அரசியல்

மனிதநேயத்தின் உச்சம் : நூற்றாண்டு கண்ட கம்யூனிசம்

இந்தியா விடுதலை பெற்று, மாநிலங்களின் ஒன்றியமாக குடியரசு உருவாகி எழுபதாண்டுகள் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் நாடு பல துறைகளில் முன்னேறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தும் பொய்யாய் பழங்கதையாய் போகும் விதத்தில் மத்திய பிஜேபி அரசு நாட்டை பின்னோக்கி இழுத்துக் கொண்டுள்ளது .

நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்து சிறைக் கொடுமைகளை அனுபவித்த அடக்குமுறைகளை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி நூறாண்டுகள் முடிவடையும் தருவாய் இதுவிடுதலை பெற்ற இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முதலாளித்துவ நாடுகள் உதவ மறுத்த நிலையில் சோசலிச சோவியத்தின் உதவி கிடைக்க முன்முயற்சி எடுத்த கட்சியிது !

பொதுவாக முதலாளித்துவ அரசியலை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிக் கூறும்போது வறட்டுத்தனமாய் பொருளாதாரம் மட்டுமே அறிவார்கள்மனித உணர்வுகள் பற்றி ஏதும் அறியாதவர்கள் மட்டுமல்ல அவைகளை அறிந்து கொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள் என்று கண்மூடித் தனமாய் விமர்சிப்பார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் தான் உண்மையான மனிதநேயத்துடன் விசயங்களைக் காண்பவர்கள் என்பதைக் கடந்த மற்றும் நிகழ்கால வரலாறு கூறுகிறது .சுதந்திர இந்தியா மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்கப் போராடுகிறது.

கூருணர்ச்சி மிக்க பிரச்சனைகளான மொழிவழி மாநிலங்கள் உருவாகதாய்மொழி உரிமைகளை பாதுகாக்கதொட்டால் ஷாக்கடிக்கும் மின்சாரம் போன்ற சாதியம்தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும்அவைகளை வர்க்க பிரச்சனைகளுடன் இணைத்தும் போராடுகின்றனர்.

மனித குலத்தின் இயல்பான உணர்ச்சி காதல்இதை அங்கீகரித்து ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்தவும்ஜனநாயகம் நிலைபெறவும்மதசார்பின்மை வலுப்பெறவும்மக்கள் ஒற்றுமை காக்கவும் தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருகின்றனர்.

எனவே தியாகம் செய்து பாதுகாத்த உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் பாசிச சக்திகள் நாட்டின் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த கவலை கொள்கிறது .

1917சோவியத் புரட்சி தந்த உத்வேகத்தில் சில தோழர்கள் இங்கும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க நினைத்தனர்இந்தியாவை பிரிட்டிஷார் ஆளும் நிலையில் 1920ம் ஆண்டு எம்.என்.ராய் தலைமையில் தோழர்கள் தாஷ்கண்ட் சென்று கட்சி உறுப்பினர்களாகினர்.

தூக்கு மேடையை முத்தமிட்ட பகத்சிங் முதல் இன்றைய வாழும் உதாரணங்களான சங்கரையாநல்லகண்ணு வரை கம்யூனிஸ்ட்கள் தான் கட்சி துவங்கிய காலம் தொட்டு பெஷாவர்மீரட்கான்பூர்மதுரைநெல்லைகோவை என பல சதி வழக்குகளைக் கண்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

நாடு விடுதலை பெற்ற பின்னரும் 1948 முதல் 51 வரை தடை செய்யப் பட்டது . 1952ல் தேர்தல் மூலம் கேரளத்தில் ஆட்சியமைத்ததுகம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாநில ஆட்சியை தேர்தல் மூலம் அடைந்தது உலக வரலாறில் முதல் அனுபவம்அதன் பிறகு மேற்குவங்கம்திரிபுராவிலும் நீண்ட காலம் ஆட்சி நடத்தியதும் நிலச்சீர்திருத்தம் மூலம் விளிம்பு நிலை மக்களை சுய மரியாதையுடன் வாழ வைத்ததும் ஆட்சியை இழந்ததும் நீண்ட வரலாறு.

இவைகளைப் பற்றி சிந்திக்கும் போது மார்க்சியம் குறித்து சமீபத்தில் வாசித்த புத்தகத்தின் சில விசயங்கள் நினைவில் வந்தன.

1769ல் ஜேம்ஸ்வாட் நீராவி இஞ்சினை கண்டுபிடித்தார்ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில் புரட்சிக்கு இது வழிவகுத்தது.

ஆனால் இதன் பலன் உழைப்பாளிக்கு கிடைக்கிறதா என ஆராய்ந்து அந்த பலன் லாபம் எனும் பெயரில் முதலாளிகளிடம் சென்று சேர்கிறது.

இதைக் கண்டறிந்த மார்க்ஸ் மூலதனக் குவியலில் தொழிலாளிகளின் உழைப்பு சக்தியும் அடங்கியுள்ளது என்பதை அறியதொழிலாளர்களின் வேலை நேரம்கூலிபொருள் மதிப்புலாபம் என அனைத்தையும் ஆய்வு செய்தார்இதன் முடிவில் உபரிமதிப்பு தான் லாபத்தின் அடிப்படை எனும் உண்மையையும்உற்பத்தி பொருள்கள் அதை உருவாக்கும் தொழிலாளிக்கு அந்நியம் ஆவதையும் எடுத்துக் கூறினார்.

மார்க்சுக்கு முன்னர் வாழ்ந்த சிந்தனையாளர்கள் இந்த உலகைப் பற்றி பலவகையில் வியாக்யானம் செய்தனர்ஆனால் இவர் அடுத்தடுத்து மாறி வந்த சமூக அமைப்புகளை ஆய்வு செய்தார்சுரண்டலை கூர்மைப்படுத்தும் முதலாளித்துவ சமூக அமைப்பு முற்றாக மாற்றப்பட வேண்டும்.சோசலிச சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

எனவே இந்த சுடும் உண்மைகள் முதலாளிகளாலும் அவர்களை ஆதரிக்கும் அரசுகளாலும் வெறுக்கப்பட்டனபல முறை அவர் நாடு கடத்தப் பட்ட போதும்வறுமையின் உச்சம் தொட்ட போதும் அஞ்சாமல் ஆய்வைத் தொடர்ந்தார்.

இந்த அமைப்பு லாபத்தை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாக்கி உற்பத்தியை வழி நடத்துகிறது.லாபம் அதிகரிக்க உற்பத்தி செலவுகளை குறைக்க முடிவு செய்கிறது.

1.பாதுகாப்பு அம்சங்களை மீறுவது, 2.தொழிலாளிகளை வேலையை விட்டு நீக்குவது, 3.பொருள்களின் தரத்தைக் குறைப்பது எனவும்மக்களில் பலர் பசியால் வாடினாலும் உணவுப் பொருள்களை அழிப்பது,விநியோகம் குறைப்பதுஉற்பத்தியை கட்டுப்படுத்துவது என பல வழிமுறைகளை மேற்கொண்டு லாபம் குவிக்கிறதுஎன முதலாளித்துவ இயங்குமுறை குறித்து இன்னும் தெளிவாகக் கூறுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ‘‘மூலதனம்’ போன்ற இறவாப் புகழ் கொண்ட புத்தகங்களை எழுதினார். 1871ல் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதன் முதல் உதாரணம்’ என தான் கம்யூனிஸ்ட் அகிலத்தில் வர்ணித்த ‘பாரீஸ் கம்யூன் ‘உருவாக்கத்தில் பங்கெடுத்தார்பிரெஞ்ச் இராணுவத்தால் தோற்கடிக்கப் பட்டாலும் அது உலக நாடுகளுக்கு உத்வேகம் தந்தது.

இவைகளின் நீட்சியாகத் தான் ரஷ்ய உழைக்கும் வர்க்கம் உத்வேகம் பெற்றதும், 1917ல் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடந்ததையும் கண்டோம்உலக நாடுகளை மறுபங்கீடு செய்யும் நோக்கில் நடந்த 2ஆம் உலகப் போரையும் வென்றது. 70 ஆண்டுகள் இவ்வாட்சி முறை நீடித்தது.

இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வளர்ந்தால் பிரிட்டிஷாரின் சுரண்டலுக்கு முடிவு கட்டி விடக்கூடும் எனும் அச்சம் அவர்களைக் கவ்வியதுஐரோப்பாவை ஆட்டிப் படைத்த பூதத்தின் கண்கள் இங்கு படக் கூடாது என கவனமாய் இருந்தனர்அடக்குமுறைகளை ஏவினர்.

நாடு விடுதலை அடைந்த பின் இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களை தூக்கி சுமந்த காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டுகளை அடக்குவதன் மூலமே தன் மிரட்சியை வெளிப்படுத்தியது.

இன்றைய மத்திய பிஜேபி ஆட்சியில் கொரோனா ஊரடங்கு காலம் தொழிலாளிகள் வாழ்வை கடுமையாய் வாட்டி வதைப்பதையும்பெரு முதலாளிகளின் லாபவிகிதம் மிகமிக அதிகரிப்பதையும் காணும் போது எப்போதையும் விட மார்க்சின் தேவை அதிகம் என்பதை உணரலாம் .

விழிப்புணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கத்தை முழுமையாய் ஏமாற்ற இயலாது என்பதே வர்க்கப் போரின் அனுபவம்இதை உணர்ந்துள்ள ஆளும் வர்க்கம் தொழிலாளிகள் மத்தியில் சாதிமதம்இனம்மொழிநிறம் என பல்வகை பிரிவினைகளை பதியம் போட்டு வளர்க்கிறதுஇதுவும் பயன் தராத போது தன் லாபவெறி காக்க போலி தேசபக்தியை உருவாக்குகிறதுயுத்த மேகங்களை சூழ வைத்து ஏழைகளை போர் வீரர்களாய் ஒருவரோடு ஒருவர் மோதவைத்து பொழியும் இரத்த மழையை சுவைக்கிறது.

இவைகளை அம்பலப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கும் கூட பலவிதங்களில் அடக்குமுறைகளை சந்திக்கிறதுகாவல்துறை மூலம் வன்முறை ஏவப்படுகிறதுகாஷ்மீரின் யூசுப் தாரிகாமி முதல் யெச்சூரி வரையிலான கட்சித் தலைவர்கள் வழக்குகளை சந்திக்கின்றனர்கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை தத்தம் செய்கின்றனர்.

இவைகளைத் தாண்டி கேரளம் தரும் நம்பிக்கையை நெஞ்சில் ஏந்தி, தியாகிகளின் பெயரால் இன்னும் வேகமாய் சமர் புரிய உறுதி கொள்வோம்! புரட்சியை சாதிக்க முன் நிகழ்வாக, நம் சொந்த வாழ்வில் உறுதி மிக்க கம்யூனிஸ்டாய் வாழ சபதம் செய்வோம்!         

  • செம்மலர். 

Related Posts