பிரேம பிரபா

எப்படி சார், இருக்கீங்க? உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சே. உடம்புக்கு ஒண்ணும் இல்லையே..?
வழக்கமான காலை நடைப் பயிற்சியில் சந்தித்த நண்பர் ஒருவரின் அன்பான விசாரிப்பு. நான் நல்லாத்தான் இருக்கேன் சார். கொஞ்ச நாளா உங்களைத் தான் பாக்கவே முடியலை. மக வீட்டுக்கு போயிட்டீங்களோன்னு கூட நினைச்சேன். காலையிலேதான் உங்க மூத்த மகளைப் பாத்தேன். எப்போ டெல்லியில் இருந்து வந்தா? உங்க பேத்தியும் சீக்கிரம் வளந்திட்டாப் போல… வார்த்தைகள் கடகடவென வெகு இயல்பாக உருண்டு வந்தது. என்னால் என்னையே நம்ப முடியவில்லை. ஒரு முறை கையை நன்றாகக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நிச்சயம் நான்தான் அது. மூன்று மாதத்திற்குள் நான் எவ்வளவு மாறிவிட்டேன்! நினைக்கவே மிகவும் மலைப்பாக இருந்தது.
முன்பெல்லாம் என் எதிரில் யார் வந்தாலும் ஒரு ரெடிமேட் கீற்றுப் புன்முறுவலுடன், அவசரமாகக் கிளம்பவேண்டும் என்பதை என் பரிதவிப்பிலேயே காட்டிவிடுவேன். அவரும் என் அவசரத்தைப் புரிந்து கொண்டு `ஹலோ என்பதுடன் விசாரிப்பைச் சுருக்கி என்னைக் கடந்து போய்விடுவார். எங்கள் ஏரியாவில் என்னைப் பற்றி பரவலாக ஒரு கருத்து உண்டு. நல்ல மனுஷந்தான். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். யாருகிட்டேயும் அவ்வ ளவா பழகமாட்டார். ஊர்ப் பொதுக் காரியங்கள் எதிலும் தன்னை அவ் வளவாக ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். எதுக்கே வந்தா ஒரு நாலு வார்த்தை கூட விசாரிக்கமாட்டார்.. ஒரு நாள் காலை நாளிதழில் ஒரு துண்டுப் பிரசுரம் என்னை மிகவும் ஆர்வத்துடன் எட்டிப்பார்த்துக் கொண் டிருந்தது. ஒருவர் வந்து கண்ணைப் பரிசோதித்தால், அவர் கூட வரும் ஒருவருக்கும் பரிசோதனை இலவச மாம். என் மனைவி அடிக்கடி வரும் தலைவலிக்கு பார்வைக் கோளாறு தான் என்று சுயச் சான்றிதழ் கொடுத்து, துணைக்கு என்னையும் அந்த பிரபலமான கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றாள். இலவசம் என்ற பெயரில், எனக்கான அழைப்பிற்குக்காகக் காத்திருந் தேன். வழக்கமான பரிசோத னைக்குப் பிறகு, அங்கிருந்த மருத்து வர் எனக்குக் கண்புரை முற்றிய நிலையில்இருப்பதாகவும், அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் மிகவும் நல்லது என்றும் பரிந்துரைத் தார். குண்டு பல்பு எரிவதைப் பார்த் தால் தீபாவளியைஞாபகப்படுத்தும் மத்தாப்பு அதனால்தான் என்று பிறகு தான் எனக்குத் தெரியவந்தது. என் மனைவிக்கு கோளாறு எதுவு மில்லை. பொது மருத்துவரைப் பார்த்தாலே போதும் என்று கூறி விட்டார்கள். யூடியூப், வலைதளம் என்று கண்புரை சிகிச்சை முறையைப் பற்றி தேட ஆரம்பித்தேன். நாளாக நாளாக என் பார்வையின் கூர்மையும் மங்கிக் கொண்டே வந்தது. சாலையைக் கடப்பதில் அதிக கவனம் தேவையா யிருந்தது. எதிரில் வருபவர்களை இருபதடி தூரத்தில் இருந்துதான் ஓரளவிற்கு தெளிவாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. எந்த சந்தர்ப் பத்திலும் என் பார்வைக் குறையை அடுத்தவர்கள் யாரும் கண்டு பிடிக்கக் கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டேன். யார் என் எதிரில் வந்தாலும், அவர்கள் இருபதடி தூரத்திற்கு அப்பால் வரும் போதே, தயாராக நிரந்தரப் புன்னகை யுடன் மெதுவாக நடப்பேன். எதிர்ப் படும் நபர் எனக்கு ஓரளவிற்கு தெரிந் தவராக இருந்தாலும், வெகு இயல் பாக மிகவும் அன்யோன்யத்துடன் விசாரிக்க ஆரம்பித்தேன். அப்படியும் சிலர், சார், உங்களை நேத்து டிநகர் பஸ் ஸ்டேண்டிலே பாத்தேன். என்னைக் கண்டுக்காமயே போயிட் டீங்களே?. என்ன அவசரமோன்னு நானும் போயிட்டேன் என்பார். அவர் என் இருபதடி கண்காணிப்பு வளை யத்திற்கு அப்பால் இருந்திருக்க வேண்டும். அடுத்த தடவை அவரைச் சந்திக்கும்போதுகூடுதலாக விசாரிப்பு இருக்கும். என் தெளிவான பார்வை இடை வெளிக்கு அப்பால் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மெலிதான தேகம். வேட்டி கட்டியிருந்தார். கையில் ஒரு பை. என் தெளிவான பார்வை வளையத்திற்கு அவர் வந்தவுடன், யோசிக்க ஆரம்பித்தேன். எங்கள் எதிர் வீட்டில் இருக்கும் பெரியவரின் தம்பி. மதுரையில் இருந்து வந்திருக் கிறார். உடனே நான் சுதாரித்துக் கொண்டு பேசுவதற்குள், அவரே முந்திக்கொண்டு என்ன சார், கடைக்கா? என்றார். நானும் உடனே நீங்க தனபாலோட தம்பிதானே? மதுரையிலே கரண்ட் எப்படி இருக்கு? என்றேன். அதை ஏன் சார் கேக்கறீங்க. லாட்டரி டிக்கெட் வாங்கினா கூட லட்ச ரூபாய் விழுந்திடும் போல. கரண்ட் வர நேரத்தை கணிக்கவே முடியாது என்று ஆர்ப்பாட்டமாகச் சிரித்தார். பிறகு இருவரும், தேநீர் அருந்தி, அரசியல், குடும்பம் என்று ஒரு சுற்று போய் வந்தோம். என் அக்கறையான விசாரிப்பில் மனுஷன் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்.
எனக்கு நானே தேர்ந்தெடுத்துக் கொண்ட விசாரிப்பு முறை என் பார்வைக் குறையை மற்றவர்களிடம் மறைப்பதற்குஉதவியதோ இல்லையோ,எனக்குபல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. இருபதடி இடைவேளி பத்தடிக்குச் சுருங்கிய போதுதான் மனதில் பயம் தொற்றிக் கொண்டது. வழக்கமான அறுவைச் சிகிச்சை, தொடர் சொட்டு மருந்தென வீட்டிலேயே ஒரு வாரம் இருந்தேன். மனுஷன் ரொம்பவே மாறிட்டா ரய்யா. எங்கே பாத்தாலும் ஒரு வார்த்தையாவது பேசாமல் போகவே மாட்டார் என்று நற்சான்றிதழ் பெறும் அளவிற்குஇப்போதுநான் மாறியிருந்தேன். (premaprabha.premkumar@gmail.com – 9790895631)

Puthiya Aasiriyan's photo.

Related Posts