விருதாயுதம் …

மதவாத அரசியல்

ஆட்சி நடத்தும் போது

உரிமை நோக்கிய

கனத்த குரலுக்கு மதிப்பிழக்க..

வன்முறை வார்த்தைகள்

 

கட்டவிழ்த்து பண்முகத்தில்

சிறுபான்மையின்

முகம் கிழித்தெறிய..

 

படைப்பாளியின் உயிர்குடித்து

தன் வேர்களை அகலப்படுத்தும்

அடிப்படைவாதம் மண்ணை ஆள…

 

இரத்தக்கறையை நக்கித் துடைத்து

ஒருமைப்பாட்டை பேசும்

அதிகார நாக்கு சூழன்றெடுக்க..

 

எழுதும் பேனாவும்,

தீட்டும் தூரிகையும் உரிமையிழக்க..

 

அலமாரியை மட்டும்

அலங்கரிக்க கூடுமோ

என்றஞ்சி திருப்பிச் செலுத்த..

 

அதிகாரத்தின் நாற்காலியை உடைக்கும்

ஆயுதமாகிறது

படைப்பாளிக்கு விருது!

 

  • ஓவியம், கவிதை: ராமமூர்த்தி