சினிமா

வேண்டாம் தனுஷ்…

எவ்வளவு அமைதியாகப் பார்த்தாலும், கடுப்புதான் வருகிறது? மாரி படம்தான். படம் எடுத்த விதமோ, தனுஷ் நடிப்போ இங்கு பிரச்சனை இல்லை. ஆனால் படத்தின் மூலம் ஏற்படும் மாற்றம்தான் இங்கு பிரச்சனை.

ஒரு சில நபர்களின் படங்களுக்கு மட்டும் விளம்பரம் செய்யப்படும் விதங்களும், மீடியா சப்போர்ட், தியேட்டர் என்ற எல்லாமும் கிடைத்துவிடுகிறது. அதேபோல் மாரி படத்திற்கும் மேலே சொன்ன அனைத்தும் எளிதில் கிடைத்துவிட்டது. அமர்க்கள விளம்பரங்கள், பாடல்களைக் கேட்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து திரும்பி வரும் ரசிகனுக்கு கிடைப்பது ஏமாற்றமல்ல. மாற்றம். மாற்றம் சரிதான், ஆனால் அது என்ன வகையானது, யாருக்கு இதனால் பாதிப்பு என்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சம்.

எதிர்மறையான மாற்றத்தை, மோசமான மனிதர்களை உருவாக்கும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்ளை தியேட்டரிலிருந்து வெளியேற்றுகிறது மாரி. குறிப்பாக இளைஞர்களை டார்கெட் வைத்துதான் இதுபோன்ற படங்கள் வெளியாகிறது. அவர்களிடம் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவது நம் தேசத்திற்கு நல்லதல்ல.

Maari Tamil Movie Stills-Images-Dhanush-Kajal Aggarwal-Onlookersஒரு பஞ்ச் டயலாக்,

நாயகி கேட்கிறாள் (நாயகியை வெறும் அழகுப் பதுமையாக மட்டுமே காட்டும் சினிமாவும், அதை மட்டும் விரும்பும் ரசிகனின் மனநிலையும் எப்போது மாறும்?),

நீங்க நல்லவரா, கெட்டவரா என்று…

அதற்கு நாயகன் பதில்…

“அதுல என்ன சந்தேகம், நான் கெட்டவன்தான்.

இன்னொரு இடத்தில் நாயகி கேட்க, அதற்கு நான் ரொம்ப கெட்டவன்” என்று சொல்ல…

நாயகன் நல்லவனாக இருக்கத் தேவையில்லையாம். இப்பல்லாம், இதுமாதிரி டிரண்ட்தான் சினிமாவில் பின்பற்றப்படுகிறது. இது ஒவ்வொருத்தர் மத்தியிலும் நல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை விதைக்கும் விஷமாக மாறுகிறது.

maariகதாநாயகனை காட்டும்போதெல்லாம்,

சரக்கு,

தம்,

வம்பு.

இதுதான் ஒவ்வொரு சேரியிலும் நடைபெறுகிறது என்பதுபோல எடுத்திருப்பதுதான் மிக முக்கிய பிரச்சனை.

சுதந்திரம் வாங்கி கப்பம் கட்டுவது போய், அரசுக்கு வரி கட்டுவது என்று பழக்கமாகிவிட்ட நமக்கு, இந்தப் படத்தில் காட்டுவது போல ரவுடிகளுக்கும், போலீசுக்கும் மாமூல் கொடுத்தால்தான் நமக்கு பிரச்சனை வராது என்ற எண்ணத்தையும் வரவழைக்கிறது.

என்னதான் இது சினிமா, இதில் காட்டுவது போன்று தினசரி வாழ்வில் ஏற்பட்டுவிடுமா? என்ற கேள்வியும் எழலாம்.

அது நிஜ வாழ்வில் தியேட்டரில் இந்தப் படத்தை பார்க்கையிலே தெரிந்துவிட்டது. தியேட்டரில் ரசிகர்கள் நடந்து கொண்டது அதை நிரூபனம் செய்யும் விதத்தில்தான் அமைந்தது.

படம் ஆரம்பிக்க குடித்துவிட்டு வந்த ரசிகர்களின் ரகளையும் ஆரம்பமாகியது. சரி குடிப்பதை தவறென்று எப்படி சொல்ல முடியும், அரசே குடிக்கச் சொல்லி தெருத் தெருவிற்கு சாராயக் கடைகளை திறந்திருக்கிறதே “டாஸ்மாக்” என்ற பெயரில்.

படம் எழுத்திடுகையிலே, இரண்டு கும்பல்களுக்கிடையில் சண்டை ஆரம்பமாகிறது, படத்தில் காண்பிப்பதுபோல, அதைச் சரி செய்ய போலீசுக்கும் கும்பல்களுக்கும் இடையே பலத்த வாக்குவாதம், இறுதியில் சண்டை போட்ட கும்பல்களை பதம் பார்க்க ஆரம்பித்தது.

இதற்குத்தான் இவர்கள் சினிமா எடுத்தார்களோ என்ற எண்ணம் உருவாக ஆரம்பித்தது.

CHzAuZ3VEAAtnPBஇதை விட இந்தப் படத்தில் வர்ற மெயின் வில்லன். போலீஸ் ஆபிசர், அப்பப்பா, நல்ல போலீசா காமிச்சு, இண்டர்வலுக்கு அப்புறம் அவரது உண்மை முகத்தை காமித்து, படத்திற்கான விறுவிறுப்பு குறையாமல் இருக்கிறது.

ஆனால், கவனிக்க வேண்டியதும் இருக்கிறது.

இன்றைக்கு நிஜத்தில் போலீஸ் என்னவெல்லாம் அட்டகாசம் செய்கிறதோ, சட்டத்தை அத்துமீறுகிறதோ, அடாவடிகளைச் செய்கிறதோ அதை வெளிப்படுத்தும் ஒரு கேரக்டராகவே இந்தப் படத்தில் வரும் போலீஸ் கேரக்டரும் வருகிறது.

இறுதி சீன்ல நாயகி நாயகனிடம் பேசுவது,

நல்லவன்னு சொல்லி, கெட்டது பண்றவங்கள விட, கெட்டவன்னு சொல்லி கொஞ்சம் நல்லது பண்ற உங்கள பிடிச்சிருக்கு….

இதுக்கு நாயகன் பதில்,

“நம்ம கேரக்டருக்கு இந்த லவ் எல்லாம் செட் ஆகாது, நாம வேணும்ன்னா இந்த பிரண்ட்சிப்பா இருக்கலாம்” ன்னு…

என்ன சொல்ல வர்றாங்கன்னு ரசிகர்கள் கணிக்க முடியாத அளவுக்கு இந்த மாதிரியான வசனங்கள். லவ் பண்ணலாம்ன்றாங்களா, இல்ல இந்த மாதிரி ஊர சுத்திட்டு, ரவுடித்தனம் பண்ணிட்டு, உருப்படாதவனாவே இருக்கனும்றாங்கலா… ஒன்னும் புரியல…

மொத்தத்தில் எந்த வகையில் பார்த்தாலும், எதிர்மறையான மாற்றத்தை வரவழைக்கிற, மனநிலையை உண்டாக்குகிற விதத்தில்தான் ஒவ்வொரு கேரக்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேல் இந்தப் படத்தை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேண்டாம் தனுஷ்… சினிமா மீது உங்களுக்கு இருக்கும் வேட்கைக்கு இதுபோன்ற உசுப்பிவிடும் படம் வேண்டாம்..

Related Posts