அரசியல்

வருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . !

TH-17-Tax-BW_ep_TH_2739894f

தமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா? என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு ஏற்றதாக அமைத்த என்பது கேள்விக்குறிதான்?

இந்த நிதி ஒதுக்கீடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வறுமை நிலைமையை மாற்றப்போகிறதா? என்றால் அது இல்லை. ஒரு நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி கல்வியும் சுகாதார முன்னற்றமே ஆனால் தற்போது கல்வித்துறைக்கு அளிக்கப்பட்ட நிதியை விடப் பலமடங்கு உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கவேண்டும் ஆனால் நிதி ஒதுக்கீடு குறைவுதான், இன்றும் உயரக்கல்வியைத் தொடமுடியாத நடுத்தர வர்க்கம் இங்கு உண்டு. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுதான், அதற்கு தனியார்ப் பள்ளிகள் அதிகரித்துள்ளதே காரணம். அதனை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை அறிவிக்காமல் அரசுப் பள்ளி மேம்மப்படுத்த நிதி அளித்தால் மட்டும் அவை சாத்தியமாகுமா? இல்லை மாணவர்கள் சேர்க்கை தான் அதிகரிக்குமா?

கடந்த ஆண்டுகளில் 1200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமின்றியும், பராமரிப்பின்றியும், தண்ணீர் பற்றாக்குறையுடனும் இயங்குகின்றனர். ஒரே ஒரு மாவட்டத்தில் உள்ள 272 பள்ளிகளில் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கை வெறும் 30% மட்டுமே என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றது. மாநிலங்கள் அளவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி 6% ஆனால் தமிழகத்தில் 2 சதவீத நிதியளித்திருப்பது கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையா காட்டுகிறது?

மேலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள், வேலைவாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை, தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாயக்கடன் தள்ளுபடியும், உரங்களுக்கான மானியம் பற்றியுமில்லை, இயந்திர மானியம் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த வகையில் தான் விவசாயம் வளர்ச்சியை அடையும்? மாநிலங்களின் வேளாண்மைக்காக ஒதுக்கப்படும் நிதி சதவிகிததின் படி இவை மிகக்குறைந்த சதவித்தில் தான் அமைந்துள்ளது, இதைவிடச் சுகாதாரத்திற்கு 0.66 சதவிகிதம் மட்டும்தான்.

ஒதுக்கப்பட்ட நிதிகள் அதற்கான துறைகளில் முழுவதும் சரியான முறையில் சென்றடைகின்றதா என்று கண்காணிப்பு இயக்கமோ! குழுக்களோ எவையும் இதில் இடம் பெயரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைப் பற்றி இயக்கமோ தகவலோ முழுமை பெறாமல் இருக்க அடுத்த ஒரு சில இயக்கங்கள் என்று சிலவற்றை தொடங்கிவைகின்றனர். அவைதான் விஷன் 2023கான தொலைநோக்குத் திட்டம் , இந்தத் திட்டம் 2012 மார்ச் 22 அன்று வெளிடப்ட்டது. இதனை செய்யல்ப்படுத்த சில ஆயிரம்கோடிகள் தான் இவை நிதி ஒதுக்கீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றனர், ஆனால் அவற்றில் பல திட்டங்கள் நான்கு வருடங்கள் கடந்த பொழுதிலும் வளர்ச்சி என்பது பெரிய அளவில்லை என்பதனையும் குறிக்கின்றது , அவர்கள் கூறும் வளர்ச்சிகள் என்பது எவை?
11 ஆண்டுகளில் 11 % வளர்ச்சி அடையும் என்றனர் ஆனால் தற்பொழுது கூட 5 சதவீத வளர்ச்சியைக் கூட அடையவில்லை, அவை மட்டுமின்றி தனிநபர் வருவாய் 2.16 இலட்சமாக உயரும் என்றனர் 1 இலட்சம் கூட அடையாத நிலைமையும் இங்கு உண்டு.

எல்லாருக்குமான வேலைவாய்ப்பு என 2012-ல் 73 இலட்சம் இளைஞர்கள் உள்ள போது அறிவித்தன்ன ஆனால் 2016 ஆம் ஆண்டில் 83.35 இலட்சம் இளைஞர்கள் உள்ள நிலையில் எந்த சதவிகிதத்தில் இதுவரை வேலைவாய்ப்பினை உருவாகியுள்ளனர் ? கல்விக்கு முக்கியத்துவம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கோடிகளுக்கு முன்னிலை அளிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் போது ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும் நடவடிக்கை என்றனர். ஆனால் அதற்கு சென்னை, கடலூர் வெள்ளம் சாட்சியாகும். உலக முதலிட்டாளர் மாநாடுகள் மூலம் வந்த வருவாய்கள் என 23,000ம் கோடிகள் அறிவிப்பு வந்தது ஆனால் கடந்த வருடங்களில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையோ! அரசு நிறுவனம் போன்ற எவையும் அமைக்கப்பட்டதற்குச் சாட்சிகள் ஏதும் இருகின்றதா என்று நாம் எங்காவது பார்த்திருக்கிறோமா? இல்லை அறிக்கைதான் வெளிவந்துள்ளதா? சரி 23,000கோடி நிதி எதற்காகச் செலவு செய்தன அந்த நிதி எங்கே ??

இலவசங்கள் என்ற பெயரில் தரமில்லாத விலையில்லாத பொருள்களை கணக்கில் காட்டாமல் பொதுவாக தமிழகத்தின் கடன்கள் என்று 2 இலட்சத்து 52 ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன்கள் என்றும் இதில் மட்டும்தான் வளர்ச்சி. இன்னும் நிதிப்பற்றாக்குறை 16,000 கோடிகள் என அறிக்கை வெளிவந்துள்ளது.

இவை தமிழக மக்களை வளர்ச்சியை அடைய முயற்சியாகத் தெரியவில்லை. வழக்கம்போல உள்ள மனநிலையுடன் இருக்கும் மக்களுக்கு இது பற்றி தெரியும் போது அவர்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்லுவதற்கு யாருமில்லை நமது குரலுக்கு செவிகள் சாயாதப்பொழுது அனைவரின் குரலும் ஓங்கி ஒலிக்கும்

ரௌத்திரம் பழகு
இரா.பிரேம் குமார்

Related Posts