பிற

புரட்சியின் நாயகன் பகத்சிங் . . . . . . .

Statues_of_Bhagat_Singh,_Rajguru_and_Sukhdevபொதுவாக

மரணங்கள்

புழுவுக்கு உணவாகவோ

தீக்கு தீனியாகவோ

நிகழ்ந்து கொண்டிருக்க..

 

உன் சாவு மட்டுமே

புரட்சிக்கான சூத்திரத்தை

ஏந்தி நின்றது..

 

எப்படி வாழ்வதென்ற

சங்கதியை

யாராரோ விளக்கிக் கொண்டிருக்க…

 

எப்படி சாவதென்ற

வித்தையை

உன்னிடமிருந்தே

உள்வாங்கினோம்..

 

நூறாண்டு கடந்து

வாழ்பவனின் பெயர்

கின்னஸ் பக்கங்களில்

அடக்கம் செய்யப்பட..

 

கால் நூறாண்டு கூட

கடக்காத உன் வாழ்வை

நூறாண்டுக்கு பிறகும்

சரித்திரம்

சத்தம் போட்டு சொல்கிறது..

 

வாசித்தாய்

வாதித்தாய்

எழுதினாய்

கடவுள் மறுத்தாய்

கொலை செய்தாய்

குண்டெறிந்தாய்

காணாத, காண

வேண்டியதான

உலகுக்காய் கனா கண்டாய்

சொல், செயல், வாழ்வென

அனைத்திலும் அந்த கனாவே ஆக்கிரமித்திட

சிறை சென்றாய்

தூக்கேறினாய்

மரணித்தாய்

இவ்வளவும்

இருபத்து மூன்று

வயதுக்குள்..

 

ஜாலியன் வாலாபாக்

மண்ணெடுத்துச் சென்று

உன்னை உயிர்பித்துக்

கொண்டாயென

வரலாறு சொல்கிறது..

 

சரித்திரத்தின்

பக்கங்களிலிருந்து

உன்பெயரெடுத்து

செல்கிறோம்

தேசத்தை உயிர்பிக்க….

 

– எஸ்.ஜான்பால்

 

Related Posts