நிகழ்வுகள்

விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம்.

நோக்கம்

பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

நேரம், தேதி

சூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேரத்திற்கு ஏற்ப).

இடம்

உங்களுக்கு விருப்பமான இடங்களில். வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலகம், கட்டற்ற மென்பொருள் கூட்டங்கள், பள்ளி ஆய்வகங்கள். விருப்பமான பயனர்கள் ஓரிடத்தை தேர்வு செய்து கூடலாம்.

திட்டம் / இலக்குகள்

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்து கொள்ளுதலும். பயனர்கள் தமது விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.

சில வழிகாட்டல்கள்

  1. புதிய கட்டுரையைத் துவக்கலாம்.
  2. குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.
  3. பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்தலாம்.
  4. கட்டுரைகளில் மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைச் சேர்க்கலாம்.
  5. கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்யலாம்.
  6. கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைக்கலாம்.
  7. தாம் முன்பு எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு.. விக்கிப்பீடியா

பங்கு பெற விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை இங்கே பதிவு செய்து கொள்ளலாம் – பங்கு பெற விரும்பும் பயனர்கள்

Related Posts