அரசியல் இலக்கியம்

யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு ஒரு கவிஞனின் அன்பளிப்பு

சமீபத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத்தை  தாழ்த்தப்பட்ட மக்கள்  சந்திக்க வந்த போது, தன்னுடன் கை குலுக்க வேண்டுமென்றால்,சோப்பும், ஷாம்பூவும் போட்டுக் கொண்ட பிறகு தான் பார்க்க , கைகுலுக்க முடியும் என தெரிவித்தார். இது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது, தேசமெங்கும் உள்ள ஜனநாயக முற்போக்கு ,தலித் அமைப்புக்கள் கடும் கண்டனம் எழுப்பின. இந்நிலையில், புது டெல்லியை சேர்ந்த அசாங் வான்கடே (ASANG WANKHEDE) யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கவிதை மூலம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதன் தமிழாக்கம்……

இதோ என்னுடைய அன்பளிப்பு

மனுதர்மம் என்னை அசுத்தமாக்கியது

உன் அசுத்தமான மூளையோ என்னை புழுங்க வைக்கும் சாதியிலும், ஒதுக்கிவைப்பதிலும் முனைப்போடு உள்ளது.

உன்னை சமாதானப்படுத்திட எனக்கு சோப்பும், ஷாம்பூவும் அளிக்கப்பட்டது.

துர்நாற்றம் எடுக்கும் உன் வாயை அதை வைத்து சுத்தம் செய்து கொண்டதுண்டா?

ஏனென்றால் அந்நாக்கு தான் சிறுபான்மையினரை கற்பழிக்கவும், தாக்குதல் நடத்தவும் சொல்லி ஏவி விடுகிறது?

மனுதர்மத்தையும்,வருணாசிரமத்தையும் உபதேசிக்கும் உன்மூளையை அதை வைத்து ஒரு முறையேனும் சலவை செய்ததுண்டா?

உன் அன்பளிப்பால் என்னை அவமானப்படுத்தினாய், என் அன்பளிப்பால் உன் தற்பெருமையை நான் உடைப்பேன், சுக்குநூறாக்குவேன்.

 

பாபாசாகேப்பின் வார்த்தைகள் தான் எனை சுத்தப்படுத்தும் முழுமையான வாக்கியங்கள்,

எனக்கு நீ தரும் சோப்பு, சாதிய ஒடுக்குமுறையையும், என்னை புறந்தள்ளும் உன் மனநோயையும் எதிர்த்து போரிட வைக்கும்.

உன் அபிமானம் எனக்கு தேவையில்லை, உன் வெறுத்தொதுக்குதலே எனக்கு உரமேற்றும்.

எல்லோரையும் ஒருங்கிணைக்கும் கீதத்தை போராட்ட குரல்களின் மூலம் பெறுவோம், எனக்கு அது நன்மதிப்பையும், எல்லோருக்காக போராடும் சுத்ந்திரத்தையும் தரும்.

என் இரண்டு வேளை உணவுக்காக உன் மலத்தை சுமக்கிறேன். அதை தினமும் நான் செய்யாவிட்டால், இந்த குடியரசில் நான் தூக்கமின்றி தவிப்பேன்.

சோப்பும்,ஷாம்பூவும் உன் அறியாமைக்கு உணவுகள் எனக்கல்ல.

 

தேசத்தின் பார்வை உன் பக்கம் திரும்ப உன் கடவுள் இங்கே பல வேலைகளை செய்கிறார்…….

அழுக்காக இல்லாமல் அழகாக இருக்க என்னை சுத்தப்படுத்துகிறார்களாம்………

உற்சாகமூட்ட என்னை ஏதுமறியா அடிமைகளாக்கினாய்:

அவர்களின் மவுனத்தை கலைக்க என் உள்ளுனர்வுகள் உடைந்தால் என்னாகும்?

 

கடவுளே என் வீட்டை வந்து பார்!

அது உனக்கு சூட்டப்படும் ஆடையை விட அழகாக உள்ளது.

மனசாட்சி சுத்தமாக இருந்தால் தான் அது பேசும்.

உன் மனதில் ஆடிக்கொண்டிருக்கும் மனுதர்மத்தை எரித்தால் மட்டுமே அது சிரிக்கும்.

என் மவுனம் உடைபடும் காலம் நெருங்கி விட்டது.

ஆம்….வெளிச்சம் பிறந்து விட்டது.

நீ என் பக்கம் திரும்பும் முன்னர், உனக்கு மீண்டும் என் அன்பளிப்பு……….

அம்பேத்கார்- புத்தர் எனும் இரண்டு சோப்புக்களை நான் உனக்கு தருகிறேன்.

உன் அடிமை புத்திகளை சுத்தம் செய்!

சாதியை விட்டொழித்து, உன் மூளைக்குள் இருக்கும் குப்பை மனுதர்மத்தை சுத்தம் செய்! உன் வேதநூல்களை வெள்ளையாக்கு!

ஒரே பக்கம் இரண்டு சூரியன் இருப்பதில்லை

எங்கள் பக்கம் ஒரு சூரியன் உள்ளது…..

உன்னை சாம்பலாக்க………..

இதை எழுதியவர் புகழ் பெற்ற அம்பேத்கார் – பெரியார் – ஜோதிராவ் புலே படிப்பு வட்டத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்…….என். சிவகுரு.

 

Related Posts