அறிவியல்

விபத்துகளில்தான் எத்தனை வகை?

ஆலந்தூரை அடுத்த மடுவின்கரை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமையன்று ஆடித் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு கோயில் வளாகத்தில் ராம் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கச்சேரிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி தொடங்கியது. கச்சேரிக்கு முன்னதாக மழை பெய்திருந்ததால் மேடையும் மின்சார ஒயர்களும் ஈரமாக இருந்துள்ளன. அத்துடன் மின் சாரமும் வந்துபோய்க் கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ரகுகுமார் திடீரென்று அலறியவாறு மேடையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ரகு குமார் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். மேடையில் விளக்குகளுக்காக இணைக்கப்பட்டிருந்த ஒயரில் இருந்து ரகுகுமார் பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மயங்கிக் கிடந்த ரகுகுமாரை டாக்டர் பரி சோதித்தபோது, அவர் உயிரிழந் திருப்பது தெரியவந்தது. பெரிய பாளையத்தம்மன் கோயில் நிர் வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பலியான ரகுகுமார் எல்லா பாடகர்களின் குரலிலும் பாடக் கூடியவராம். காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அந்தக் குடும்பத்தின் இழப்பிற்கு என்ன ஈடு செய்துவிட முடியும்?

Related Posts