மனசு சொல்வதை மூளை செய்கிறது. இப்படியான மாற்றங்கள் அனைத்தும் இயற்கையானவையே. இதை செயற்கை என்று வாதிடுவது ஒரு திட்டமிட்ட செயலே.

இதற்கு மருந்துகள் ஏதும் மனநல மருத்துவர்களால் கொடுக்கப்படக்கூடாது என்று கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னமே வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இயற்கையான விஷயம் என்பதை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்றளவும் இதை ஒரு  நோய் என்று கருதி மருந்து கொடுக்கப்படும் வழக்கமிருக்கிறது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்தான் என்ற விமர்சனத்தை எப்படி மறுப்பீர்கள்?

மேற்கத்திய கலாச்சாரமென்றில்லை, தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தில் இவை இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன.

இந்தியாவில் 5000 வருடங்களுக்கு முன்பிருந்த கஜீராஹோ குகைகளில் பெண்ணும்-பெண்ணும், ஆணும்-ஆணும், ஆணும்-விலங்கும் இணைந்திருப்பது மாதிரியான சிற்பங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களின் இதற்கான சான்றுகள் இருக்கிற வாய்ப்பும் உள்ளது.

இந்துத்துவ கட்சிகள் அரசியலில் முன்னுக்கு வந்த காலகட்டத்தில், குறிப்பாக இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்த பிறகு பண்பாட்டைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் வன்முறையாக நிறைய சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஆண் மீசையோடும், மார்பகங்களோடும் இருக்கிற  சிற்பங்களை திருமலை நாயக்கர் மஹாலில் நான் பார்த்திருக்கிறேன். ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் Gender and Sexuality தேர்வுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போக்கு மாற்றப்பட வேண்டும்.

பாலியல் நோய்களுக்கும் – பாலின தேர்வுக்கும் தொடர்புபடுத்துகிறார்களே… அறிவியல் அடிப்படையில் அது உண்மையா?

சரியான புள்ளி விபரங்களுடன் மருத்துவ ரீதியில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அது குறித்த தெளிவான விளக்கம் இப்போதைக்கு என்னிடமில்லை.

பாலின சிறுபான்மை என்ற வரம்பில் யாரெல்லாம் வருவார்கள்? உங்கள் கோரிக்கைகள் என்ன?

பாலின சிறுபான்மை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. ”மாற்றுப் பாலின பால் ஈர்ப்பு மக்கள்” என்கிற சொல்லாடலே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். Lesbian, Gay,  Bi Sexual, Transgeneder, Transmen, Transwomen, Asexual, Poly Sexual, Pan Sexual ஆகியோர் இந்த அடையாளத்திற்குள் அடங்குவர். உங்களுடைய புரிதல் மற்றும் கூற்றின்படி இவர்கள் அனைவரும் பால் ஈர்ப்பு மற்றும் பாலின விசயங்களில் Men and Women லிருந்து வித்தியாசப்பட்டவர்கள்.

எங்களது கோரிக்கைகள்:

  1. இந்திய தண்டனை சட்டத்தின் Section 377 திருத்தப்பட வேண்டும்.
  2. மாற்றுப் பாலின, பால் ஈர்ப்பு மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற வேண்டும்.
  3. மாற்றுப் பாலின, பால் ஈர்ப்பு மக்களின் காதலும் திருமணமும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  4. Transmen & Transwomen போலவே, மூன்றாம் பாலின சட்டம் மற்ற பாலினத்தவரையும் அங்கீகரிக்க வேண்டும்
  5. எங்கள் மீதிருக்கிற அடக்குமுறைகள், வன்முறைகள், ஆணவக் கொலைகள், கட்டாய திருமணங்கள் இவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.

மேலும், சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள், சாதி ஒழிப்பு ஆகியவற்றிற்கான போராட்டங்களையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

Related Posts