இதழ்கள் இளைஞர் முழக்கம்

ரோகித்தைக் கொன்ற சாதியம் – ச.நெல்சன் மண்டேலா.

ரோகித் வெமுலா தற்போது நம்மோடு இல்லை. குண்டூர் மாவட்டத்தில் 1989 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30  தேதி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சோர்ந்த ஏழைக்குடும்பத்தில் ரோகித் பிறந்தார். கார்ல் சாகான் போன்ற அறிவியல் எழுத்தாளராக ஆகவேண்டும் என்ற லட்சியக் கனவோடு தான் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்குள் தொழில்நுட்பம்,சமூக படிப்பியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார் ரோகித் வெமுலா. மிகச்சிறந்த லட்சியத்தைக் கொண்டிருந்த வெமுலா கனவோடு நிற்காது அதை நிறைவேற்றும் விதமாக பல்கலைகழக மானிய குழுவின் துசுகு மற்றும் ஊளுஐசு தேர்ச்சி பெற்று மிகச்சிறந்த ஆய்வாளராகவும், பெயர்பெற்ற ஒரு மாணவர் தலைவராகவும் விளங்கினார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நிறுவன ரீதியான பாகுபாட்டின் காரணமாக தற்கொலைக்கு உட்பட்டவர்களில் ரோகித் முதலாவது நபரல்ல. கடந்த 10 ஆண்டு காலத்தில் பல தலித் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இத்தகைய தற்கொலைகள் குறித்த காரண-காரியங்களை ஆராய்ந்த பல்கலைகழக நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குழுக்கள், நெருக்கடியான சூழல்களே தலித் மாணவர்களை தற்கொலை வெள்ளத்தில் தள்ளியிருக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களுமே, வெளிப்படையாக மற்றும் மறைந்திருக்கின்ற சாதிய பாகுபாட்டு வடிவங்களே நிகழ்ந்த தற்கொலைகள் அனைத்திற்கும் முதன்மை காரணங்களாக அடையாளப்படுத்தியிருக்கின்றன. பல்கலைகழக வளாகத்தில் நடந்த தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்த கமிட்டிகள் வெளிக்கொணர்ந்த முடிவுகளிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள விரும்பாத பல்கலை நிர்வாகம், சிபாரிசு செய்த எந்த பரிந்துரைகளையும் செயல்படுத்தவும் இல்லை. இதன் விளைவாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரக்கூடிய மாணவர்களின் அறிவுப்பூர்வ சிந்தனையையும்,தனித்திறன் வளர்ச்சியையும் வளர்த்தெடுப்பதில் பல்கலைகழகம் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆகஸ்ட் 03, 2015 ம் தேதி நள்ளிரவு முதல் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிகழ்வுகள் ஒரு இளம் ஆய்வாளரின் சொந்த வாழ்க்கையை முடித்து வைக்கும் அளவுக்கு நெருக்கடியான பங்கினையாற்றியிருக்கின்றன. முஸாபர் நகரில் நடந்த கலவரம் குறித்த ஆவணப்படத்தை டெல்லி பல்கலைகழகத்தில் திரையிடப்பட்டபோது ஏபிவிபி மாணவர் அமைப்பு வன்முறை கிளர்ச்சியில்; ஈடுபட்டது. ஆதன் எதிர் நிகழ்வாக, ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் அம்பேத்கார் மாணவர் அமைப்பு சார்பில் மாணவர்களை ஒன்றுதிரட்டி திரையிட்டனர். இதன் மூலம், அந்த பல்கலையின் ஏபிவிபி ன் கிளை தலைவர் சுசில்குமார் அம்பேத்கார் மாணவர் அமைப்பின் ஊழியர்களை குண்டர்களாக சித்தரித்து எரிச்சல்மிக்க, விசமத்தனமான செய்தியை முகநூலில் பதிவிட்டார். இப்பதிவிற்கு கண்டனம் தெரிவித்து, பல்கலைகழக பாதுகாப்பு அதிகரிகள் முன்னிலையில் சுசல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அம்பேத்கார் மாணவர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், சுசில் குமார் மன்னிப்பு கேட்டதோடு உடனடியாக வளாகத்திலிருந்தும் வெளியேறினார். அதேநாளில், அம்பேத்கார் மாணவர் அமைப்பால் தாக்கப்பட்டதாக போலித்தனமாகக்கூறி மருத்துவமனையில் சேர்ந்த சுசில்குமார் ஒரு ஜோடிக்கப்பட்ட பொய்ப்புகாரை அம்பேத்கார் மாணவர் அமைப்பின் ஊழியர்கள் 5 பேர் மீது காவல்நிலையத்தில் கொடுக்கிறார். கடுமையான குடல்வால் அழற்சியின் காரணமாகவே சுசில்குமார் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கை மூலம்பின்பு தெரியவந்தது.

சுசில்குமார் கொடுத்த போலி வழக்கைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஒன்று ஆர்.எஸ்.எஸ் ன் வெளிப்படையான செயல்பாட்டாளராக இருக்கக்கூடிய அலோக் பாண்டே தலைமையில் அமைக்கப்பட்டு, விசாரணை செய்த அறிக்கையை ஆகஸ்ட் 11, 2015 ம் தேதி பல்கலை துணைவேந்தரிடம் கொடுக்கப்பட்டது. ஓழங்கு நடவடிக்கைகுழு கொடுத்த முதல் அறிக்கையில், சுசில்குமார் தாக்கப்பட்டதற்கான எந்தவித சரியான ஆதாரமும் இல்லை என்றும், முகநூலில் தவறாக பதிவிட்டமைக்காக சுசில் குமாரையம், சுசில்குமாரின் விடுதிக்குச்சென்று மன்னிப்பு கேட்க வலியுறுத்தியதற்காக அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பின் ஊழயர்களையும் கடுமையாக எச்சரிக்கை செய்தது ஒழுங்கு நடவடிக்கை குழு. இதற்கடுத்தபடியாக, ஒழுங்கு நடவடிக்கை குழு சுசில்குமாரை தவறாக ஏசியதற்கும், கைகலப்பு செய்ததற்கும்,தாக்கப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கக்கூடியதான மற்றொரு அறிக்கையை 2015 ஆகஸ்ட் 31 ம் தேதி துணைவேந்தரிடம் ஒப்படைத்தது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் இரண்டாவது அறிக்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்துதான் ரோ`ஹித்தும் உள்ளிட்ட 5 தலித் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முதல் அறிக்கையும், இரண்டாவது அறிக்கையம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. முதல் அறிக்கை உடற்சார்ந்த தாக்குதலுக்கு எந்தவித முகாந்திரமான அடிப்படையும் இல்லை என்று கூறிய நிலையில் இரண்டாவது அறிக்கை, பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களின் தலையீட்டின் காரணமாக,உடற்ரீதியான தாக்குதலுக்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, உடனடியாக 5 தலித் மாணவர்களையும் முழுமையாக சஸ்பெண்ட செய்திட முடிவெடுத்தது.பல்கலைகழக நிர்வாகம் எடுத்த அராஜகமான முடிவிற்கு எதிராக அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக மாணவர் அமைப்புகள் ஒன்றுதிரண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டதற்குப் பின்பாக துணைவேந்தர் ஆர்.பி.சர்மா இடைநீக்க உத்தரவை திரும்பப்பெற்று, இவ்விசயத்தை புதிய கமிட்டி விசாரிக்கும் என தெரிவித்தார்.ஆனால் தற்போதைய துணைவேந்தர் அப்பாராவ் இந்த விசயத்தை தீவிரமாய் ஆராய்ந்திடுவதற்காக ஒரு நிர்வாக கவுன்சில் துணைக்கமிட்டியை அமைத்தார். துணைக்கமிட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். முன்பு இருந்த துணைவேந்தர் சர்மா வாக்குறுதியளித்தது போல், நிர்வாக கவுன்சில் துணைக்கமிட்டி புதிதாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி மாணவர்களை தற்காத்துக்கொள்வதற்கு வாய்புக்களை உருவாக்கி தந்தவிட்டு, அதற்கு பதிலாக, முரண்பாடு உள்ள இரண்டாவது அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகுழு தலித் மாணவர்கள் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுத்தது. சுஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் யாவரும் மாணவர் பேரவைத் தேர்தலில் பங்கெடுக்க தடைவிதித்து நிர்வாகக்குழு துணைக்கமிட்டி தீர்மானம் கொண்டுவந்தது. இன்னும் கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டதாக கருதக்கூடிய மாணவர்கள் 5 பேரும் குழுவாக பொது இடங்களில் கூடுவதோ அல்லது நிர்வாகம் சார்ந்த கட்டிடத்திற்குள் நுழைவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், 5 மாணவர்களும் தாங்கள் படிக்கின்ற துறைகளுக்கும், நூலகங்களுக்குள்ளும், அது சார்ந்து நடக்கக்கூடிய கருத்தரங்குகளுக்கு செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. புல்கலைகழக நிர்வாக கவுன்சிலே சம்மந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் சமூக புறக்கணிப்பு செய்ய  தெளிவான வகையில் உத்திரவிட்டதை பார்க்கமுடியும். இது நமது அரசியலமைப்புச்சட்டம் புனிதப்படுத்துகிற ஸனநாயக உணர்வுகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் எதிராக இருக்கக்கூடியதாகும். பொதுவெளியில் 5 தலித் மாணவர்களையும் ஒன்றாக பார்க்கப்படக்கூடாது என்ங முடிவை  நிர்வாக கவுன்சில் எந்த அடிப்படையில் எடுத்தது? மேற்கண்ட 5 தலித் மாணவர்களும் பாடத்திற்கு அப்பாற்பட்ட கருத்தரங்குகளுக்கு செல்லக்கூடாது என்ற தடையை எந்த அடிப்படையில் நிhவாகக்குழு வழங்கியது?இவையாவும் தலித் மாணவர்களை அச்சுருத்தக்கூடிய மாசுகளாக சித்தரிக்கக்கூடிய பிற்போக்குத்தனமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சரான பண்டாரு தாத்ரேயா வித்விலக்கான முறையில் கவனம் செலுத்தியுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ஆகஸ்ட் 17,2015 தேதி இந்த பிரச்சினையில் தலையிட வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார் தாத்ரேயா. தத்தாத்ரேயாவின் கடிதம் முரண்பாடாக எழுதப்பட்டுள்ளது. ஹைதராபாத் பல்கலை சாதியவாதிகள்,தீவிரவாதிகள்,தேச விரோதிகள் ஆகியோரின் கூடாரமாக திகழவதாக மாநில அமைச்சரான தாத்ரேயா குறிப்பிட்டுள்ளார்.                தத்தாத்ரேயாவின் கடிதத்தைத பின்தொடாந்து, மனிதவள மேம்பாட்டுத்துறை மூன்று மாதத்திற்குள்ளாக 4 முறைக்கு மேலாக பல்கலைகழக நிர்வாகத்திற்கு அமைச்சர் தாத்ரேயாவால் எழுப்பப்பட்ட பியீரச்சினைகளுக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறது. ஆத்தகைய கடிதங்களில் ஒன்றான 2015 அக்டோபர் 20 ம் தேதியிட்ட கடிதத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தனிப்பட்ட கவனத்தை செலுத்துமாறு பல்கலை நிர்வாகத்திற்குஅறிவுறுத்தியுள்ளது. இது பல்கலைகழகத்தின் சுயசார்பு மீதான வன்முறை என்பது தெளிவாகிறது. ஏந்தவொரு பல்கலைகழகத்தின் வளாகத்தின் உள்ளே நிகழக்கூடிய ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகள் எதுவாகினும், விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது மனிதவள மேம்பாட்டுத்துறை தலையிடுவதும், தாக்கத்தை ஏற்படுத்துவதும் அதனுடைய வேலையல்ல. பாரதிய ஜனதா கட்சியின் மேல்சபை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், அமைச்சர் தாத்ரேயா, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு கொடுத்த அரசியல் அழுத்தத்தினால் நிர்வாக கவுன்சில் 5 தலித் மாணவாகளையுமம் சஸ்பெண்ட செய்ததோடு, அவர்களை சமூகபுறக்கணிப்பு செய்ய உத்திரவட்டதுதான் ரோ`ஹித் வெமுலா மரணத்தில் உச்சகட்டமாகும்.

இராணி மற்றும் மாநில அமைச்சர் பண்டாரு தாத்ரேயா இருவரும் ஏமாற்றுவாதம் செய்கிற ஏற்பாட்டினைத் தொடர்ந்தனர்.  இராணி, ஹைதராபாத் பல்கலை நிர்வாகத்திற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை கொடுத்த அழுத்தத்தை மறுக்கின்ற விதத்தில், விமர்சனத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டார். எந்தவொரு பிரச்சினைக்கும் தொடர்ந்து விளக்கங்கேட்டு நினைவுபடுத்துகிற சாதாரண செயல்முறையைத்தான் ஏபிவிபி தலைவர் சுசிலுகுமார் உடல் ரீதியாக தாக்கப்பட்டதற்கும்  பின்பற்றியதாக இராணி வாதிடுகிறார். மேலும் இப்பிரச்சினை தலித் – தலித் அல்லாதவருக்கான பிரச்சினை அல்ல என்றும் வாதிடுகிறார். ஹைதராபாத் பல்கலை பிரச்சினையில் சாதியப்பாகுபாடுகள் இல்லை என்பதை தெரிவிக்கவே  சிறிய அளவிலான தந்திரத்தை வடிவமைக்கிறார். ஆனால் இந்து சமூகத்திற்குள் இருக்கின்ற தலித் என்கிற முகாந்திரத்தோடுதான் ரோ`ஹித்-ம், இதர மாணவர்களும் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆத்திரமடையக்கூடிய இந்துத்துவா படைகள் ஏன் ரோ`ஹித் வெமுலாவையும் அவரது நண்பர்களையும் குறிவைத்தார்கள்?சாதியப்பாகுபாடுதான்  நடந்த ஒட்டுமொத்த நிகழ்விற்கும் மையமாக அமைந்திருந்தது என்பது மறுக்க முடியாததும், அதுதான் ரோ`ஹித்தை கொலை செய்வது வரை நகர்த்தியிருக்கிறது என்பதே உண்மையாகும்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்வேறு உண்மைகளை தவறாக பிரதிநிதித்துவம் செய்துள்ளார். நிர்வாக கவுன்சிலுக்கு தலைமை வகித்த மூத்த தலித் பேராசிரியர் தான் 5 தலித் மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்கிற முடிவை எடுத்ததாக பத்திரிக்கைகளுக்கு தெரிவித்திருந்தார். இது முழுதும் அப்பட்டமான பொய்யாகும். நிர்வாக கவுன்சிலுக்கு தலைமை வகித்தவர் உயர்சாதி வகுப்பைச் சார்ந்த விபின் ஸ்ரீவத்ஸவா. இப்பிரச்சினையின் தொடக்கத்திலிருந்தே எந்தவொரு தலித் பேராசிரியரும் நிர்வாக கவுன்சிலில் நியமிக்கப்படவில்லை. தலித் ஆசிரியர்கள் மீது பழி சுமத்துகிற முயற்சிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்க கோரி 10 க்கும் மேற்பட்ட தலித் ஆசிரியர்கள், தங்களுடைய நிர்வாக பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்கள்.

ஹைதராபாத் பல்கலைகழகத்தில் கடந்த சமீப காலங்களாக தலித் மாணவர்கள் தற்கொலை செய்திருந்தாலும் கூட, ஒரு தீரமிக்க,பெயர்பெற்ற தலித் மாணவர் அமைப்பின் தலைவர் தற்கொலை செய்து கொள்வது இதுவே முதன்முறை.பல்கலை நிர்வாகமும், மத்திய அரசும் கொடுத்திருந்த அழுத்தங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு தன்னிடமிருந்த ஒரே வாய்ப்பையும் பறிக்கப்பட்டதை ரோ`ஹித்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தகைய வலுவான ஒடுக்குமுறை கட்டமைப்புகள் தான் ஒரு சமூகநீதிக்கான போராளியாக இருந்தபோதிலும், சாதியப்பாகுபாடுகளால் பாதிப்படைந்த நபராக ரோஹித்தை மாற்றியிருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் யதார்த்தமாக இருக்கக்கூடிய சாதியப்பாகுபாடுகளால் இனிமேலும் எந்தவொரு தலித் மாணவரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது.இதுவே இறுதியாய் இருக்கட்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் உருவாக்கி உறுதிபடுத்துவோம்.

-ச.நெல்சன் மண்டேலா

தமிழில் – கே.எம். பாரதி

Related Posts