சமூகம்

ஜனநாயக தேசத்தில் மனித நேயம் கிடைக்குமா?

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பெருமிதம் பேசும் இந்திய தேசத்தில் மலக்குழுிகளுக்குள்ளே மனிதனை இறக்கி உயிரை துறக்க வைக்கும்  மனித இழிவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உலகத்தின் மிக பெரும்பான்மையான நாடுகளில் இந்த இழிவு ஒழிக்கப்பட்ட பின்பும் இன்னும் இந்திய துணைக்கண்டத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் சாபக்கேடான சாதியமும் இதோடு இணைந்துள்ளது . வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, பெண்களாக இருந்தால் பாலியல் ஒடுக்குமுறை என பலவிதமான ஒடுக்குமுறைகளாலும் தாக்கப்படுபவர்களான தலித் மக்களே பெரும்பாலும் இந்த இழிவுக்கு பலியாகி வருகின்றனர்

போராட்டமும், சட்டமும்:

இம்மக்களை இத்தொழிலில் இருந்து விடுவிப்பதற்காகவும் மனித கழிவுகளை மனிதர்களை வைத்து சுத்தம்sakkadaiyi செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் இடதுசாரிகள், தலித் அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக 1993 ஆம் ஆண்டு மத்திய அரசால் ‘கையால் மலம் அள்ளுவோரை பணிக்கு அமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகளை கட்டுதல் தடுப்பு சட்டம்‘ கொண்டுவரப்பட்டது  செப்டிக் டாங்கு பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும்முறை குறித்து இந்த சட்டத்தில் இடம் பெறவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று செப்டிக் டாங்கு மரணங்கள் நகர்ப்புறங்களில் மாதம் ஒருவர் வீதம் நிகழ்கிறது.  இறப்பவர் தலித் அல்லது பழங்குடியினராக இருந்தால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேன்டும் ஆனால் இதுவரையில் எந்த மாநில அரசும் செய்திட முன்வரவில்லை மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் 1993ல் போடப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கான சட்டத்தையையும் சரியாக பயன்படுத்தாமல் அதனை முடக்கும் வேலையை செய்து வருகின்றனர்

மறுவாழ்வு:

ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்னன் அவர்களால் உருவாக்கப்பட்ட உடல் கழிவு அகற்றுவோர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு குறித்த மசோதா 2010-ன் படி இத்தொழிலில் ஈடுபடும் அடையாளம் காணப்பட்ட 75 இனங்களுக்கு,

  1.  மறுவாழ்வுக்காக வீடு, நிலம், மாற்று அரசு பணி மற்றும் வங்கிகள் மூலமாக சுயதொழில் கடன் போன்றவை தர வேன்டும்.
  2. உலர் கழிப்பறைகள் உடனடியாக இடிக்கப்பட்டு, நவீனகழிப்பறைகள் கட்டப்பட வேன்டும்.
  3. கழிவு மேலான்மை பற்றிய தேசிய கொள்கையை உருவாக்கி கழிவுகளை அகற்றுவது சில சாதிகளின்  வேலை என்ற நிலையை மாற்றி அது ஒரு விஞ்ஞானம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
  4. கழிவுகளை அகற்றுதலை முழுமையாக இயந்திர பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

காக்கைக்கு  தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள் அதுபோல நமது  தேசம் தனது இந்த குஞ்சுகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துமா?

 

– முருகன் கண்ணா

(நெல்லை)

Related Posts