அரசியல்

சமூக அவலங்களின் பாதையில் இந்தியா..!

உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. வளர்ச்சியை எங்கள் ஆட்சியில் முழுமையாக காண்பீர்கள் என்றும் வளர்ச்சி மாநிலமான குஜராத்தை போல அனைத்து மாநிலங்களையும் மாற்றிடுவோம். என்று பொய் பிரச்சாரத்தை நாடெங்கும் கூவிய மோடி கடந்த காலங்களில் இந்திய சந்தித்து வரும் பிரச்சனைக்கு வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றார் . இதுவரை இல்லாத நிலைமையை விட மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் மிக மோசமான சமூக அவலங்கள் தொடர்கிறது. அவை பற்றி முக்கியமான அறிக்கைகள் வெளிவந்துள்ளது.

வாக்ப்ரீபவுண்டேஷனின்அறிக்கையின்படி: அதிக அளவிலான அடிமைகள் உள்ள 167 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 1.4% பேர் ஏதாவது ஒருவிதத்தில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். ஏறத்தாழ 1.8 கோடி பேர் கொத்தடிமைகளாக,பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதுடன் இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் அந்த அறிக்கை கூறுகிறது. பல தீவிரவாதக் குழுக்கள் சிறுவர் சிறுமியரைத் தங்களது தீவிர வாதச் செயல்களுக்கும், அரசுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் பயன்படுத்துகின்றன என்பது அந்த அறிக்கையின் தகவல்.

டாக்டர்பினாயக்சென் இந்தியாவில் வறுமையும் சுகாதாரமும் என்ற கட்டுரையில் பின்வருவன பற்றிக் குறிப்பிடுகிறார்: “சமூக நீதியானது மக்களை அதிக அளவில் கொன்று குவிப்பதே’ என்ற பிரகடனத்துடன் உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. தனது ஆராய்ச்சி குழுவினுடைய அறிக்கை வழியாக நியாயம் மற்றும் சுகாதார பிரச்சினைகளை அனைவரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்தி வருகிறது. இந்தியாவின் நிலையை ஆராயும் பொழுது உலக சுகாதார நிறுவனத்தின் குறிப்புகளையும், அறிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்புவியிலே உள்ள அநீதியான, அதிக அநியாயம் நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் அளவினை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, இப்புவியில் நடக்கும் எத்தனையோ மனித துன்பங்களுக்கும், கொடூரங்களுக்கும் காரணம் நாம் என்பது உறுதியாகிறது. சுகாதார பணியில் ஈடுபடும் எங்களுக்கு தண்டேகார்கள், டெண்டுல்கர்கள் மற்றும் அர்ஜூன்சென்குப்தாக்களையும் கடந்து தகவல்களைப் பெற வாய்ப்பு உள்ளது. (இந்தியாவில் வறுமை நிலையை மதிப்பீடு செய்த பொருளாதார வல்லுநர்கள்). இந்தியாவில் ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளில் 47 சதவிகித குழந்தைகள் உண்ண உணவின்றி ஊட்டச்சத்து குறைவால் தவிக்கிறார்கள் என்பதைப் பார்த்து பழக்கப்பட்டுவிட்டது. கடந்து ஆறு வருடங்களில் உலகளவில் ஊட்டச்சத்துக் குறைவால் அதிக அளவிலான குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். ஊட்டச் சத்துக் குறைவால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போரில் இறந்த மனிதர்களை விட அதிகம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

  1. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 26 சத விகிதம் பிறப்பு எடை விகிதத்தை விட மிகக்குறைவான எடையோடு பிறக்கின்றன.
  2. தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்புக் குழுவின் தகவல் படி இந்தியாவில் உள்ள 37 சதவிகித வயது வந்த ஆண்களும் 39 சதவிகித வயது வந்த பெண்களும் உடல் பொருண்மை அட்டவணையில் 18.5-க்கும் குறைவான அளவே கொண்டுள்ளதாக கூறுகிறது.
  3. இன்னும் இருக்கின்ற தகவல்களை பிரித்து ஆய்வு செய்து பார்த்தால், இந்த மோசமான வறுமையில் வாடுபவர்கள் 50சதவிகிதம் பழங்குடி மக்களும், 60 சதவிகிதத்துக்கும் மேலாக தாழ்த்தப் பட்ட மக்களும் ஆவர்.
  4. உலகிலேயே நோயுற்றோர் மற்றும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் நாடாக நமது நாடு திகழ்கிறது. கிட்டத்தட்ட 8.5 மில்லியன் இந்தியர்கள் காசநோயால் துன்புறுகின்றனர். ஒவ்வொர் வருடமும் 87,000 நோயாளிகள் காசநோயை எதிர்த்து போராடிக் கொண்டு உள்ளனர். 3,70,000 நபர்கள் ஒவ்வொரு வருடமும் காசநோயால் இறக்கின்றனர்.
  5. உலகசுகாதாரநிறுவனம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது: இ‌ந்‌தியா‌வி‌ல் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 24 ல‌ட்சமாக உயர்‌ந்து‌ள்ளதாக . இதே ‌நிலை தொட‌ர்‌ந்தா‌ல் வரு‌ம் ஆ‌ண்டுகளில் புற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌யி‌ரிழ‌க்கு‌ம் ஆ‌ண், பெ‌ண்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 6,66,563 பேராக இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அது எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.
  6. டாக்டர்அமித்சென்குப்தாகூறியது: இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான மொத்த செலவினத்தில் 32 சதவீதம் மட்டுமே பொது செலவினத்தின்கீழ் செலவிடப்படுகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள தரவின்படி பொது சுகாதாரத்திற்காக செலவிடும் 190 நாடுகளில் இந்தியா கடைசியில் 16ஆவது நாடாக இருக்கிறது, சியர்ரா லியோன், ஆப்கானி°தான், ஹைத்தி, கினி போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத அடிப்படையிலும் கூட இந்தியா மிகவும் மோசமாகத்தான் செலவு செய்கிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் மட்டுமே இந்தியாவில் செலவிடப்படுகிறது.
  7. ஐக்கியநாடுகள்சபை தெரிவித்துள்ள அறிக்கைகளில் இருந்து சில விஷயங்களை ஊடங்கள் வெளியிட்டனர் ‘இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளனர்’ என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது. உலக நாடுகளில் கடைசியில் 12ஆவது நாடாக இந்தியா இருக்கிறது. மியான்மர், ஹைத்தி, தெற்கு சூடான், டிமோர்-லெஸ்டே மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் இந்தியாவிற்கும் கீழே இருக்கின்றன.
  8. food and agriculture organization நடத்திய ஆய்வில் உலக நாடுகளில் பசியுடன் உள்ள மக்கள் அதிகம் வாழும் முதல் 10 இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இதில் வளர்ச்சி அடைத்த நாடு என அழைக்கப்படும் இந்திய நாடு முதல் இடத்தில் உள்ளது. 193.6 மில்லியன் மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர்.
  9. சர்வதேசஉணவுகொள்கைஆராய்ச்சிநிறுவனம்அறிக்கையில்: 131 நாடுகளில் உலகலாவிய பட்டினிப் பட்டியல் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது, அதில் தற்போது 118 நாடுகள் பட்டியலிடப்பட்டனர். அதில் இந்திய 97 வைத்து இடத்தில் உள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை, 130 கோடிக்கு மேல் உள்ளது. அதனால், வறுமை, பசி, எழுத்தறிவின்மை மற்றும் மோசமான சுகாதார சூழ்நிலை போன்ற பிரச்னைகளில் இருந்து, லட்சக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின், ‘ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு’ என்ற திட்டத்தை, 2000ம் ஆண்டில், இந்திய அரசு கடைபிடிக்கத் துவங்கியது. இந்தத் திட்டத்தின் கால அளவானது, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனாலும், ‘இந்தியாவில், 30 கோடி பேர், இன்னும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர்.

கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்’. இந்தியாவின் வளர்ச்சி சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும் கிடைக்கவில்லை. அதற்க்கு மாறாக வசதி படைத்தவனுக்கு எந்த பாதிப்புமின்றி தொடர்ந்து கிடைக்கின்றது. ஆளும் அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. சமூக மாற்றம் அனைவரிடமும் இருந்து வரவேண்டும், துரோகம் செய்யும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்கவேண்டிய காலம் வெகுதூரமில்லை. மக்களுக்கான நல்ல ஆட்சியை அமைப்போம்!!

Related Posts