எங்கே சமூக நீதி?

தேசம் முழுமைக்கும் சாதியை மையமாக வைத்து ஒவ்வொரு நொடியும் பல வடிவங்களில் தாக்குதல்களும் உயிர் பலிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது 22 மாநிலங்களில் சாதிய ஆணவக் கொலைகள் நடப்பதாகவும் புள்ளி விவரங்கள் உள்ளது. இது குறித்து நீதிமன்றங்களும் தங்களது வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தே வருகிறது. இது போன்ற சாதிய ஆணவக் கொலைகள் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 88.

சாதி ஆதிக்க சக்திகளால் சாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் கௌசல்யா தம்பதியினர் பட்டபகலில் நடுரோட்டில் வைத்து வெட்டப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேய சங்கர் துடிதுடித்து உயிர் இழந்தார். இதுபோல திருநெல்வேலியில் விஸ்வநாதன் கவிதா சாதி மறுப்பு திருமனம் செய்ததனர். இதற்கு உதவி செய்த விஸ்வநாதனின் கர்ப்பிணி சகோதரி கல்பனா வீடு புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது போன்ற கொலைகள் தமிழகத்தில் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் கல்லகம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் இளையராஜா வயது 26 13342935_867397870056606_7105517246789826581_nடிரைவர் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகள் ஆனந்தி வயது 17 இருவரும் கடந்த 21ஆம் தேதி காதல் திருமனம் செய்துள்ளனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் சிங்கப்பூரில் இருந்த ஆனந்தியின் சகோதரர் அருணை வரவழைத்தனர். அருண் இளையராஜாவை சமாதானமாக பேசுவது போல பேசி அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து மது போதையில் இருந்த இளையராஜாவை அடித்து கொலை செய்துள்ளார்.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதிய கொலைகளை தடுத்திட நடவடிக்கை எடுக்க கோரியும் சாதிய ஆணவ கொலைகளுக்கு தனிசட்டம் இயற்றிட கோரியும் தலித் அமைப்புகளும் இடதுசாரிகளும் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர் மற்றும் சட்டமன்றத்திலும் இது குறித்து கடந்த ஆட்சிகாலத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்னசாமியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் பால்பாரதியும் குரல் எழுப்பினர் ஆனால் ஆளும் அதிமுக அரசோ தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக பதில் அளித்தது.

சமுகநீதி காத்த தமிழகம் என்று மார்தட்டிக் கொள்ளும் திராவிட கட்சிகள் ஆளும் அதிமுகவாக இருக்கட்டும் இல்லை ஆண்ட கட்சியான தற்போது பலமான எதிர்க்கட்சியாக இருக்கிறோம் நாங்கள் மக்களோடு இருக்கிறோம் என்று கூறும் திமுகவாக இருக்கட்டும் இதுவரையில் தமிழகத்தில் நடந்த சாதிய ஆணவக் கொலைகளைக் கண்டித்ததும் இல்லை. அதற்கு தனி சட்டம் வேன்டும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் திமுக அதிமுக இது குறித்து செவிசாய்க்கவில்லை சாதிய சக்திகளின் ஓட்டுக்காக இவர்கள் கள்ள மௌனம் காக்கிறார்களா ? திராவிட கட்சிகளின் ஆட்சி சமுகநீதிக்காகவா ?சாதிய நீதிக்காகவா ?

– முருகன் கண்ணா.

About முத்தழகன்