அரசியல் சமூகம்

யோகா மீதான அக்கறை ஏன்? – வணிகமும், அரசியலும் …

11406626_1603246213288331_4397653615916472917_oஉலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4)
உலக வானொலி தினம் (பிப்ரவரி 13)
உலக சமூக நீதி தினம் (பிப்ரவரி 20)
உலக தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)
சர்வதேச சந்தோஷ தினம் (மார்ச் 20)

இந்த வரிசையில் இப்பொழுது சர்வதேச யோகா தினம். இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தினங்கள் 125

ஜனவரி – 1
பிப்ரவரி – 5
மார்ச் – 15
ஏப்ரல் – 15
மே – 10
ஜூன் – 18
ஜூலை – 7
ஆகஸ்ட் – 6
செப்டம்பர் – 9
அக்டோபர் – 15
நவம்பர் – 13
டிசம்பர் – 11

இவற்றில் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்களும் அனுசரிக்கப்படுகின்றன. எனினும் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு நாளை நாம் சர்வதேச தினமாக அனுசரித்து வருகிறோம்.

ஐநாவிற்கு அப்பால் சில தினங்களும் உள்ளன

காதலர் தினம் (மேற்கத்திய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த தினம் உலகமயமாக்கல் கட்டத்தில் இது நமது நாட்டிற்குள்ளும் வந்துவிட்டது)
தந்தையர் தினம் (கூட்டுக் குடும்பம் சிதைந்து போனபின் மேற்கத்திய நாடுகளில் தோன்றிய தினம். இந்தியாவிற்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை)
தாயார் தினம் (கூட்டுக் குடும்பம் சிதைந்து போனபின் மேற்கத்திய நாடுகளில் தோன்றிய தினம். இந்தியாவிற்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை)
தொழிலாளர் தினம் (19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் துவங்கி முதலாளித்துவத்துடன் உலகம் முழுவதும் பரவிவிட்டது)
சகோதரர் தினம் (வியாபார சமூகமான இந்திய பனியாக்கள் தங்கள் பயண வாழ்க்கையில் ஒரு நாளை ஒதுக்கி உறவினர்களை சந்திக்கும் தினமாக இது அனுசரிக்கப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளை கடைப்பிடிக்கிறார்கள்)

இன்னும் சில தினங்களும் உண்டு. ஐநாவால் அறிவிக்கப்பட்ட தினங்களுக்கு அரசுகள் ஆதரவளிக்கும். ஐநாவிற்கு அப்பாற்பட்ட தினங்களுக்கு சமூகக் குழுக்களே முன்முயற்சி எடுத்து நடத்தி வருகின்றன. நடைமுறையில் ஐநா தினங்கள் ஒரு சம்பிரதாய தினங்களாகவே இருந்து வருகின்றன. உதாரணத்திற்கு உலக சந்தோஷ தினம் அல்லது உலக வானிலை தினம் போன்றவை எவ்வளவு தூரத்திற்கு பிரபல்யமாக இருக்கிறது? ஐநாவின் முக்கிய உறுப்பினராக இருக்கும் நமது நாடு இந்த 125 தினங்களை முறைப்படி அனுசரிக்கிறதா? அல்லது சர்வதேச யோகா தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம் செய்து நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இதர 124 தினங்களை நமது அரசு விளம்பரப்படுத்தி பிரதமரே நேரில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உண்டா?

இந்த 125 சர்வதேச தினங்களில் பெரும்பாலானவை நல்வாழ்வு, சுற்றுச் சூழல், சமத்துவப் பண்பாடு, சமூக நல்லிணக்கம், மொழி, தனிமனித உரிமைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவை. நல்வாழ்வு என்ற தலைப்பிற்குள் புற்றுநோயிலிருந்து காசநோய்வரை முக்கியமான நோய்களுக்கான தினங்கள் உண்டு. உடற்பயிற்சி சம்பந்தமாக எந்த தினமும் கிடையாது. யோகாவை நல்வாழ்விற்குள் பொருத்தி சர்வதேச தினமாக்கப்பட்டது. இதற்கும் ஒரு பொருளாதாரப் பின்னணி இருக்கிறது. அது பற்றி பின்னால் வருகிறது. இந்தியாவில் யோகா போன்று வெவ்வேறு நாடுகளில் அவர்களின் தட்பவெட்ப உற்பத்தி சூழலுக்கு தகுந்த உடற்பயிற்சி கலைகள் உள்ளன. இவைகளும் எங்களுக்கான சர்வதேச தினத்தை உண்டாக்குங்கள் என்ற கோரிக்கை எதிர்காலத்தில் வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

யோகா இந்திய சூழ்நிலையில் பரிணமித்த, இந்திய சமூகத்தினரில் மேல்தட்டு வர்க்கத்தினரின் உடற்பயிற்சி கலை. யோகாவிற்கும் பழங்குடியினருக்கும் சம்பந்தமே இருந்ததில்லை, யோகாவிற்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. விவசாயிகள், குயவர்கள, சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழில் செய்பவர்கள், கடல்தொழில் செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் என்ற உழைப்பாளிகளுக்கும் யோகாவிற்கும் சம்பந்தம் இருந்தது கிடையாது. குறிப்பாக உடல் உழைப்பை செய்தால்தான் வாழமுடியும் என்ற நிலை இல்லாதவர்களிடம் தோன்றிய கலை இது. சுருக்கமாக சொன்னால், இந்திய சமூகத்தில் மைனாரிட்டி பிரிவினரின் கலை. நவீனமயமாதலின் விளைவாக நாளுக்கு நாள் உடல் உழைப்பு செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக உடற்பயிற்சி அவசியமான ஒன்றாக வளர்ந்து வருகிறது. இந்த தேவையை இட்டு நிரப்ப சந்தை சக்திகள் ஒருபுறம் போட்டியிடும் பொழுது பழைமைவாதிகள் மைனாரிட்டி பிரிவினரின் இந்தக் கலையையை விரிவடைந்துவரும் இந்த சந்தையிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். நமது சமூகத்தின் உற்பத்தி அமைப்பு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை புறந்தள்ளிவிட்டு இத்தகைய நடவடிக்கைகளை என்னால் பார்க்க இயலவில்லை.

நவீனமயமாகி வரும் இந்திய சமூகத்தில் உடல்உழைப்பின் அவசியமும் அதில் ஈடுபடுபவர்களின் அவசியமும் குறைந்து வரும் பொழுது நோய் தடுப்பு நடவடிக்கையின் அங்கமாக உடற்பயிற்சியின் அவசியம் வளருகிறது என்ற பொதுவான வாக்கியத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டியதிருக்கிறது. ஆம், உடற்பயிற்சி தேவைப்படுபவர்களின் பொருளாதார அடுக்கை பார்க்காமல் நாம் இதை பரிசீலிக்க முடியாது. ஒருபுறம் உடற்பயிற்சி உபகரணங்கள் உற்பத்தியாளர்களின் சநதை விரிவடைந்தும் அவர்களின் வருடாந்தர புரள்வு (Annual Turn over) அதிகரித்து வருவதும் நடந்து வருகிறது. 2012-ல் Fitness Equipmentன் சந்தையானது 6500 கோடியாக இருந்திருக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

datauri-file

இன்னொருபுறம் உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி உபயோகிக்க முடியாதவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. எந்த செலவும் இல்லாமல் செய்ய முடிவது யோகா. எனினும் சந்தை சக்திகள் யோகாவில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்றால் அதிலும் லாபநோக்கம் பெருகி வருவதை காணமுடியும். இலவச யோகா மையங்கள் ஒருபுறம் இருநதாலும் உடற்பயிற்சி மையங்ளுடன் (Gymnasium) போட்டியிடும் அளவிற்கு ஐந்து நட்சத்திர யோகா மையங்களும் உருவாகி வருகின்றன. ஐந்து நட்சத்திர யோகா மையங்கள் இன்று Industry ஆக ஆகிவிட்டது. உலகமயமாக்கல் கட்டத்தில் இவை உலகளாவிய அளவில் விரிந்து பரந்து வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் இது 2700 கோடி (இந்திய மதிப்பில் 1,75,550 கோடி ரூபாய்) அமெரிக்க டாலர்களை புரட்டும் தொழிலாகிவிட்டது. (http://www.huffingtonpost.com/2013/12/16/how-the-yoga-industry-los_n_4441767.html?ir=India&adsSiteOverride=in). சர்வதேச யோகா தினத்தை ஐநா ஏற்றுக் கொண்டதன் பின்னணியை இவ்வளவு புரள்வுத் தொகையுடைய தொழிலாக இது வளர்ந்திருப்பதன் பின்னணியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

யோகாவை வைத்து பாபா ராம்தேவ், ரவிசங்கர் போன்றவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த ராம்தேவ் கதையையும் அவர் சொத்து மதிப்பையும் இங்கே சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ரவிசங்கர் விஷயமும் அனைவருக்கும் தெரிந்த்தே. கார்ப்பரேட் நிறுவனங்களில் பேசும் இவர் ஒரு ஆளுக்கு ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு லட்சம் என்று வசூலிக்கிறார். இவரின் சமீபத்திய சொத்து தகறாறு தனிக்கதை. ஆனால் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் யோகா வியாபாரத்தில் புகழ்பெற்று வருகிறார். அவருடைய நிறுவனமான ஈஷா ஃபௌண்டேஷன் லாப நஷ்டமில்லாமல் இயங்கும் தொண்டு நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் ஆண்டுப்புரள்வு இணையதளத்தில் காணமுடியவில்லை. ஆனால் நன்கொடை வழங்குவதற்கான இணைப்பு உள்ளது. எனினும் இவர்களிடம் 1 லட்சத்திற்கு மேல் யோகா ஆசிரியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டிற்காக செலவிடும் தொகையில் கணிசமானவை இவர்களைப் போன்ற ஐந்து நட்சத்திர யோகா சாமியார்களிடம் சென்று விடுகிறது. இவர்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாகத்தான் அரசின் தற்போதைய நடவடிக்கையை நான் பார்க்கிறேன்.

பெரு முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவன நலனுக்காக தோன்றிய மோடி அரசானது அதற்கான தனது வேலையை Professional ஆக செய்து வருகிறது. இந்த அரசின் Professionalism-தின் அங்கமாக யோகாவை சர்வதேச தினமாக அறிவிக்க வைத்ததை நான் “demonstrating an outstanding marketing skill“ என்கின்ற ரீதியில் பார்க்கிறேன்.

யோகா சந்தையை விரிவுபடுத்தும் முனைப்பில் செயல்படும் நமது பிரதமர் Invoke பண்ணுவது நமது Nationality Sentiment. இவர்கள் நீண்டகாலமாக யோகா பயிற்சியை செய்து அதனை வளர்ப்பதற்காக உழைத்தவர்கள் என்று ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மை இதற்கு மாறாக இருக்கிறது என்பது நடைமுறை கூறுகிறது. 1984ம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு படுகொலையில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் அவர்களுக்கு மனப்பயிற்சி கொடுப்பதற்காகவும் கட்டப்பட்ட மருத்துவமனைகளில் யோகா மையங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை ஆளும் பிஜேபி அரசால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி போபால் விஷவாயு தாக்கப்பட்டவர்களுக்காக இயங்கிவரும் பின்வரும் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தியிருக்கின்றன

போபால் கேஸ் பீடிட் மகிளா ஸ்டேஷனரி கரம்சாரி சங்
போபால் கேஸ் பீடிட் மகிளா புருஷ் கரம்சாரி சங்
போபால் கேஸ் பீடிட் நிராஷ்ரிட் பென்சன் போகி சங்ரஷ் மோர்ச்சா
போபால் குரூப் ஃபார் இன்பர்மேஷன் அண்ட் ஆக்ஸன்
சில்ரன் அகேன்ஸ்ட் டௌ கார்படைடு

2007ம் ஆண்டு இவர்கள் நடத்தி 19 நாள் உக்கிரமான போராட்டத்திற்கு பிறகு பிஜேபி அரசு பணிந்து 6 மருத்துவமனைகளில் இரண்டில் மட்டும் யோகா மையங்கள் உருவாக்குவதாக வாக்குறுதியளித்த்து. ஆனால் 2009ம் ஆண்டு இதுவும் நிறுத்தப்பட்டது

http://www.hindustantimes.com/bhopal/bhopal-gas-tragedy-survivors-decry-denial-of-yoga-therapy-benefit/article1-1361087.aspx

http://www.uniindia.com/news/regional/bhopal-gas-tragedy-victims-want-end-to-denial-of-yoga-therapy/98960.html

ஆக இந்திய கலையாக இவர்கள் செய்யும் விளம்பரம் எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு சந்தையை விரிவாக்குதற்குத்தான். இந்தக் கலைமேல் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் போபால் மக்கள் ஏன் 15 ஆண்டு காலம் போராட வேண்டும். இன்று ஆரியக் கூத்தாடிக் கொண்டிருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே.

Related Posts